கார்ப்பரேட் துறைகள் பெரும் பணத்தின் மீது அமர்ந்திருக்கிறது.. அபிஜித் பேனர்ஜி அதிரடி கருத்து..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பொருளாதாரம் குறித்து தனது கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்து வரும் நோபல் பரிசு பெற்ற வெற்றியாளர் அபிஜித் பேனர்ஜி, வங்கித் துறை மிக நலிவடைந்துள்ளது. ஆனால் அதை மீட்க அரசு சரியான முயற்சியும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

 

ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பேனர்ஜியும் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் அபிஜித் பேனர்ஜி, சமீபத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறை சந்தித்த வீழ்ச்சி, இந்தியாவின் பொருளாதார வலிமையற்ற தன்மையையே காட்டுகிறது.

வங்கித் துறைக்கு நிதி வேண்டும்

வங்கித் துறைக்கு நிதி வேண்டும்


அங்கு பொருளாதார மந்தநிலை குறித்து பேசிய அபிஜித் பேனர்ஜி, இந்தியா நிலவி வரும் மந்த நிலையில் இருந்து கடந்து செல்லக்கூடும். ஆனால் தரவுகளில் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அரசின் முன்னுரிமையானது மந்த நிலையில் இருக்கும் வங்கித்துறைக்கு நிதியளிப்பதில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

நிதி தேவை

நிதி தேவை

நாம் மந்த நிலையில் இருக்கிறோம். ஆனால் அது எந்த அளவுக்கு என்று தெரியவில்லை என்று 58 வயதான இந்தியா அமெரிக்கா பொருளாதார நிபுணர் வங்கி மற்றும் உள்கட்டமைப்பு துறைகளுக்கு அரசாங்கத்திடம் நிதி தேவை என்றும் கூறினார். அதிலும் வங்கித் துறை மந்தமான நிலையில் உள்ளது. இதற்கு அரசாங்கத்தால் பெரும் நிதி தேவைப்படுகிறது. மேலும் உள்கட்டமைப்பு துறையும் நிதிகளையும் மையம் கவனிக்க வேண்டும்.

கார்ப்பரேட் துறை பணத்தின் மீது அமர்ந்துள்ளது
 

கார்ப்பரேட் துறை பணத்தின் மீது அமர்ந்துள்ளது

ஏர் இந்தியா போன்ற பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையையும் பேனர்ஜி ஆதரித்துள்ளார். கார்ப்பரேட் வரிகளை அரசாங்கம் சமீபத்தில் குறைத்த நிலையில், கார்ப்பரேட் துறை பெரும் பணத்தில் அமர்ந்திருப்பதாகத் தெரிகிறது என்றும் அவர் கூறினார்.

உண்மைத் தகவல்

உண்மைத் தகவல்

மேலும் நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், இது உள்நாட்டை மட்டுமல்லாது வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் கலக்கம் அடையச் செய்துள்ளது. அரசு இதுகுறித்து கவலைப்பட வேண்டும். இந்த அரசுக்கு எதை நோக்கிப் பயணிக்கிறோம் என்பதே தெரியவில்லை. சர்வதேச பொருளாதார சூழலில் இந்தியாவின் பங்களிப்பு இருக்க வேண்டுமென்றால் உண்மைத் தகவல்களை மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் பேனர்ஜி தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Abhijit Banerjee said Indian could be passing through a phase of recession

Banking sector is stressed, so govt should be on refinancing the banking sector, said abhijit banerjee
Story first published: Tuesday, January 28, 2020, 17:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X