அக்சென்சர்-ல் கலக்கும் 63,000 ரோப்போ.. அச்சத்தில் ஊழியர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று நம்முடைய உலகம் வேகமாக இயங்குகிறது என்றால் அது கண்டிப்பாக மென்பொருள் துறையின் அதிரடி வளர்ச்சியின் காரணமாகத் தான். ஆனால் இன்று மென்பொருள் துறை வேகமாக இயக்க வைக்க மனிதர்களுக்குப் பதிலாகப் பல இடங்களில் ரோபோக்களைப் பயன்படுத்தி வருகிறது உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான அக்சென்சர்.

 

ஒட்டுமொத்த ஐடி துறையிலேயே அதிகளவிலான ரோப்போக்களைப் பணியில் அமர்த்தியுள்ளது அக்சென்சர் நிறுவனம் தான். இந்நிறுவனம் சுமார் 63,000 ரோபோக்களைத் தினசரி பணியில் அமர்த்தியுள்ளது. இதனால் மனித ஊழியர்களுக்கு ஏதேனும் ஆபத்து உள்ளதா..?

அக்சென்சர்-ல் கலக்கும் 63,000 ரோப்போ.. அச்சத்தில் ஊழியர்கள்..!

6 பில்லியன் டாலர் மதிப்பிலான அக்சென்டர் நிறுவனத்தில் சமீபத்தில் நிர்வாக மறுசீரமைப்பு நடத்தியது, இதில் இந்நிறுவனத்தின் ஆப்ரேஷன்ஸ் பிரிவின் உயர் அதிகாரியாக மனிஷ் சர்மா நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்திற்குப் பின் ஊழியர்கள் மத்தியிலும், ஊழியர்கள் செய்யும் பணிகளிலும் பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட்டது என்றால் மிகையில்லை.

அக்சென்டர் நிறுவனத்தில் தற்போது சுமார் 1,40,000 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் இந்நிறுவனத்தில் 63,000 ரோப்போக்கள் பணியாற்றி வருகிறது. இதனால் மனிதர்களின் வேலைவாய்ப்பை இத்தகைய ரோபோக்கள் பரித்துவிடுமா என்ற அச்சம் நிலவிய நிலை மனிஷ் சர்மா இதைப்பற்றி முக்கிய விஷயத்தைப் பேசியுள்ளார்.

எங்களுடைய உலகளாவிய வர்த்தகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தினமும் போர் அடிக்கும் வேலையைச் செய்ய வேண்டாம். இதை நாங்கள் MRPT என்று அழைப்போம். measurable, repeatable, predictable மற்றும் transaction வேலை. இதுப்போன்ற அர்த்தமற்ற வேலையை எங்கள் ஊழியர்கள் செய்ய வேண்டாம். இதை ரோபோ செய்துக்கொள்ளும், எங்கள் ஊழியர்கள் ரோபோவை மேற்பார்வை செய்வார்கள் என மனிஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருப்பது அரசியல் தான்! ரகுராம் ராஜன் விமர்சனம்!

அதேபோல் அக்சென்சர் நிறுவனமும் இதுவரை ஊழியர்களைப் பணியில் இருந்து வெளியேற்ற எவ்விதமான திட்டமும் இல்லை எனவும் மனிஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

 

இதுப்போன்ற ஆட்டோமேஷன் முறையில் எங்கள் நிறுவனத்தில் மட்டும் அல்லாமல் அனைத்து மென்பொருள் நிறுவனங்களிலும் செயல்படுத்த வேண்டும். ஏனெனில் ஊழியர்களின் திறனையும், அறிவையும் வேறு முக்கியமான விஷயங்களில் ஈடுபடுத்த வேண்டும்.

நீங்கள் ஐடி ஊழியராக இருந்தால் ரோபோக்கள் பணியில் அமர்த்துவது சரியா எனச் சொல்லுங்கள்..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

63,000-plus robots at Accenture’s operations

Accenture's operations division has the largest robot workforce in the industry, topping 63,000, the incoming head of the unit. The company, however, does not forecast robots replacing humans.
Story first published: Saturday, February 29, 2020, 15:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X