விழாக்காலத்திலும் 25% விற்பனை சரியும்.. சில்லறை வணிகர்கள் கவலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா மட்டும் அல்ல, உலகம் முழுவதும் இன்றளவில் கொரோனாவுக்கு மத்தியிலும் கல்லா கட்டிக் கொண்டு இருக்கும் துறை ஆன்லைன் சில்லறை விற்பனை தான்.

ஏனெனில் கொரோனா பரவலுக்கு மத்தியில் பாதுகாப்பு உள்ளிட்ட பல காரணங்களுக்காக, ஆன்லைன் விற்பனையையே மக்கள் நாடுகின்றனர்.

இது குறித்து BluePi Consulting வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்தியாவில் 60 சதவீதம் சில்லறை விற்பனையாளர்கள், வரவிருக்கும் விழாக்கால பருவத்தில், தங்களது விற்பனை கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 25 சதவீதம் குறையும் என்று கூறியுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் மொத்த விற்பனையில் இந்த விழாக்கால விற்பனையானது கணிசமான பங்கு வகிக்கும். ஆனால் இந்த ஆண்டு விழாக்கால விற்பனையில் சரிவு இருக்கும். இந்த சரிவானது மீண்டு வர இன்னும் சில காலம் ஆகும் என்றும் புளூபி கன்சல்டிங் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

விழாக்காலத்திலும் 25% விற்பனை சரியும்.. சில்லறை வணிகர்கள் கவலை..!

இதோடு சில்லறை ஆடை வணிகமானது கடந்த ஆண்டினை விட சரிவினைக் காணலாம் என்றும் இந்த ஆய்வுகள் கூறுகின்றன. 57% ஆடை அல்லாத சில்லறை விற்பனையாளர்கள் பண்டிகை கால விற்பனையில், எந்த மாற்றமும் இல்லை, சிறிய மாற்றம் தான் இருக்கும் என்றும் மிகுந்த நம்பிக்கையுடனும் உள்ளனர்.

பண்டிகை கால கணிப்புகள் குறைப்பு காரணமாக, பதிலளித்தவர்களில் 71% பேர் தங்கள் ஆர்டர்களை ரத்து செய்வது அல்லது ஒத்தி வைப்பது குறித்தும் ஆலோசித்தும் வருகின்றனர். சிலர் ஆர்டர்களையும் ரத்து செய்து வருகின்றனர். இந்த ஆர்டர் குறைப்பின் காரணமாக சப்ளையர்கள் மற்றும் விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் என அனைவரையும் இது பின்னுக்கு தள்ளுகிறது.

இதற்கிடையில் Retail Thought Leadership Survey Report 2020 அறிக்கையில், கிட்டதட்ட 60% சில்லறை துறை நிறுவனங்கள் மூலதனங்களை உட்செலுத்த தீவிரமாக எதிர்பார்க்கின்றன.

மேலும் கணக்கெடுக்கப்பட்ட நிறுவனங்களில், பெரும்பான்மையான வணிகர்கள் ஆன்லைனில் 10% குறைவான வணிகத்தினை கொண்டுள்ளனர். எனினும் 83% அதிகமான வணிகங்களை ஆன்லைன் சேனலுக்கு நகர்த்த திட்டமிட்டுள்ளன. இருப்பினும் இதில் கவலை கொள்ளும் விஷயம் என்னவெனில் கிட்டதட்ட 40% பேருக்கு இது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பது தான்.

இந்த ஆய்வானது 500 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ள நிறுவனங்களுடன், ஆன்லைனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வாகும். மேலும் இதில் நூறுக்கும் மேற்பட்ட அனுபவம் வாய்ந்த தலைமை அதிகாரிகள் மற்றும் வணிகத் தலைவர்கள் உள்ளனர்.

சில்லறை விற்பனையின் கீழ் குறி வைக்கப்பட்ட இரண்டு முதன்மை பிரிவுகள் உள்ளன. ஒன்று ஆடை- வேகமான பேஷன் மற்றும் கிளாத்திங். இரண்டாவது ஆடை அல்லாத காலணிகள் வீட்டு அலங்கார பொருட்கள், பேஷன் அணிகலன்கள் உள்ளிட்ட பல அடங்கும்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

About 60% Indian retailers expect 25% decline in festival season sales

About 60% Indian retailers expect 25% decline in festival season sales in india
Story first published: Wednesday, September 23, 2020, 18:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X