இதெல்லாம் ஒரு வேலையா..? என்னமா இப்படி பண்றீங்களே மா..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வேலை செய்து வருவதால் உலகின் பல விதமான வேலை வாய்ப்புகள் உள்ளன என்பது தெரிந்ததே.

 

ஆனால் செலவு செய்வது மட்டுமே தனது முழு நேர வேலை என்று ஒரு கோடீஸ்வர பெற்றோரின் மகள் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தன்னுடைய வாழ்நாள் முழுவதுமே செலவு செய்வது தான் என்று அந்த மகள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டாலின் சொன்ன முக்கிய விஷயங்கள்.. சென்னை முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடந்தது என்ன?

கோடீஸ்வர பெற்றோரின் மகள்

கோடீஸ்வர பெற்றோரின் மகள்

ஒரு சிலர் பிறக்கும்போதே கோடீஸ்வரராக பிறந்து இருப்பார்கள் என்பதும் அவர்களுக்கு ஆடம்பர செலவு செய்வது என்பது சாதாரணமான விஷயம் என்பது தெரிந்ததே. அந்த வகையில் நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு இளம் பெண் தனது பெற்றோர்கள் சேர்த்து வைத்த கோடிக்கணக்கான பணத்தை ஆடம்பரமான பொருட்கள் வாங்குவதற்கு செலவு செய்து வருகிறார்.

செலவு செய்வதுதான் வேலை

செலவு செய்வதுதான் வேலை

ஆடம்பர பொருட்கள் வாங்கி செலவு செய்வதையே தனது முழு நேர வேலை என்று சமூக வலைதளத்தில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இளம்பெண்ணின் பெயர் ரோமா அப்தெஸ்ஸலாம். அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த இளம் பெண் தன்னை ஒரு தொழில்முறை வீட்டில் தங்கி செலவு செய்யும் மகள் என்று பெருமையுடன் கூறிக்கொள்கிறார்.

தினமும் $50,000 டாலர் செலவு
 

தினமும் $50,000 டாலர் செலவு

ஒரு நாளில் சுமார் 50 ஆயிரம் டாலர் செலவு செய்து தன்னைத்தானே செலவு செய்யும் மகள் என்றும் அழைத்துக் கொள்கிறார். மேலும் தனது அன்றாட செலவுகள் குறித்த விவரங்களை அவர் தினமும் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அவருடைய பதிவை பார்த்து பல ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

ஆடம்பர பொருட்கள்

ஆடம்பர பொருட்கள்

உலகின் அனைத்து ஆடம்பரப் பொருள்களை மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி 'வீட்டில் தங்கி செலவு செய்யும் மகளான ரோமா அப்தெஸ்ஸலாம் பதிவு செய்து வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நான் வீட்டில் தங்கி பணத்தை செலவு செய்வதையே ஒரு வேலையாக மாற்றி இருக்கிறேன் என்றும் ஆரம்பத்தில் இது எனக்கு வேடிக்கையாக இருந்தது என்றும் ஆனால் அதன்பிறகு தற்போது பழகி விட்டது என்றும் ரோமா அப்தெஸ்ஸலாம் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

என்னென்ன செலவுகள்?

என்னென்ன செலவுகள்?

ரோமா அப்தெஸ்ஸலாம் அதிகம் வாங்குவது ஆடம்பர ஆடைகள் மற்றும் டிசைனர் பொருட்கள் தான் என்பதும் அது மட்டுமின்றி தன் பெற்றோரின் செல்வத்தை விருந்துகள், முக அலங்கார ஒப்பனை பொருள்கள் வாங்குதல் மற்றும் உல்லாசப்பயணம் ஆகியவற்றிலும் செலவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொந்த தொழில் முயற்சி

சொந்த தொழில் முயற்சி

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு முன் தோல் பராமரிப்பு அழகு நிலையம் தொடங்க அவர் திட்டமிட்டதாகவும் ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக அவர் தனது வணிக திட்டத்தில் எந்தவித கவனம் செலுத்தாமல் தற்போது முழுநேர செலவு செய்யும் சொகுசு வாழ்க்கையை வாழ விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

தோழிகளுடன் ஷாப்பிங்

தோழிகளுடன் ஷாப்பிங்

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து காலை உணவை சாப்பிட்டவுடன் சுமார் 500 டாலர் செலவில் உடற்பயிற்சி வகுப்புக்கு செல்லும் ரோமா அப்தெஸ்ஸலாம், அதன்பிறகு தோழிகளுடன் ஷாப்பிங் செய்வதை தினமும் நாள் முழுவதும் செய்துவருவதாக அவரே தெரிவித்துள்ளார். சமீபத்தில் பதிவு செய்த டிக் டாக் வீடியோ ஒன்றில் அவர் இதுவரை வாங்கிய ஆடம்பரப் பொருள்களை காட்டிய வீடியோ மிகப்பெரிய அளவில் பெரும் பரபரப்புக்கு உள்ளானது.

பணம் கொடுப்பதை நிறுத்திய பெற்றோர்

பணம் கொடுப்பதை நிறுத்திய பெற்றோர்

ஒரு கட்டத்தில் ரோமா அப்தெஸ்ஸலாம் மிக அதிக செலவு செய்வதை அடுத்து அவருடைய பெற்றோர்கள் அவருக்கு பணம் கொடுப்பதை நிறுத்தி விட்டதாகவும் இருப்பினும் நீண்ட நாள் என்னுடைய பெற்றோர்கள் அவ்வாறு இருக்க முடியாது என்றும் மீண்டும் ஷாப்பிங் செல்ல பணம் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

A Professional stay at home Daughter Spends Rs.40 Lakh per day!

A Professional stay at home Daughter Spends Rs 40 Lakh per day! | இதெல்லாம் ஒரு வேலையா..? என்னமா இப்படி பண்றீங்களே மா..!!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X