கர்நாடகாவின் சிறந்த நிறுவனங்கள் எது தெரியுமா? டாப் 10 பட்டியல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் சிறந்த டெக் நகரங்களில் ஒன்றாக பெங்களூர் நகரம் அமைந்துள்ள கர்நாடகா மாநிலத்தில், பல்வேறு டெக் ஜாம்பவான்கள் வணிகம் செய்து வருகின்றனர். தற்போது ஐடி துறையை தவிர பல்வேறு துறைகளையும் மேம்படுத்த கர்நாடக அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.

 

பர்கண்டி பிரைவேட் ஹுருன் இந்தியா 500 பட்டியலில் கர்நாடகாவில் அமைந்துள்ள, 63 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ்

இந்த 63 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது 24.9 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் நாட்டின் முன்னணி நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன. முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 6.5 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதே டைட்டன் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.5 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளது.

விப்ரோ

விப்ரோ

இதே விப்ரோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.1 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் பர்கண்டி பிரைவேட் ஹுருன் இந்தியா 500 பட்டியலில் உள்ள கர்நாடகாவை சேர்ந்த 4 நிறுவனங்களின் மதிப்பு இரட்டிப்பாகியுள்ளது.

நிதிச் சேவை நிறுவனங்கள்
 

நிதிச் சேவை நிறுவனங்கள்

மேற்கண்ட நிறுவனங்களின் பட்டியலில், நிதிச் சேவைகளை வழங்கும் 11 நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. தொடர்ந்து மென் பொருள் & சேவைகள், சில்லறை விற்பனையில் முறையே 10 மற்றும் 8 பேர் நுழைந்துள்ளனர்.

நிறுவனங்களின் சராசரி வயது

நிறுவனங்களின் சராசரி வயது

கர்நாடகாவை சேர்ந்த நிறுவனங்களின் மொத்த விற்பனை 5.7 லட்சம் கோடி ரூபாயாக குவிந்துள்ளது. இது கடந்த ஆண்டினை விட 10% அதிகமாகும். இந்த பட்டியலில் கர்நாடாகாவைச் சேர்ந்த நிறுவனங்களின் சராசரி வயது 17 ஆண்டுகளாகும்.

சராசரி ஊழியர்கள்

சராசரி ஊழியர்கள்

2022 பர்கண்டி பிரைவேட் ஹுருன் இந்தியா 500 நிறுவனங்களில் கர்நாடகாவை சேர்ந்த நிறுவனங்களில், மொத்தம் 12.4 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். சராசரியாக 19,930 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

எந்தெந்த நிறுவனங்கள்?

எந்தெந்த நிறுவனங்கள்?

பர்கண்டி பிரைவேட் ஹுருன் இந்தியா 500 பட்டியல் இரண்டாவது ஆண்டாக வெளியிடப்படும் பட்டியல் ஆகும். இந்த பட்டியலில் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் சந்தை மதிப்பின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளன. பட்டியலிடப்படாத நிறுவனங்களும் சந்தை மதிப்பின் அடிப்படையில் உள்ள நிறுவனங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. ''

பொதுத்துறை  & வெளி நாட்டு நிறுவனங்கள்

பொதுத்துறை & வெளி நாட்டு நிறுவனங்கள்


இந்தியாவினை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனங்கள் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளி நாட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களின் துணை நிறுவனங்களும் பட்டியலிடப்படவில்லை.

இந்த பட்டியலுக்குள் வர கட் ஆஃப் தேதியாக அக்டோபர் 30 நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஸ்டார்ட் அப் பட்டியல்

ஸ்டார்ட் அப் பட்டியல்

ஹுருன் இந்தியாவின் எம்டி மற்றும் தலைமை ஆராய்ச்சியாளரான அனஸ் ரஹ்மான் ஜுனைட், 2022 பர்கண்டி பிரைவேட் ஹுருன் இந்தியா 500 பட்டியலில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவங்களின் பட்டியலில் ஜெரோதா, பைஜூஸ், ரோசர்பே, ஸ்விக்கி, கிரெட், மீஷோ, ஓலா எலக்ட்ரிக் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும்.

ஸ்டார்ட் அப்களின் தாயகம்

ஸ்டார்ட் அப்களின் தாயகம்

இதே ஐடி நிறுவனங்களில் இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் மைண்ட் ட்ரீ போன்ற ஐடி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இது அதிகளவில் முதலீடுகளை ஈர்க்கும் விருப்பமான பட்டியலில் இந்த நிறுவனங்கள் உள்ளன.

இன்றைய காலகட்டத்தில் உலகின் மிக வலுவான ஸ்டார்ட் அப் சுற்று சூழல் பட்டியலில் அமைந்துள்ள ஒரு நிறுவனமாகும். இது தொழில் நுட்ப நிறுவனம் மற்றும் நிதி நிறுவனங்களின் ஸ்டார்ட் அப் பட்டியலில் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

63 companies in the 2022 Burgundy Private Harun India 500 are based in karnataka

Karnataka has 63 companies in the Burgundy Pvt Hurun India 500 list.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X