அதானி கொடுத்த அசத்தலான வாய்ப்பு.. IPOல் இருந்து 800 மடங்குக்கு மேல் லாபம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதானி எண்டர்பிரைசஸில் முதலீடு செய்யப்பட்ட ஒரு ரூபாய், இரண்டரை தசாப்தங்களுக்கு பிறகு 800 மடங்கு வருமானத்தினை கொடுத்துள்ளதாக பில்லியனர் அதானி கூறியுள்ளார்.

 

பில்லியனரான கெளதம் அதானி தனது உள்கட்டமைப்பு நிறுவனத்தினை, ஒருங்கிணைந்த கூட்டு நிறுவனமாக உருவாக்கி வருகின்றார்.

இது குறித்து ஜேபி மார்கனின் இந்திய உச்சி மாநாட்டில் பேசிய அதானி குழுமத் தலைவர், கெளதம் அதானி துறை முகங்கள் முதல் விமான நிலையங்கள் வரை பொது வர்த்தகம் செய்யும் 6 நிறுவனங்கள் மூலம், ஆயிரக்கணக்கான வேலைகளை அளித்து வருகின்றது. அதோடு இதன் மூலம் பங்குதாரர்களும் பலமான லாபத்தினை கண்டு வருகின்றனர்.

இந்தியாவின் டாப் தனியார் வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு என்ன வட்டி கொடுக்கிறார்கள்?

யார் இந்த அதானி?

யார் இந்த அதானி?

சரி வாருங்கள் அதனை பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்க விருக்கிறோம். அதானி குழுமம் அவர்களின் முதல் ஐபிஓவினை 1994ல் செய்தது. இன்று அதன் வருவாய் 800 மடங்காக அதிகரித்துள்ளதாக அதானி தெரிவித்துள்ளார். 58 வயதான அதானி, கல்லூரி படிப்பை கைவிட்டவர். ஆரம்பத்தில் கமாடிட்டி வர்த்தகத்தில் தனி வணிகத்தினை தொடங்கியவர், தற்[போது நாட்டின் மிகப்பெரிய துறைமுக ஆபரேட்டராக உருவெடுக்க தொடங்கியுள்ளார்.

பன்முகம் கொண்ட அதானி

பன்முகம் கொண்ட அதானி

அதுமட்டும் அல்ல, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிலைய டெவலப்பராகவும் திகழ்கிறது. அதோடு, எரிசக்தி, சுரங்கம் மற்றும் எரிவாயு புதுபிக்கதக்க பாதுகாப்பு மற்றும் வேளாண் பொருட்கள் வணிகம் உள்ளிட்ட பலவற்றை தன்னகத்தே அதானி கொண்டுள்ளது. அதானியின் இந்த பன்முகத் தன்மை கொண்ட இந்த நிறுவனம், நாட்டில் தேவை அதிகரித்து வரும் இந்த நிலையில், மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்து வருகிறது.

10 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ச்சி
 

10 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ச்சி

கடந்த இரண்டு தசாப்தங்களாகவே அதானி குழுமத்தின் பயணம் தொடர்ச்சியாக மாற்றங்களை கண்டு வருகின்றது. ஒரு வணிகத்தில் இருந்து, இணைக்கப்பட்ட மற்றொரு வணிகத்தினையும் செய்து வருகிறது. இது தொடர்ச்சியாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிஏஜிஆர் வளர்ச்சியினை 35% ஆக பராமரித்து வருகின்றது.

ஐபிஓ விலை எவ்வளவு?

ஐபிஓ விலை எவ்வளவு?

1993ம் ஆண்டு தான் அதானி எக்ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில், விவசாய பொருட்கள் ஏற்றுமதி, புரோசான் உணவுகள், பிளாஸ்டிக் பொருட்களை 28 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. இந்த நிலையில் தான் 1994ம் ஆண்டில் பொது பங்கு வெளியீடு செய்தது. அப்போது 5 லட்சம் ஈக்விட்டி பங்குகளை தலா 10 ரூபாய் மதிப்பில் அறிவித்தது.

பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, இன்று 296.90 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இன்றைய உச்ச விலையானது 307 ரூபாயாகவும் அதிகரித்து வர்த்தகமாகியது. இந்த நிறுவனம் 1994ம் ஆண்டில் பொதுப் பங்கு வெளியீடு செய்திருந்தது. ஆரம்பத்தில் 10 ரூபாயாக வெளியீடு செய்த நிலையில், 2006 வரைக்கு தொடர்ச்சியாக 100 ரூபாய்க்கும் கீழேயே வர்த்தகமாகியது. இதே 2015ல் புதிய உச்சமான 803.95 ரூபாயாக அதிகரித்தது. ஆனால் அந்த ஆண்டின் பிற்பகுதிலேயே மீண்டும் 100 ரூபாய்க்கு கீழே சரிந்துள்ள நிலையில், இன்று அதன் விலை 296 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adani enterprises two and a half decades back given 0ver 800 times return

Gautam Adani said Adani enterprises two and a half decades back given 0ver 800 times return
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X