இன்று முதல் அமலுக்கு வந்துள்ள மாற்றங்கள்.. சாமானியர்களுக்கு என்ன பாதிப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புத்தாண்டு இனிதே இன்று தொடங்கியுள்ள நிலையில் பல விதிகளில் மாற்றம் ஏற்றபட்டுள்ளது. அதன்படி இன்று முதல் ஜிஎஸ்டி வரியில் இருந்து, கேஸ் சிலிண்டர் விலை, வங்கி லாக்கர் உள்ளிட்ட பல விதிகள் மாறியுள்ளது.

இதனால் பொதுமக்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள்? என்னென்ன மாற்றங்கள் வந்துள்ளது? நீங்கள் அவட்சியம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

2023ல் அவசியம் எடுக்க வேண்டிய 10 தீர்மானங்கள் என்ன.. எதிர்காலத்துக்கு கட்டாயம் தேவை! 2023ல் அவசியம் எடுக்க வேண்டிய 10 தீர்மானங்கள் என்ன.. எதிர்காலத்துக்கு கட்டாயம் தேவை!

சிலிண்டர் விலை அதிகரிப்பு

சிலிண்டர் விலை அதிகரிப்பு

இன்று முதல் 19 கிலோ எடையுள்ள வர்த்தக சிலிண்டர் விலை பெரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது சிலிண்டர் விலை 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் படி சென்னையில் 19 கிலோவுக்கு 1917 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக வர்த்தக சிலிண்டர்களை பயன்படுத்தும் பயனர்கள் பாதிப்புக்குள்ளாகலாம். அதேசமயம் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் எந்த விதமான மாற்றமும் ஏற்படவில்லை.

கார்கள் விலை அதிகரிப்பு

கார்கள் விலை அதிகரிப்பு

ஜனவரி 1 முதல் பல்வேறு வாகனங்களின் விலையானது அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2023 முதல் மாருதி சுசூகி, ஹுண்டாய் மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, ரெனால்ட், கியா மோட்டார்ஸ், எம்ஜி மோட்டார்ஸ் என பல நிறுவனங்களும் தங்களின் வாகனத்தின் விலையை உயர்த்தியுள்ளது.

மொபைல் விதிகள்

மொபைல் விதிகள்

அனைத்து தொலைபேசி உற்பத்தியாளர்களும், அவற்றை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களும் இன்று முதல் அனைத்து IMEI எண்ணை பதிவு செய்வது அவசியமாகிறது. இது பல விதமாக முறைகேடுகளை தவிர்க்க தொலைத் தொடர்புத் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

லாக்கர் விதிகள் மாற்றம்

லாக்கர் விதிகள் மாற்றம்

இந்திய ரிசர்வ் வங்கி 2023ம் ஆண்டு முதல் பல்வேறு புதிய வழிகாட்டுதல்களை அமல்படுத்தியுள்ளது. அதன்படி வங்கி லாக்கரின் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. லாக்கரின் உள்ள பொருட்கள் இழப்பு ஏற்பட்டால் அதற்கு வங்கி பொறுப்பேற்கும், இது தவிர இன்னும் சில வங்கி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி இன்வாய்சிங் வரம்பு

ஜிஎஸ்டி இன்வாய்சிங் வரம்பு

ஜிஎஸ்டி இன்வாய்சிங் வரம்பு ஜனவரி 1 முதல் மாறியுள்ளது. இன் - இன்வாய்ஸ் செய்வதற்கான உச்ச வரம்பை 20 கோடி ரூபாயில் இருந்து 5 கோடி ரூபாயாக குறைத்துள்ளது. இதனால் 5 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்யும் வணிகர்கள் மின்னணு பில்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என கருதப்படுகிறது.

ஹெச் டி எஃப் சி கிரெடிட் கார்டு

ஹெச் டி எஃப் சி கிரெடிட் கார்டு

 

ஹெச் டி எஃப் சி கிரெடிட் கார்டில் ஜனவரி 1 2023ம் ஆண்டு முதல் விதிகளை மாற்றம் செய்துள்ளது. ஹெச் டி எஃப் சி வங்கியின் கிரெடிட் கார்டு பயனர்கள், தங்கள் பில் தொகையை செலுத்தும்போது வழங்கப்படும் ரிவார்டு பாயிண்டுகள் மாறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 Major Changes Effective January 1: check details here

5 Major Changes Effective January 1: check details here
Story first published: Sunday, January 1, 2023, 20:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X