முன்பெல்லாம் வழி தெரியாத ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் ஒவ்வொருவரிடம் கேட்டு கேட்டு செல்ல வேண்டும்.
ஆனால் தற்போது தொழில் நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் கூகுள் மேப் கையில் இருந்தால் எந்த பிரச்சனையும் இன்றி யாருடைய உதவியும் இல்லாமல் நமது இலக்கிற்கு சென்று விடலாம்.
ஆனால் கூகுள் மேப் ஒரு சில சமயம் சொதப்பி விடும் என்பதும் அது குறித்த செய்திகளும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் என்பதையும் பார்த்து வருகிறோம்.
கூகுள் மேப்
கூகுள் மேப் என்பது நமது பயண முறையை மாற்றி அமைத்து உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. எந்த திசையில் செல்ல வேண்டும்? எந்த தெருவின் வழியாக நம்முடைய இலக்கை நோக்கி செல்ல வேண்டும்? என்பதை கூகுள் மேப் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம், கூகுள் மேப் நமது பயணத்தை எளிதாக்கி உள்ளது என்று கூறினால் அது மிகையில்லை.
சுந்தர் பிச்சை
இந்த நிலையில் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூகுள் மேப் குறித்து கூறிய போது கூகுள் மேப் மூலம் பயணம் செய்வது மிகவும் எளிதாகி உள்ளது. முதல் முறை உங்கள் தெருவை கூகுள் மேப் மூலம் காணும் அனுபவத்தை பெறுங்கள் என்று கூறியிருந்தார்.
சொதப்புமா கூகுள் மேப்
இந்த நிலையில் கூகுள் மேப் பல சமயங்களில் மிகச் சரியான வழியை காட்டினாலும் ஒரு சில நேரங்களில் சொதப்பி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியின் சொந்த ஊரான சென்னையில் தவறான பாதையை கூகுள் மேப் காட்டியுள்ளதாக ட்விட்டரில் ஒருவர் பதிவு செய்துள்ளார்.
சென்னையில் கூகுள் மேப்
சென்னையின் முக்கிய பகுதியான அடையாறில் உள்ள ஒரு சாலையின் பெயரை கூகுள் மேப் தவறாக காட்டி உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். லேட்டிஸ் சாலை என்று ஒரு சாலையின் பெயராக இருக்கும் நிலையில் அந்த சாலையை அனைவரும் எல்.பி சாலை என்று சுருக்கமாக கூறுவார்கள். ஆனால் கூகுள் மேப் அந்த சாலையை தவறான பெயருடன் காண்பிக்கிறது என்றும், இது நிச்சயம் பயணம் செய்பவர்களுக்கு குழப்பத்தை விளைவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ட்விட்டர்
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் சொந்த ஊரான சென்னையில் உள்ள அடையாறு பகுதி லேட்டிஸ் சாலை என்பதை சுருக்கமாக எல்பி சாலை என்று கூறுவோம். ஆனால் அந்த சாலையை நீங்கள் பவுண்ட் சாலை என்று தவறாக காட்டுகிறீர்கள். தயவுசெய்து தவறை திருத்திக் கொள்ளுங்கள் என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு டுவிட்டரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications