விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கார் வரி பிரச்சனை.. முழு விபரம்.. எவ்வளவு வரி செலுத்த வேண்டும்..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சொகுசு கார் இறக்குமதி வழக்கில் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் இருந்து கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார்.

இந்த காரை தென் சென்னை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தார். அப்போது தமிழக அரசு விதிக்கும் நுழைவு வரியை செலுத்த உத்தரவிடப்பட்டது.

ஊழியர்களுக்கு பென்ஸ் கார் பரிசு.. ஹெச்சிஎல் அறிவிப்பால் ஊழியர்கள் குத்தாட்டம்..!ஊழியர்களுக்கு பென்ஸ் கார் பரிசு.. ஹெச்சிஎல் அறிவிப்பால் ஊழியர்கள் குத்தாட்டம்..!

நுழைவு வரி தொகை

நுழைவு வரி தொகை

இந்த நுழைவு வரித் தொகை அதிகமாக உள்ளதால், வரியை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் விஜய் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நுழைவு வரித் தொகையில் 20% செலுத்திவிட்டு காரை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள உத்தரவிட்டது.

உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல்

உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல்

இந்த வழக்கு சமீபத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து, 1 லட்சம் ரூபாய் அபராதம் (வழக்குச் செலவு) விதித்து உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

வரியை செலுத்த தயார்

வரியை செலுத்த தயார்

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் விஜய் நாராயண், நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கிறோம். நுழைவு வரி செலுத்த தயாராக இருக்கிறோம்.

இது ஏற்புடையதல்ல

இது ஏற்புடையதல்ல

ஆனால் நீதிமன்றத்தை நாடியதற்காக அபராதம் விதித்தது. மனுதாரர் குறித்து தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை ரத்து செய்ய வேண்டும். தனி நீதிபதியின் உத்தரவு நடிகர்களை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. இதே கோரிக்கையுடன் பலர் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், மனுதாரரான நடிகர் விஜய் மீது மட்டும் தேவையற்ற விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல. எனவே அந்த கருத்துகளை நீக்க வேண்டும்.

ஏன் இந்த வழக்கு

ஏன் இந்த வழக்கு

வழக்கு தொடர்ந்த போது நுழைவு வரி வசூலிக்க கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவுகள் அமலில் இருந்ததால் வழக்கு தொடரப்பட்டது. எனவே தனிநீதிபதியின் உத்தரவில் இடம்பெற்றுள்ள கருத்து மற்றும் அபராதத்தை நீக்க வேண்டும். வணிக வரித்திறையினர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டாலும், அதனை 7 முதல் 10 நாள்களுக்குள் செலுத்த தயாராக இருப்பதாக வாதிட்டார்.

இடைக்கால தடை

இடைக்கால தடை

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஏற்கனவே செலுத்திய நுழைவு வரி 20% போக, எஞ்சியுள்ள 80% ஒரு வாரத்துக்குள் நடிகர் விஜய் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.

காரின் விலை எவ்வளவு?

காரின் விலை எவ்வளவு?

அதெல்லாம் சரி, எவ்வளவு தான் வரி விகிதம்? காரின் விலை என்ன? இறக்குமதி வரி மற்றும் சாலை வரிகளை கட்டி 6.5 கோடி ரூபாய்க்கு விஜய் இந்த காரை நடிகர் விஜய் கடந்த 2012ம் ஆண்டு வாங்கியிருந்தார். எனினும் நுழைவு வரி என்பது இறக்குமதி கார்களுக்கு பொருந்துமா? என்ற வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில், 20% வரியினை மட்டும் கட்டி காரை பதிவு செய்துள்ளார்.

வரி எவ்வளவு கட்ட வேண்டியிருக்கும்?

வரி எவ்வளவு கட்ட வேண்டியிருக்கும்?

அப்போது காருக்கான நுழைவு வரி விகிதம் 12.5% ஆகும். அதன் படி நடிகர் விஜய் வாங்கிய காருக்கான நுழைவு வரி கிட்டதட்ட 81 லட்சம் ரூபாயாகும். ஏற்கனவே 15 லட்சம் ரூபாயினை கட்டியிருக்கும் விஜய், மீதமிருக்கும் சுமார் 66 லட்சம் ரூபாய்க்கும் மேல் கட்ட வேண்டிய நிலை வரலாம். எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வருமான வரித்துறை அறிவித்த பிறகு, விஜய் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இறுதி தொகை என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்போது தான் முழு தொகை எவ்வளவு என்பது தெரியவரும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: tax entry வரி
English summary

Actor vijay’s Entry tax case; madras HC relief for vijay in rolls Royce case

Vijay’s Entry tax case; madras HC grants the interim stay after Vijay was ready to pay the entire tax amount.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X