இன்ஜினியர் முதல் ஆசிரியர் வரை கண்ணீர்.. 66 லட்சம் பேரின் வேலை பறிபோனது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய வேலைவாய்ப்பு சந்தை கடந்த சில வருடங்களாகவே நாட்டின் பொருளாதார வளர்ச்சி மோசமாக இருந்த காரணத்தினால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாமல் தவித்து வந்தது. இதனால் புதிய பட்டதாரி மாணவர்களுக்குச் சில குறிப்பிட்ட துறையைத் தவிற மற்ற துறைகளில் வேலைவாய்ப்புக் கிடைக்காமல் இளைஞர்கள் தவித்து வந்தனர்.

 

இந்த நிலையில் தான் கொரோனா பாதிப்பு இந்தியாவில் உச்சத்தைத் தொட்டு இந்திய வேலைவாய்ப்பு சந்தையை மேலும் மோசமாக்கி மிகப்பெரிய பாதிப்பில் தள்ளியுள்ளது. கொரோனா பாதிப்பால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வர்த்தகச் சந்தை பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் மார்ச், ஏப்ரல் மாத காலத்தில் வகைப்படுத்தப்படாத துறை சார்ந்த ஊழியர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.

ஆனால் மே மாதத்திற்குப் பின் வெயிட் காலர் ஜாப்ஸ் எனப்படும் professional jobs பிரிவில் இருக்கும் இன்ஜினியர்கள், சாப்ட்வேர் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள் என நாட்டின் பொருளாதாரத்திற்கும் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பங்கு வகிக்கும் நிரந்தர மற்றும் நிலையான சம்பளத்தில் இருக்கும் பட்டதாரிகள் அதிகளவிலான வேலைவாய்ப்பை இழந்து வருகிறனர்.

IT கம்பெனிகளின் புதிய ஐடியா! முடிவு ஊழியர்கள் கையில்! விரைவில் இந்தியாவுக்கும் வரலாம்!

66 லட்சம் பேர்

66 லட்சம் பேர்

இந்தியாவில் மே மற்றும் ஆகஸ்ட் மாத காலத்தில் மட்டும் professional jobs பிரிவில் இருக்கும் 66 லட்சம் ஊழியர்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர். இந்த வேலைவாய்ப்பு இழப்பு கடந்த 4 வருடத்தில் இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்பட்ட வளர்ச்சியை மொத்தமாகக் காலி செய்துள்ளது.

இதேகாலகட்டத்தில் 50 லட்சம் தொழிற்சாலை ஊழியர்களும் தங்களது வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

CMIE அமைப்பு

CMIE அமைப்பு

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் நாட்டின் வேலைவாய்ப்பு சந்தை குறித்தும், 4 மாதங்களுக்கு ஒருமுறை Consumer Pyramids Household ஆய்வறிக்கையை வெளியிடும் CMIE அமைப்பின் அறிக்கை இந்த லாக்டவுன் காலத்தில் மிக முக்கியமான தரவுகளாக விளங்குகிறது.

வெயிட் காலர் ஜாப்ஸ்
 

வெயிட் காலர் ஜாப்ஸ்

சமீபத்தில் CMIE அமைப்பு வெளியிட்டுள்ள Consumer Pyramids Household ஆய்வறிக்கையில் இந்தக் கொரோனா காலத்தில் இந்தியாவில் கூலி வேலை (வகைப்படுத்தப்படாத துறை - Unorganized sector) செய்யும் மக்களைக் காட்டிலும் நிரந்தரச் சம்பளம், நிலையான வேலைவாய்ப்பு பெறும் (வகைப்படுத்தப்பட்ட துறை - organized sector) மாத சம்பளம் பெறும் ஊழியர்கள் தான் அதிகளவிலான வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

அதிலும் மிக முக்கியமாகப் பட்டதாரிகளும், அதிகத் திறன் கொண்டவர்கள் மட்டுமே பணியாற்றும் வெயிட் காலர் ஜாப்ஸ் பிரிவில் அதிகளவிலானோர் வேலையை இழந்துள்ளனர் என CMIE அமைப்பின் ஆய்வறிக்கை கூறுகிறது.

முக்கியப் பணிகள்

முக்கியப் பணிகள்

தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றி வந்த சாப்ட்வேர் இன்ஜினியர்கள், ஆசிரியர்கள், கணக்காளர்கள், ஆய்வாளர்கள், இன்னும் பல பிரிவு ஊழியர்கள் தான் வெயிட் காலர் ஜாப்ஸ் பிரிவில் அடங்குவார்கள். இப்பிரிவு ஊழியர்கள் தான் நாட்டின் வர்த்தகச் சந்தை மேம்படவும், தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருக்கவும் முக்கியக் காரணமாக இருக்கிறார்கள்.

1.2 கோடி பணிகள்

1.2 கோடி பணிகள்

2019ஆம் ஆண்டில் மே - ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் வெயிட் காலர் ஜாப்ஸ் பிரிவில் அதிகப்படியாக 1.88 கோடி பேர் பணியாற்றி வந்த நிலையில், 2020 மே - ஆகஸ்ட் மாதத்தில் இந்த எண்ணிக்கை 1.22 கோடியாகக் குறைந்துள்ளது.

2016ஆம் ஆண்டில் இருந்து இந்த 1.22 கோடி எண்ணிக்கை தான் மிகவும் குறைந்த அளவீடு என CMIE அமைப்பு தனது ஆய்வறிக்கையில் பதிவு செய்துள்ளது.

26 சதவீதம் சரிவு

26 சதவீதம் சரிவு

இதே காலகட்டத்தில் இந்தியாவில் தொழிற்துறை பிரிவில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத வகையில் சுமார் 26 சதவீதம் சரிந்து 50 லட்சம் பேர் வேலையை இழந்துள்ளனர்.

2020 மே - ஆகஸ்ட் மாதத்தில் இப்பிரிவில் வேலைவாய்ப்பை இழந்த 50 லட்சம் எண்ணிக்கையில் பெரும் பகுதி சிறு, குறு தொழிற்சாலையில் ஏற்பட்ட வர்த்தகம் மற்றும் வருவாய் சரிவின் மூலம் வேலைவாய்ப்பை இழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நிலை

மக்கள் நிலை

பெரு நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரையில் தற்போது வேலைவாய்ப்புக்கு உத்தரவு இல்லாமல் இருக்கும் வேளையில் மக்கள் மத்தியில் வேலைவாய்ப்பு குறித்துப் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

ஏற்கனவே மக்களைக் கொரோனா அச்சம் வாட்டி வதைக்கும் வேளையில், தற்போது வேலைவாய்ப்பு குறித்த அச்சம் குடும்பங்களை ஆட்டிப்படைக்கிறது.

இந்த லாக்டவுன் காலத்தில் நீங்கள் வேலைவாய்ப்பை இழந்திருந்தால், உங்கள் கருத்தை கமெண்ட் பதிவிடும் இடத்தில் பதிவிடுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

66 lakhs professional employees lost their jobs in India

66 lakhs professional employees lost their jobs in India
Story first published: Thursday, September 17, 2020, 17:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X