1000 சதவீதம் லாபம்.. 2022ல் பணமழையில் முதலீட்டாளர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் பங்குச் சந்தை 2022ஆம் ஆண்டில் வட்டி விகித உயர்வு மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக அதிகளவிலான ஏற்ற இறக்கமாக இருந்தபோதிலும், சில முதலீட்டாளர்கள் அதிகம் அறியப்படாத பென்னி பங்குகளில் முதலீடு செய்தது மூலம் அதிகப்படியான லாபத்தை ஈட்டியுள்ளனர்.

2022 ஆம் ஆண்டில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகிய இரண்டு முக்கியக் குறியீடுகளும் தலா 7 சதவிகிதம் அதிகரிக்கும் நிலையில் உள்ளது. இந்த ஆண்டின் வர்த்தகம் முடிய உள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டில் வர்த்தகம் எப்படி இருக்கும் என அதிகளவிலான கணிப்புகள் வந்துகொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் சில பென்னி பங்குகள் 1000 சதவீதம் அதாவது 10 மடங்கு லாபத்தை அளித்துள்ளது.

1,000 சதவீத வளர்ச்சி

1,000 சதவீத வளர்ச்சி

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 1,000 சதவிகிதத்திற்கும் அதிகமான லாபத்தை அளித்த 7 பென்னி பங்குகளைத் தான் நாம் இங்கே பார்க்கப்போகிறோம். என்னது 1000 சதவீதமா..? முன்னணி நிறுவனங்கள் 15 சதவீதம் லாபத்தைப் பெற திணறி வரும் வேளையில் 10 மடங்கு லாபத்தைச் சில நிறுவனங்கள் அளித்துள்ளது வியக்க வைக்கிறது.

7 பென்னி பங்குகளை

7 பென்னி பங்குகளை

பொதுவாக, பென்னி ஸ்டாக் என்பது 10 ரூபாய்க்குக் கீழே இருக்கும் பங்குகள் தான். இதேவேளையில் முதலீட்டாளர்கள் இத்தகைய பங்குகளை அனைத்து வகைகளிலும் அபாயகரமானதாகக் கருதுகின்றனர். ஆனால் சில நிறுவனப் பங்குகள் பெரிய லாபத்தையும் கொடுத்துள்ளது.

நஷ்டம், ஜீரோ வருவாய்

நஷ்டம், ஜீரோ வருவாய்

இந்தப் பட்டியலில் ஏழு நிறுவனங்கள் பல காலாண்டுகளில் நஷ்டம் மற்றும் சில சமயங்களில் ஜீரோ வருவாயைப் பதிவு செய்துள்ளன. இந்தப் பங்குகளின் குறைவான விலை முதலீட்டாளர்களைக் கவர ஒரு தனித்துவமான அம்சத்தைக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள் விரைவாகப் பணம் சம்பாதிக்க முயற்சிக்கும்போது இத்தகைய பென்னி ஸ்டாக்ஸ் முதலீட்டில் ரீடைல் முதலீட்டாளர்கள் எளிதில் விழுகிறார்கள். பெரும்பாலான நேரத்தில் பென்னி பங்குகளில் முதலீடு செய்யும் தொகை நஷ்டத்தைத் தான் ஏற்படுத்தும் சில நேரத்தில் கூரையைப் பிச்சிக்கிட்டு கொடுக்கும். அப்படிப்பட்ட 7 பங்குகளைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

கைசர் கார்ப்பரேஷன்

கைசர் கார்ப்பரேஷன்

2022 இன் மிகப்பெரிய மல்டிபேக்கர் ஆகக் கைசர் கார்ப்பரேஷன் திகழ்கிறது. இந்தப் பங்கு 1,959 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரூ 2.80 க்கு வர்த்தகம் செய்யப்பட்ட பங்கு தற்போது ரூ 57 ஆக உள்ளது.

Alliance Integrated Metaliks

Alliance Integrated Metaliks

அலையன்ஸ் இன்டிகிரேடெட் மெட்டாலிக்ஸ் நிறுவனம் பாலங்கள் மற்றும் கோபுரங்களுக்கான உலோக பொருட்களைத் தயாரிக்கிறது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 2.71 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்ட பங்கு, தற்போது 1,578 சதவீதம் அதிகரித்துச் சுமார் 45 ரூபாயாக உள்ளது.

ஹேமாங் ரிசோர்சஸ்

ஹேமாங் ரிசோர்சஸ்

ஹேமாங் ரிசோர்சஸ் நிறுவனம் நிலக்கரி சப்ளையர் மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான சேவைகளையும் வழங்குகிறது. 2022 ஆண்டின் தொடக்கத்தில் ரூ.3.09ல் இருந்த பங்கு 1,612 சதவீதம் உயர்ந்து ரூ.53 ஆக உள்ளது.

கேபிஎஸ் இந்தியா

கேபிஎஸ் இந்தியா

இந்த நிறுவனம் பங்குச் சந்தையில் முதலீட்டுத் திட்டமிடல் மற்றும் பத்திரங்கள் தரகு சேவைகள் உள்ளிட்ட வெல்த் மேனேஜ்மென்ட் சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதன் பங்குகள் ரூ.9.50ல் இருந்து 1,378 சதவீதம் உயர்ந்து ரூ.141 ஆக இருந்தது. 2021 இல், பங்கு கிட்டத்தட்ட 140 சதவீதம் வளர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Sonal Adhesives

Sonal Adhesives

இந்த நிறுவனம் பங்கு 2022 ஆம் ஆண்டில் 1,359 சதவீதம் உயர்ந்து ரூ.9.30ல் இருந்து ரூ.136 ஆக உள்ளது. இந்நிறுவனம் பிளாஸ்டிக் கயிறு, self-adhesive tape மற்றும் அக்ரிலிக் பசைகள் ஆகியவற்றைத் தயாரிக்கிறது.

பீகே நிர்யாத்

பீகே நிர்யாத்

பீகே நிர்யாத் நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ.7ல் இருந்து ரூ.80க்கு உயர்ந்து 1,000 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தப் பீகே நிர்யாத் நிறுவனம் பங்குகளில் முதலீடு செய்கிறது, சணல் மற்றும் சணல் தயாரிப்புகளில் வர்த்தகம் செய்கிறது மற்றும் கடன்களை வழங்குகிறது.

அஷ்னிஷா இண்டஸ்ட்ரீஸ்

அஷ்னிஷா இண்டஸ்ட்ரீஸ்

அஷ்னிஷா இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலை 1,000 சதவீதம் உயர்ந்து ரூ.0.96ல் இருந்து ரூ.10க்கு உயர்ந்ததுள்ளது. இந்த நிறுவனம் எஃகு உற்பத்தியாளராக இருப்பது மட்டும் அல்லாமல் வர்த்தகம் மற்றும் முதலீட்டுச் சேவைகளை வழங்குகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7 penny stocks Clocked more 1000 percent profit in 2022

7 penny stocks Clocked more 1000 percent profit in 2022
Story first published: Tuesday, December 13, 2022, 8:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X