முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்.. கெளதம் அதானி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவினை சேர்ந்த பிரபல ஷார்ட் செல்லரான ஹிண்டர்ன்பர்க் நிறுவனம், கடந்த வாரம் அதானி குழுமம் குறித்து ஒரு ஆய்வறிக்கையினை வெளியிட்டது. இந்த ஆய்வறிக்கையினால் இன்று வரையில் பெரும்பாலான அதானி குழும பங்குகள் சரிவிலேயே காணப்படுகின்றன.

இது ஒரு புறம் எனில், மறுபுறம் இந்த காலகட்டத்தில் தான் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய உரிமை பங்கு வெளியீடானது செய்யப்பட்டது.

ஆரம்பத்தில் ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையால் தாக்கம் இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், உரிமை பங்கு வெளியீட்டில் முழு பங்குகளுமே விற்பனை செய்யப்பட்டன. இதற்கான விண்ணப்பங்களும் முழுமையாக பெறப்பட்டது.

ஹிண்டர்ன்பர்க் அறிக்கையால் பிரச்சனை இல்லை.. FPO-க்கு முழுக்க விண்ணப்பம்.. அதானி பெரும் நிம்மதி! ஹிண்டர்ன்பர்க் அறிக்கையால் பிரச்சனை இல்லை.. FPO-க்கு முழுக்க விண்ணப்பம்.. அதானி பெரும் நிம்மதி!

முதலீட்டாளர்களின் நலனே முக்கியம்

முதலீட்டாளர்களின் நலனே முக்கியம்


இது முதலீட்டாளர்கள் அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கை குறையவில்லை என்பதை காட்டியது என்றே கூட கூறலாம். ஆனாலும் கூட தொடர்ந்து அதானி குழும பங்குகள் சரிவினையே கண்டு வருகின்றது எனலாம். இதற்கிடையில் தான் குழுமம் முதலீட்டாளர்களின் நலன் கருதி, 2.5 பிலியன் டாலர் மதிப்பிலான உரிமை பங்கு வெளியீட்டினையே ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

வியத்தகு வளர்ச்சி

வியத்தகு வளர்ச்சி

ஹிண்டர்ன்பர்க் அறிக்கையின் மத்தியில் அதானி குழுமம் கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக இழப்பினை கண்டுள்ளது. இது சந்தையில் மேற்கொண்டு கவலையினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். அதானி குழும நிறுவனம் சமீபத்திய ஆண்டுகளாகவே ஒரு வியத்தகு வளர்ச்சியினை கண்டது. இதற்கிடையில் தான் தொழிலதிபரான கெளதம் அதானி, சர்வதேச அளவில் பில்லியனர்கள் பட்டியலில் மிக வேகமாக உயர்ந்தார்.

டாப் 10ல் இல்லை
 

டாப் 10ல் இல்லை

எனினும் இது நீண்டகாலம் நீடிக்கவில்லை எனலாம். ஹிண்டர்ன்பர்க்கின் அறிக்கைக்கு பிறகு, தற்போது டாப் 10 பில்லியனர்கள் பட்டியலில் இருந்தும் வெளியேறியுள்ளார். ஆசியாவில் முதல் பணக்காரர் என்ற இடத்தில் இருந்தும் விலகியுள்ளார்.

கவலையளிக்கும் விஷயம்

கவலையளிக்கும் விஷயம்

சர்வதேச அளவில் தொடர்ந்து தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் இந்த முதலீட்டாளர், பல்வேறு வணிக கூட்டாளர்களையும் தங்களுடன் இணைத்து வருகின்றது. இத்தகைய சூழலில் ஹிண்டர்ன்பர்க்கின் அறிக்கையானது, அதானியினை பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது எனலாம். சொல்லப்போனால் இது ஒரு கவலையளிக்கும் விஷயம் என்றே கூறலாம்.

முதலீட்டாளர்கள் கவலை

முதலீட்டாளர்கள் கவலை

இத்தகைய பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அதானி குழுமத்தின் உரிமை பங்கு வெளியீட்டின் மத்தியில், FPO வெளியீட்டில் முழுமையான சந்தாவினை பெற்றுள்ளது. எனினும் அதானி குழுமத்தில் ஏற்பட்டுள்ள சரிவானது தொடர்ந்து கொண்டுள்ளது எனலாம். இது மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது அதானி குழும முதலீட்டாளர்கள் மத்தியிலும் பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் தான் அதானி குழுமம் இப்படி ஒரு முடிவினை எடுத்துள்ளது.

அதானியின் கருத்து?

அதானியின் கருத்து?

இது குறித்து அதானி வீடியோவில் எனது முதலீட்டாளர்களின் நலன் மிக முக்கியமானது. மற்றவை எல்லாம் இரண்டாம்பட்சம் தான். எனவே இழப்புகளில் இருந்து காப்பாற்ற இந்த வெளியீட்டினை திரும்ப பெற்றுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

மற்றவர்களின் நிலை

மற்றவர்களின் நிலை

எது எப்படியோ அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் எஃப்பிஓ முதலீட்டாளர்களுக்கு இது பாதுகாப்பான விஷயம் தான். எனினும் மற்ற முதலீட்டாளர்களின் நிலை தான் கவலையளிக்கும் ஒன்றாக உள்ளது எனலாம். மற்ற முதலீட்டாளர்கள் பெரும் இழப்பினை கண்டுள்ள நிலையில், அவர்களின் இழப்புக்கு அதானி குழுமம் என்ன செய்ய போகிறதோ தெரியவில்லை. 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adani explained that the cancellation of Adani Enterprises FPO to protect investors from losses

Adani explained that the cancellation of Adani Enterprises FPO to protect investors from losses
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X