8 நகரங்களில் லட்சக்கணக்கில் விற்பனையாகாத வீடுகள்.. பட்டியலில் சென்னை உண்டா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார மந்தநிலை தொடர்ந்து வருவதை அடுத்து இந்தியாவில் ரியல் எஸ்டேட் தொழில் மந்தமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக இந்தியாவில் உள்ள 8 முக்கிய நகரங்களில் 7.85 லட்சம் கட்டப்பட்ட வீடுகள் விற்பனை ஆகாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது விற்பனை ஆகாத வீடுகளை விற்பனை செய்ய குறைந்தது 30 மாதங்கள் முதல் அதிகபட்சம் 60 மாதங்கள் வரை ஆகும் என ரியல் எஸ்டேட் அதிபர்கள் கூறி வருகின்றனர்.

விற்பனையாகாத வீடுகள்

விற்பனையாகாத வீடுகள்

வீடுகள் விற்பனை நிறுவனமான PropTiger.com என்ற இணையதளத்தின் தகவலின்படி இந்தியாவில் உள்ள 8 முக்கிய நகரங்களில் விற்பனையாகாத வீடுகளின் மொத்த எண்ணிக்கை 7.85 லட்சம் என்றும் இவை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருவதாகவும் அறிவித்துள்ளது. டெல்லி, அகமதாபாத், சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா, குருகிராம் ஆகிய 8 நகரங்களில் வீடுகள் விற்பனை கடந்த சில மாதங்களாக மந்தமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் துறைக்கு பின்னடைவு

ரியல் எஸ்டேட் துறைக்கு பின்னடைவு

2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மேற்கண்ட 8 நகரங்களில் வீட்டு விற்பனை 49 சதவீதம் உயர்ந்து 83,220 வீடுகள் விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டு விற்பனையான வீடுகளின் விற்பனை எண்ணிக்கையான 55,910 என்ற கணக்குடன் ஒப்பிடும்போது அதிகம் தான். ஆனால் அதே நேரத்தில் விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கையை செப்டம்பர் மாதத்தில் 7.85 லட்சம் என இருப்பது ரியல் எஸ்டேட் துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

அகமதாபாத் - பெங்களூரு

அகமதாபாத் - பெங்களூரு

அகமதாபாத் நகரில் செப்டம்பர் காலாண்டின் இறுதியில் 65,160 வீடுகள் விற்பனையாகவில்லை என்றும், பெங்களூரில் விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை 77,260 என இருப்பதாகவும் PropTiger.com தெரிவித்துள்ளது.

சென்னை நிலவரம்

சென்னை நிலவரம்

சென்னையில் செப்டம்பர் மாத நிலவரத்தின்படி 32,180 வீடுகள் விற்பனையாகாமல் உள்ளது என்றும், இந்த வீடுகளை விற்பனை செய்ய குறைந்தது இரண்டு வருடங்கள் ஆகும் என்றும் ரியல் எஸ்டேட் துறையினர் தெரிவித்துள்ளனர்.

டெல்லி - கொல்கத்தா

டெல்லி - கொல்கத்தா

அதேபோல் டெல்லி என்.சி.ஆர் பகுதியில் 1,00,770 விற்கப்படாத வீடுகள் உள்ளதாகவும், ஐதராபாத்தில் விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை 99,090 என இருப்பதாகவும், கொல்கத்தாவில் 22,530 விற்கப்படாத வீடுகள் உள்ளன என்றும் PropTiger.com தெரிவித்துள்ளது.

மும்பை - புனே

மும்பை - புனே

மகாராஷ்டிரா மாநிலத்தை பொருத்தவரையில் மும்பையில் 2,72,960 வீடுகள் விற்பனையாகாமல் கடந்த 33 மாதங்களாக இருப்பதாகவும், புனேவில் 1,15,310 வீடுகள் விற்பனையாகாமல் இருப்பதாகவும், இந்த வீடுகளை விற்பனை செய்ய குறைந்தது 22 மாதங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7.85 lakh unsold housing stock in 8 cities of India in September end

There have been reports that the real estate industry in India has been sluggish due to the economic reason for the past few years. 7.85 lakh constructed houses are said to be unsold in 8 major cities in India
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X