சீனாவுக்கு போட்டியாக இந்தியாவில் 7 மெகா டெக்ஸ்டைல் பார்க்.. அரசின் பிரம்மாண்ட திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2020ல் சீன டெக்ஸ்டைல் துறையில் பெருமளவிலான வளர்ச்சியை அடைந்து உலக நாடுகளை ஆச்சரியப்படுத்திய நிலையில், சீனாவிற்குப் போட்டியாக இந்தியாவும் உலகளவில் பெரிய டெக்ஸ்டைல் உற்பத்தி தளமாக மாற வேண்டும் என்ற மிகப்பெரிய இலக்கை இந்தியா நிர்ணயம் செய்துள்ளது.

 

இதன் படி பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள 2021-22ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையில், இந்தியாவில் மாபெரும் டெக்ஸ்டைல் பூங்காவை அமைக்கும் திட்டத்தை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தி மற்றும் ஏற்றுமதி

உற்பத்தி மற்றும் ஏற்றுமதி

மேலும் இந்த டெக்ஸ்டைல் பூங்கா மூலம் இந்தியாவில் இருந்து உலக நாடுகளின் தரத்திற்கும், தேவைக்கும் ஆடைகளைத் தயாரிப்பது மட்டும் அல்லாமல், உலகின் முக்கிய டெக்ஸ்டைல் ஏற்றுமதி ஹப்-ஆக மாறும் திட்டத்துடன் இந்தப் பூங்கா அமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு ஆலோசனை

மத்திய அரசு ஆலோசனை

இத்திட்டம் குறித்து மத்திய நிதித் துறையும், டெக்ஸ்டைல் துறை அமைச்சர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர். மேலும் இந்தப் புதிய டெக்ஸ்டைல் பூங்காவில் தொழிற்சாலையைத் துவங்கும் அனைவருக்கும் பெரிய அளவில் நன்மை அளிக்கும் வகையில் ஊக்க தொகை அளிக்கும் திட்டத்தையும் மத்திய அமைச்சகங்கள் வகுத்து வருகிறது.

2 மடங்கு வளர்ச்சி
 

2 மடங்கு வளர்ச்சி

2025-26ஆம் நிதியாண்டுக்குள் இந்தியாவின் டெக்ஸ்டைல் துறை 2 மடங்கு வளர்ச்சி அடைய வேண்டும் என்ற மிக முக்கிய இலக்குடன் டெக்ஸ்டைல் அமைச்சகம் இந்தியாவில் 7 Mega Integrated Textile Region and Apparel (MITRA) பூங்காவை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் குறித்த காலகட்டத்திற்குள் நாட்டின் டெக்ஸ்டைல் துறை 300 பில்லியன் டாலர் அளவிற்கு வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரி விதிப்பு

வரி விதிப்பு

இந்தப் பூங்காவில் தடையில்லா தண்ணீர், மின்சாரம், ஆராய்ச்சி கூடங்கள் ஆகியவை கண்டிப்பாக இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ள இதேவேளையில் சில முக்கியப் பைபர்களின் உற்பத்திக்கு anti-dumping வரி விதிப்பை விதிக்கவும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

சீனாவின் பொருளாதார வளர்ச்சி

சீனாவின் பொருளாதார வளர்ச்சி

2020ஆம் ஆண்டில் உலகில் பெரும்பாலான நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகக் கடுமையான பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சரிவை எதிர்கொண்ட நிலையில் சீனா மட்டும் சுமார் 2.3 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து உலகின் முன்னணி பொருளாதார நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

தொடர் வளர்ச்சி

தொடர் வளர்ச்சி

இந்த மாபெரும் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகச் சர்வதேச சந்தையில் கடந்த 5 மாதத்தில் ஏற்பட்ட திடீர் தேவையை மொத்தமாக வாரி சுருட்டிக்கொண்ட சீனா, உலக நாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வாயிலாகச் சீன உற்பத்தி நிறுவனம் பெருமளவிலான வர்த்தகத்தைப் பெற்று ஏற்றுமதியில் சிறப்பான வளர்ச்சியை அடைந்தது. இதில் டெக்ஸ்டைல் துறையின் வளர்ச்சியும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7 mega textile park in India to counter china: Big announcement may unveil in Budget 2021

7 mega textile park in India to counter china: Big announcement may unveil in Budget 2021
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X