அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கௌதம் அதானி-யின் அதானி குழுமத்தின் முக்கியமான நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ், பிப்ரவரி 7, 2023 அன்று வர்த்தகம் திறக்கப்படுவதற்கு முன்னதாக, Dow Jones Sustainability குறியீட்டில் இருந்து நீக்கப்படும் என்று S&P Dow Jones Indices வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்குக் கையாளுதல் மற்றும் கணக்கு மோசடி குற்றச்சாட்டுகளால் குறித்து ஊடகங்கள் மற்றும் பங்குதாரர்களின் ஆய்வ முடிவுகளைத் தொடர்ந்து அதானி எண்டர்பிரைசஸ் டாவ் ஜோன்ஸ் நிலைத்தன்மை குறியீட்டிலிருந்து நீக்கப்படும் என S&P டாவ் ஜோன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டாவ் ஜோன்ஸ் நிலைத்தன்மை குறியீடு என்றால் என்ன..?

3 அதானி குழும பங்குகள் மீது கூடுதல் கண்காணிப்பு.. NSE அறிவிப்பு..! 3 அதானி குழும பங்குகள் மீது கூடுதல் கண்காணிப்பு.. NSE அறிவிப்பு..!

டாவ் ஜோன்ஸ் நிலைத்தன்மை குறியீடு

டாவ் ஜோன்ஸ் நிலைத்தன்மை குறியீடு

டாவ் ஜோன்ஸ் நிலைத்தன்மை குறியீடு (Dow Jones Sustainability Indices) என்பது S&P டாவ் ஜோன்ஸ் குறியீடு மற்றும் S&P Dow Jones Indices இன் RobecoSAM ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டாண்மையின் கீழ் இயங்கும் ஆயிரக்கணக்கான நிறுவனங்களின் நிலைத்தன்மை (Sustainability) செயல்திறனை மதிப்பிடும் ஒரு முக்கியக் குறியீடாகும். டாவ் ஜோன்ஸ் நிலைத்தன்மை குறியீடு 1999 இல் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ப்பரேட் நிலைத்தன்மை மதிப்பீடு

கார்ப்பரேட் நிலைத்தன்மை மதிப்பீடு

RobecoSAM உருவாக்கப்பட்டு உள்ள கார்ப்பரேட் நிலைத்தன்மை மதிப்பீடு அடிப்படையில் S&P Dow Jones Indices கீழ் பட்டியலிடப்பட்டு உள்ள நிறுவனங்களின் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் வாய்ப்புகளை மதிப்பிட்டு இதன் நிலைத்தன்மை படி டாவ் ஜோன்ஸ் நிலைத்தன்மை குறியீட்டில் ஒரு நிறுவனம் சேர்க்கப்படும்.

 நிலைத்தன்மை அளவுகோல்

நிலைத்தன்மை அளவுகோல்

உலகளாவிய நிலைத்தன்மை அளவுகோல்களாக இருப்பது மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நிலைத்தன்மை முதலீட்டில் முக்கிய இணைப்புப் புள்ளியாக டாவ் ஜோன்ஸ் நிலைத்தன்மை குறியீடு மாறியுள்ளது. 2012ல் S&P குறியீடுகள் மற்றும் டாவ் ஜோன்ஸ் குறியீடுகள் இணைப்பின் மூலம் ஆகியவற்றின் மூலம் S&P டாவ் ஜோன்ஸ் குறியீடுகள் உருவாக்கப்பட்டது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச்

ஹிண்டன்பர்க் ரிசர்ச்

ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பின் அறிக்கை வெளியானதிற்குப் பின்பு அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி குழுமத்தின் பிற நிறுவனங்களும் தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய விஷயமாக மாறியுள்ளது.

Citigroup, கிரெடிட் சூசி அறிவிப்பு

Citigroup, கிரெடிட் சூசி அறிவிப்பு

செபி, ஆர்பிஐ அமைப்புகள் அதானி குழுமம் மீது முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில், அமெரிக்காவின் Citigroup நிறுவனத்தின் வெல்த் பிரிவும், சுவிஸ் நிதி நிறுவனமான கிரெடிட் சூசி நிறுவனமும் மார்ஜின் கடன்களுக்குக் கௌதம் அதானி-யின் குழும நிறுவனங்களின் பத்திரங்களைப் பிணையமாக ஏற்றுக்கொள்வதை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது மட்டும் அல்லாமல் இதற்கு No Lending Value என்ர தர குறியீட்டையும் அளித்துள்ளது.

Dow Jones Sustainability குறியீடு

Dow Jones Sustainability குறியீடு

இதற்குப் பின்பு தான் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி வர்த்தகம் திறக்கப்படுவதற்கு முன்னதாக, Dow Jones Sustainability குறியீட்டில் இருந்து நீக்கப்படும் என்று S&P Dow Jones குறியீடு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியக் கேள்வி

முக்கியக் கேள்வி


ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பின்பு அதானி குழுமம் பதில் அளித்தாலும், ஹிண்டன்பர்க் பல முக்கியமான கேள்விகளுக்குப் பதில் அளிக்கவில்லை எனச் சில முக்கியமான கேள்விகளைப் பட்டியலிட்டு மறு அறிக்கையை வெளியிட்டது. இதில் முக்கியமாகக் கௌதம் அதானி சகோதரர் வினோத் அதானிக்கு 38க்கும் அதிகமான வெளிநாட்டு நிறுவனங்கள் உடனான தொடர்பு, அதானி குழுமம் - வினோத் அதானி - சீன நாட்டவர் Chang Chung Ling உடன் தொடர்பு குறித்துக் கேள்வி எழுப்பியது.

FPO ரத்து

FPO ரத்து

இதன் பின்பு அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்கு விலை அதன் FPO விலை காட்டிலும் குறைவாக இருந்த காரணத்தால் முதலீட்டாளர்கள் பணத்தையும், நம்பிக்கையும் காப்பாற்ற அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 20,000 கோடி ரூபாய் FPO-வை ரத்துச் செய்து அதானி குழுமம்.

25 சதவீதம் வரை சரிவு

25 சதவீதம் வரை சரிவு

இதைத் தொடர்ந்து இன்று அதானி எண்டர்பிரைசஸ் பங்கு மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் 25 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதனால் அதானி குழும சந்தை மதிப்பீட்டில் பெரும் சரிவையும், அதிகப்படியான தடுமாற்றத்தைப் பதிவான காரணத்தால் தற்போது Dow Jones Sustainability குறியீட்டில் இருந்து அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை நீக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adani Enterprises Will be removed from Dow Jones Sustainability Indices before feb 7

Adani Enterprises Will be removed from Dow Jones Sustainability Indices before feb 7
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X