அதானியின் ஒற்றை முடிவு.. 22% சரிவினைக் கண்ட அதானி எண்டர்பிரைசஸ்.. மற்ற பங்குகள் நிலை?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவின் பிரபல ஆய்வு நிறுவனமான ஹிண்டர்ன்பர்க்கின் ஆய்வறிக்கையானது, அதானி குழுமத்தினை சேர்ந்த பல பங்குகள் பலத்த சரிவினைக் கண்டு வருகின்றன. குறிப்பாக அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 20% சரிவினைக் கண்டுள்ளது.

 

அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமை பங்கு வெளியீட்டினை ரத்து செய்வதாகவும், விரைவில் முதலீட்டாளர்களின் முதலீடானது திரும்ப வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஆறுதலை கொடுத்துள்ளது எனலாம்.

 முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்.. கெளதம் அதானி! முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்.. கெளதம் அதானி!

சரிவில் அதானி குழும பங்குகள்

சரிவில் அதானி குழும பங்குகள்

முதலீட்டாளர்களின் பாதுகாப்பு தான் முக்கியம். மற்றதெல்லாம் இரண்டாம்பட்சம் தான் என அதானி விளக்கம் கொடுத்துள்ளார். எனினும் அதானியின் இந்த ரத்து அறிவிப்பே ஒரு பின்னடைவாகவும் பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில் அதானி குழுமத்தின் வங்கி கடன் குறித்த விவரங்களை ரிசர்வ் வங்கி கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது மேற்கோண்டு அதானி குழுமத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதுவும் ஒரு முக்கிய காரணம்

இதுவும் ஒரு முக்கிய காரணம்

அதானி குழுமத்தின் பங்கு பத்திரங்களுக்கு எந்த ஒரு மதிப்பும் இல்லை. அது ஜீரோவாகி விட்டது என சுவிட்சர்லாந்து நிதி மேலாண்மை நிறுவனம் கிரெடிட் சுவிஸ் கூறியதாக தகவல்கள் வெளியானது. மேலும் அதானி குழும பங்குப் பத்திரங்களுக்கு ஈடாக கடன் வழங்க வேண்டாம் என்றும் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆக இதுவும் அதானி பங்குகளின் சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

சிட்டி குழுமமும் ஒரு காரணம்
 

சிட்டி குழுமமும் ஒரு காரணம்

கிரெடிட் சுவிஸ் நிறுவனத்தின் இந்த பரிந்துரைக்கு மத்தியில், சிட்டி குழுமமும், அதானி குழும பங்கு பத்திரங்களுக்கு கடன் வழங்குவதை நிறுத்தியுள்ளது. இது மேற்கொண்டு அதானி குழுமத்திற்கு பெரும் சரிவாக பார்க்கப்படுகின்றது.

பணத்தை திரும்ப தர திட்டம்

பணத்தை திரும்ப தர திட்டம்

அதானி குழுமம் இழந்த மதிப்புக்கு மத்தியில் முதலீட்டாளர்களிடமாவது தனது நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக, முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப தரப்போவதாக அறிவித்துள்ளது.

இதற்கிடையில் தான் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் மற்றும் மற்ற பல அதானி குழும பங்குகளும் பலத்த சரிவினைக் கண்டுள்ளன.

 அதானி குழும பங்குகள் சரிவு

அதானி குழும பங்குகள் சரிவு

குறிப்பாக அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது லோவர் சர்க்யூட் ஆகி 1915.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதே அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள் 10% சரிவிலும், அதானி டோட்டல் கேஸ் பங்கு விலையானது 10% சரிவிலும், அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 9.48% சரிவிலும், அதானி பவர் நிறுவனத்தின் பங்கு விலையானது 5% சரிவிலும்,, அதானி வில்மர் பங்கு விலையானது 5% சரிவிலும் காணப்படுகின்றது.

செல்லிங் அழுத்தம்

செல்லிங் அழுத்தம்

சமீபத்திய செல்லிங் அழுத்தத்தின் மத்தியில் அதானி குழும பங்குகள் தொடர்ந்து கடும் வீழ்ச்சியினை கண்டு வருகின்றன. இதன் காரணமாக அதானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 15.74 பில்லியன் டாலர் இழப்பினை கண்டுள்ளார்.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

இதற்கிடையே போர்ப்ஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 82.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 10வது இடத்திற்கு முகேஷ் அம்பானி முன்னேறியுள்ளார். கடந்த வாரம் 9வது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானிக்கு இந்தப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட பாதிப்பு முகேஷ் அம்பானி சொத்து மதிப்பையும் பாதித்துள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adani Enterprises stock price falls up to 22% on FPO withdrawal: other adani group share also bleed

Adani Enterprises stock price falls up to 22% on FPO withdrawal: other adani group share also bleed
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X