அதானிக்கு கிடைச்ச அருமையான வாய்ப்பு.. அதுவும் ரூ.1,546 கோடியில்.. அடுத்து என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் பலவேறு வணிகங்களில் ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக பவர், இயற்கை வளங்கள், தளவாடங்கள், வேளாண் வணிகம், ரியல் எஸ்டேட், நிதி சேவைகள், பாதுகாப்பு மற்றும் விண்வெளி, எண்ணெய் மற்றும் உணவு, எரிவாயு வர்த்தகம், பவர் டிரான்ஸ்மிஷன், லாகிஸ்டிக்ஸ் உள்ளிட்ட பல வர்த்தகங்களை செய்து வருகிறது.

இப்படி பல வர்த்தகங்களில் கொடி கட்டி பறந்து வரும் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு தற்போது இன்னொரு புதிய வர்த்தக வாய்ப்பும் கிடைத்துள்ளது.

மிகப்பெரிய வாய்ப்பு
 

மிகப்பெரிய வாய்ப்பு

அது என்ன அப்படி ஒரு பெரிய வாய்ப்பு என்று கேட்கிறீர்களா? அது ஆந்திராவில் பாரத்மாலா பாரியோஜனாவின் கீழ் ஆந்திராவில் என்ஹெச்-16 நீளத்தை கட்டியெழுப்ப இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் 1546 கோடி ரூபாய் திட்டத்தினை வென்றுள்ளது. இதற்கான கடிதத்தினையும் இந்த நிறுவனம் பெற்றுள்ளது.

நல்ல ஆர்டர்

நல்ல ஆர்டர்

இந்த திட்டத்தில் கோலாபுடியிலிருந்து சின்னககனி வரையிலான விஜயவாடா பைபாஸின் ஆறு பாதைகள் மற்றும் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே உள்ள பெரிய பாலம் உட்பட பல கட்டுமானத் திட்டங்களுக்கான பாரத்மாலா பார்யோஜனா திட்டத்தின் கீழ் ஆர்டர் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பாரத்மாலா பாரியோஜனா என்பது அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட சாலை மற்றும் நெடுஞ்சாலைத் திட்டமாகும்.

இவ்வளவு செலவா?

இவ்வளவு செலவா?

17.88 கிலோமீட்டர் திட்டத்திற்கான நிறுவனத்தின் ஏல திட்ட செலவு 1,546.31 கோடி ரூபாயாக இருந்தது. இது 2.5 ஆண்டுகளில் நிறைவடையும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் போக்குவரத்துத் துறையில் கவர்ச்சிகரமான வாய்ப்புகளை தொடர்ந்து மதிப்பீடு செய்து ஏலம் எடுத்து வருகிறது.

பல இடங்களில் கட்டமைப்பு
 

பல இடங்களில் கட்டமைப்பு

சிக்கலான மற்றும் மகத்தான உள்கட்டமைப்பு திட்டங்களை பதிவு நேரத்தில் மற்றும் உலகத் தரம் வாய்ந்த தர நிலைகளுக்கு அமைவதற்கும் அவற்றை வெற்றிகரமாக இயக்குவதற்கும் முழு தனது நிபுணத்துவத்தையும் அனுபவத்தினையும் பயன்படுத்தும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்துடன் சேர்ந்து அதானி குழுமம் சட்டீஸ்கர், தெலுங்கானா மற்றும் ஆந்திரபிரதேசம் உள்ளிட்ட நான்கு இடங்களில் திட்டங்களைக் கொண்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: adani nhai அதானி
English summary

Adani enterprises wins Rs.1,546 cr project from NHAI

Adani enterprises said wins Rs.1,546 crore national highways authority of india project under Bharatmala pariyojana.
Story first published: Wednesday, March 11, 2020, 20:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X