ஏழ்மையிலிருந்து வெற்றி பெறுபவரின் வாழ்க்கை பயணம் பலருக்குத் தங்கள் வாழ்க்கையில் நம்பிக்கை தரும்.
இந்த ஒரு விவசாயியின் மகனாகப் பிறந்த பிபி ரெட்டி என்பவரின் சொத்து மதிப்பு இன்று 33,113 கோடி ரூபாய்.
யார் இந்தப் பிபி ரெட்டி..?!

மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர்
மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்-இன் (MEIL) தலைவர் தான் பிபி ரெட்டி, நகரத்தை அடிப்படையாகக் கொண்ட உள்கட்டமைப்பு நிறுவனம் தான் மேகா இன்ஜினியரிங். பிபி ரெட்டி சொத்து மதிப்புத் தற்போது 4.1 பில்லியன் டாலர், அதாவது 33,000 கோடி ரூபாய்க்கு மேல்.

பிபி ரெட்டி
கெளதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு 150 பில்லியன் டாலராகக் கருதப்படும் நிலையில்,பிபி ரெட்டி 4.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 43வது இடத்தைப் பிடித்துள்ளார்.

விவசாயி மகன்
விவசாயியின் மகனாகப் பிறந்த பிபி ரெட்டி 1989 ஆம் ஆண்டுச் சிறிய டவுன் பகுதிகளில் பைப் அமைப்பதற்காக மேகா இன்ஜினியரிங் எண்டர்பிரைசர்ஸ் என்னும் நிறுவனத்தைத் துவங்கினார். அடுத்த சில வருடத்திலேயே சாலை அமைப்பது, அணை கட்டுவது, இயற்கை எரிவாயுவுக்கு நெட்வொர்க் அமைப்பது போன்ற இன்பராஸ்டக்சர் திட்டத்தைக் கையில் எடுத்தார் பிபி ரெட்டி.

மேகா இன்ஜினியரிங் எண்டர்பிரைசர்ஸ்
2006ல் மேகா இன்ஜினியரிங் எண்டர்பிரைசர்ஸ் என்ற பெயரை மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் எனப் பெயர் மாற்றினார். தற்போது இந்த நிறுவனத்தை 1991ல் பிபி ரெட்டி உடன் இணைந்த மருமகன் பி.வி. கிருஷ்ணா ரெட்டி தான் கவனித்து வருகிறார்.

தெலுங்கானா
வறட்சியால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில், மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் சுமார் 14 பில்லியன் டாலர் செலவில் இந்தியாவின் மிகப்பெரிய லிப்ட் பாசனத் திட்டத்தைக் அமைத்தது. இத்திட்டம் முதன் முதலில் 2019 இல் பயன்பாட்டுக்கு வந்தது.

லிஃப்ட் பாசனம்
லிஃப்ட் பாசனம் என்பது நீர்ப்பாசனத்தின் இன்றைய நவீன முறையாகும், இதில் நீர் இயற்கையான ஓட்டம் இல்லாத பட்சத்தில் வறட்சியால் போக்க வேண்டும் என்பதற்காகப் பம்ப்கள் அல்லது குளங்கள் மூலம் நீர் ஆதாரத்தைக் கொண்டு சேர்ப்பது தான் இந்த லிஃப்ட் பாசனம்.

எலக்ட்ரிக் பஸ்
இன்று இந்தியாவில் எலக்ட்ரிக் பஸ் தயாரிப்பில் முன்னோடியாக இருக்கும் Olectra Greentech, மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர்-இன் கூட்டு முயற்சியில் தான் இயங்கி வருகிறது. Olectra Greentech நிறுவனம் சீனாவின் BYD நிறுவனத்தின் அதன் தொழில்நுட்பத்தை வாங்கி எலக்ட்ரிக் பஸ்களைத் தயாரித்து வருகிறது.

கிளை நிறுவனங்கள்
மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் கீழ் பல நிறுவனங்கள் இருக்கிறது. அவை மேகா ஃபைபர் கிளாஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்,MEIL கிரீன் பவர் லிமிடெட்.,வெஸ்டர்ன் உ.பி. பவர் டிரான்ஸ்மிஷன் கோ. லிமிடெட்,எஸ்இபிசி பவர் பிரைவேட் லிமிடெட்.,கோயா & கம்பெனி கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட்.,ஜேசிஇ இன்ஜினியரிங் & மேனேஜ்மென்ட் சேவைகள் பிரைவேட் லிமிடெட்,MEIL ஹோல்டிங்ஸ் லிமிடெட்.,MEIL பவுண்டேஷன்.

36 வருட பயணம்
36 வருடத்திற்கு முன்பு வெறும் 2 ஊழியர்கள் வைத்து வர்த்தகத்தில் இறங்கிய பிபி ரெட்டி இன்று இந்தியா முழுவதும் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. உதாரணமாக லாடாக் பகுதியில் இருக்கும் Zoji-la Tunnel-ஐ கட்டப்பட்டு வருவது மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் தான்.

பிபி ரெட்டி
பிபி ரெட்டி மற்றும் மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனம் இந்தியாவின் முக்கிய நிறுவனமாக மாறியுள்ளது. நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படுத்துவதில் அதிகம் கவனம் செலுத்தி வரும் நிலையில் மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் -க்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.