அதானி அதிரடி முடிவு.. FPO ரத்து.. பணத்தை திரும்ப முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்க முடிவு.. ஏன்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவின் பிரபல ஷார்ட் செல்லர் நிறுவனமான ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் அதானி குழுமத்தின் மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தது.

ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் இந்த குற்றச்சாட்டின் மத்தியில், அதானி குழும பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றன. குறிப்பாக ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் இந்த குற்றச்சாட்டானது, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமை பங்கு வெளியீடானது செய்யப்பட்டது.

எனினும் எஃப்பிஓ முதல் நாள் தொடங்கி இறுதி நாள் வரைக்குமோ பங்குகள் தொடர்ந்து சரிவினைக் கண்டன. மேலும் எஃப்பிஓ-வில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த விலை வரம்புக்கும் கீழாக பங்குகள் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.

ஹிண்டர்ன்பர்க் அறிக்கையால் பிரச்சனை இல்லை.. FPO-க்கு முழுக்க விண்ணப்பம்.. அதானி பெரும் நிம்மதி! ஹிண்டர்ன்பர்க் அறிக்கையால் பிரச்சனை இல்லை.. FPO-க்கு முழுக்க விண்ணப்பம்.. அதானி பெரும் நிம்மதி!

FPO- ரத்து

FPO- ரத்து

அதானி குழுமத்தில் உரிமை பங்கு வெளியீட்டில் தாக்கத்தினை ஏற்படுத்தவே ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் இப்படி அறிக்கை வெளியிட்டிருக்கலாம். அதானி குழுமத்தின் சரிவில் பலனடைய இப்படி செய்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தது.

இதற்கிடையில் தொடர்ந்து சரிந்து வரும் பங்குகளின் மத்தியில் முதலீட்டாளர்களின் பாதுகாப்பு கருதியும், சந்தையின் போக்கினை கருத்தில் கொண்டும் FPO-வினை ரத்து செய்துள்ளது.

பணம் திரும்ப கிடைக்கும்

பணம் திரும்ப கிடைக்கும்

இதன் மூலம் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களுக்கு அவர்களின் பணம் திரும்ப கிடைக்கும் எனலாம். இது முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பாகவும் அமையும். மொத்தத்தில் அதானி குழுமத்தினால் பணம் போச்சே என நினைத்தவர்களுக்கு, அதானி குழுமம் பணத்தை திரும்ப கொடுப்பதாக கூறி முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ள நல்ல பெயரை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

நம்பிக்கை அதிகரிக்கும்

நம்பிக்கை அதிகரிக்கும்

இது அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக இந்த நடவடிக்கையானது வந்துள்ளது. ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் அறிவிப்பால், 25% வரையில் அதானி குழும பங்குகள் சரிவினைக் கண்டது. தற்போது வரையில் இந்த சரிவில் இருந்தும் மீண்டபாடாக இல்லை எனலாம்.

பெரும் சரிவு

பெரும் சரிவு

ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கையால் அதானி குழுமம், தொடர்ந்து தனது சந்தை மதிப்பினை இழந்து வரும் நிலையில், உலக பில்லியனர்கள் பட்டியலிலும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

எனினும் இதில் கவனிக்கதக்க விஷயம என்னவெனில் அதானி குழுமத்தில் இத்தகைய குழப்பங்களுக்கும் மத்தியில், எஃப் பி ஓ முழுமைக்குமான பங்குகளுக்கு விண்ணப்பத்தினை அதானி குழுமம் பெற்றது தான்.

 தொடர் சரிவு

தொடர் சரிவு

இத்தகைய சிக்கல்களுக்கும் மத்தியில் புதியதாக ஒரு முதலீட்டு திட்டம், அன்னிய நிறுவனங்கள் கூட அதானி குழுமத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என கூறி மிகப்பெரிய முதலீட்டினை சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இது அதானி குழுமத்திற்கு சாதகமாக பார்க்கப்பட்டாலும், அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றன.

அதானி எண்டர்பிரைசஸ் FPO ரத்து

அதானி எண்டர்பிரைசஸ் FPO ரத்து

இதற்கிடையில் தான் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான உரிமை பங்கு வெளியீட்டினை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள அதானி குழுமம், நாளுக்கு நாள் எங்களது பங்குகளில் ஏற்ற இறக்கம் என்பது அதிகமாக உள்ளது. இந்த அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, நாங்கள் முதலீட்டாளர்களின் நலனை கருதி இப்படி முடிவினை எடுத்துள்ளோம்.

 விரைவில் பணம் கிடைக்கும்

விரைவில் பணம் கிடைக்கும்

ஆக பெறப்பட்ட முதலீடுகளை திருப்பி அளிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதற்கான நடவடிக்கையிலும் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இன்னும் சில தினங்களில் இந்த பணம் உங்களுக்கு திரும்பும் என்றும் அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adani Enterprises calls off fully subscribed FPO: money may soon to be returned to investors

Adani Enterprises calls off fully subscribed FPO: money may soon to be returned to investors
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X