உலகளவில் அனைத்து துறைகளிலும் நாளுக்கு நாள் இயந்திரங்கள் மற்றும் டெக்னாலஜியின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், மனிதர்களின் அவசியமும், தேவைகளும் பல இடத்தில் குறைந்து வருகிறது.
இந்நிலையில் உலகப் பொருளாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில், 2025ஆம் ஆண்டுக்குள் உலகளவில் மனிதர்களும், இயந்திரங்களும் சமமாக இயங்கும் அளவிற்கு நிலை மாறும். அப்போது 10ல் 6 பேர் தங்களது வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் என இந்த அறிக்கை கூறுகிறது.
இந்த ஆய்வறிக்கை உலகின் மிகப்பெரிய கண்சல்டிங் சேவை நிறுவனமான PWC சுமார் 19 நாடுகளில் 32,000 ஊழியர்கள் மத்தியில் செய்யப்பட்ட கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு உலகப் பொருளாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த ஆய்வில் பங்குபெற்ற 40 சதவீதம் பேர் அடுத்த 5 வருடத்தில் தங்கள் வேலை இழக்க நேரிடம் எனத் தெரிவித்துள்ளனர், சுமார் 56 சதவீதம் பேர் தற்போது இருக்கும் வேலையில் நீண்ட காலம் சிலர் மட்டுமே பணியாற்ற முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
60 சதவீதம் பேர் அரசு தங்களது வேலையைப் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதேவேளையில் 40 சதவீதம் பேர் கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் நேரத்தில் புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க உணவு வர்த்தகத்தில் இருந்து வெளியேறும் டாடா..!
சுமார் 80 சதவீதம் பேர் புதிய தொழில்நுட்பம் அல்லது திறன்களைத் தெரிந்துகொள்ளவும், புதிய துறையில் பணியாற்றவும் தயார் எனத் தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகளும், நிறுவனங்களும் தற்போது குறிப்பாகக் கொரோனா லாக்டவுனுக்குப் பின்பு இயந்திரங்களையும், செயற்கை நுண்ணறிவு அதிகமாகப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். இந்த மாற்றத்தின் மூலம் சுமார் 8.5 கோடி மக்கள் தங்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் எனவும் இந்த ஆய்வு கூறுகிறது.
இதேவேளையில் புதிய தொழில்நுட்பம், புதிய வர்த்தக முறை ஆகியவை உருவாகியிருக்கும் நிலையில் புதிதாக 9.7 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் நிலையிலும் உள்ளதாக தெரிவித்துள்ளது.