50% ஊழியர்கள் அலுவலகம் திரும்பலாம்.. ஐடி ஊழியர்கள் ரெடியாகிக்கோங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில் உலகின் பல நாடுகளில் உள்ள, பல துறை சார்ந்த நிறுவனங்களும், ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதித்தன.

ஆனால் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், பலரும் மீண்டும் அலுவலகம் திரும்ப தொடங்கியுள்ளனர்.

ஐடி துறையினை பொறுத்தவரையில் கொரோனா காலத்தில், முக்கால்வாசிக்கும் அதிகமான ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிந்து வந்தனர். தற்போது ஐடி நிறுவனங்களும் ஊழியர்களை அலுவலகத்திற்கு திரும்பி வர ஆலோசித்து வருகின்றன.

ஐடி ஊழியர்களுக்கும், ஐடி நிறுவனங்களுக்கும் காத்திருக்கும் அடுத்தடுத்த பிரச்சனைகள்..! ஐடி ஊழியர்களுக்கும், ஐடி நிறுவனங்களுக்கும் காத்திருக்கும் அடுத்தடுத்த பிரச்சனைகள்..!

மீண்டும் அலுவலகம் வரலாம்

மீண்டும் அலுவலகம் வரலாம்

இவர்களை படிப்படியாக அலுவலகத்திற்கு மீண்டும் அழைத்துக் கொள்ளலாம் எனவும் கூறி வருகின்றது. இந்த சமயத்தில் நாஸ்காம் இது குறித்து நடத்திய ஒரு ஆய்வில், கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்கள், நாட்டில் ஜனவரி மாதத்தில் 50% பேராவது மீண்டும் பணிக்கு திரும்பலாம் என்று தெரிவித்துள்ளது.

யார் யாரிடம் ஆய்வு

யார் யாரிடம் ஆய்வு

இது குறித்த ஆய்வினை 150 டெக் நிறுவனங்கள் மற்றும் 6000 ஊழியர்களிடம் நாஸ்காம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வில் வீட்டிலிருந்து பணிபுரிவது, ஊழியர்களுக்கு ஒரு நெகிழ்வு தன்மையை வழங்குவதாகவும், இது வழக்கத்தைவிட வளர்ச்சியை ஊக்குவித்துள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

என்னென்ன பிரச்சனை

என்னென்ன பிரச்சனை

எனினும் இந்த சமயத்தில் டேட்டா பாதுகாப்பு, சைபர் செக்யூரிட்டி உள்ளிட்ட பல பிரச்சனைகளும் இருந்ததாகவும் இந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

கொரோனா தொற்றுநோய் காலத்தில், தொற்றுநோய் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், ஹைப்ரிட் அல்லது மற்றும் தொலைதூரத்திலிருந்து வீட்டிலிருந்து பணிபுரிவது போன்ற பல அம்சங்கள் இருந்தாலும், தற்போது தொற்று நோயின் தாக்கம் குறைந்து தடுப்பூசிகள் மிக வேகமாக போடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைத்து வருகின்றன.

ஐடி நிறுவனங்கள் ஆர்வம்

ஐடி நிறுவனங்கள் ஆர்வம்

குறிப்பாக 4.5 மில்லியன் ஊழியர்கள் பணியாற்றும் ஐடி துறையில், மீண்டும் அலுவலகத்திற்கு அழைப்பதில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்தியாவில் தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் குறைந்தபட்சம், முதல் கட்ட தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். இது மேற்கொண்டு மக்களுக்குப் பாதுகாப்பாக அமையலாம் என்ற நிலை இருந்து வருகிறது.

ஐடி நிறுவனங்கள் திட்டம்

ஐடி நிறுவனங்கள் திட்டம்

இதற்கிடையில் ஐடி நிறுவனங்கள் படிப்படியாக தங்களது அலுவலகங்களை திறக்க திட்டமிட்டு வருகின்றன. இதில் 70% ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கான ஹைபிரிட் பணி மாடலை பரிந்துரை செய்கின்றன. இது ஊழியர்கள் வீட்டிலிருந்தும் பணிபுரியலாம் அலுவலகம் சென்றும் பணிபுரியலாம் என்ற நிலையில், இது ஊழியர்களுக்கு ஒரு நெகிழ்வை கொடுக்கும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

ஊழியர்கள் பணிக்கு திரும்ப ஆர்வம்

ஊழியர்கள் பணிக்கு திரும்ப ஆர்வம்

மேலும் இந்த ஆய்வில் முதன்மையாக ஜூனியர் மற்றும் சீனியர் மேனேஜ்மென்ட் ஊழியர்களுக்கு 25 வயதிற்கு உட்பட்ட மற்றும் 40 வயதிற்கு மேற்பட்ட பணியாளர்கள், பணிக்கு திரும்ப ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்புவதில் மிக உற்சாகமாக இருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த புதிய கலப்பு மாதிரிகளை ஊழியர்கள் விரும்புவதாகவும் இந்த ஆய்வுகள் கூறுகின்றன.

ஊழியர்களின் பதில்

ஊழியர்களின் பதில்

மேலும் 28% ஊழியர்கள் ஒரு மாத காலத்திற்குள் தங்களது பணியிடத்திற்கு திரும்ப விரும்புகின்றனர். இதே 24% பணியாளர்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் தங்களது அலுவலகங்களுக்கு திரும்ப விரும்புகின்றனர்.
அதே சமயம் பதிலளித்தவர்களில் 66% பேர். வீட்டிலிருந்து பணிபுரிந்தது திருப்பதி அளித்ததாகவும் ஆய்வில் கூறியுள்ளனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

இதற்கிடையில் நிறுவனங்கள் ஊழியர்களை பணியிடத்திற்கு திரும்பப் பெறுவதற்கான, மூன்று காரணங்களை நிறுவனங்கள் கூறுகின்றன. ஒன்று நிறுவனங்களின் கலாச்சாரம், தரவு மற்றும் சைபர் செக்யூரிட்டி, முக்கியமான வணிக செயல்பாடுகள் போன்றவற்றை சுட்டிக் காட்டிகின்றன.

ஊழியர்களின் பாதுகாப்பு தான் முக்கியம்

ஊழியர்களின் பாதுகாப்பு தான் முக்கியம்

மேலும் டேட்டா பாதுகாப்பு, பங்குதாரர்களின் விருப்பத்தேர்வுகள் மற்றும் பணியாளர்களின் தடுப்பூசி நிலை ஆகியவை ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்புவதற்கான முக்கிய தீர்மானங்கள் ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு என்பது முக்கிய அம்சமாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

50% of IT employees to return to office by January 2022

IT companies latest updates.. Nasscom report said 50% of IT employees to return to office by January 2022/ நாஸ்காம் நடத்திய ஆய்வில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்கள், நாட்டில் ஜனவரி மாதத்தில் 50% பேராவது மீண்டும் பணிக்கு திரும்பலாம் என்று தெரிவித்துள்ளது.
Story first published: Tuesday, November 2, 2021, 14:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X