அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் கிளை நிறுவனமான அதானி ரினியூவபிள் எனர்ஜி ஹோல்டிங் டூ லிமிடெட், ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் எஸ்ஸல் சௌர்யா உர்ஜா நிறுவனத்தின் 50 சதவீத ஈக்விட்டி பங்குகளை எஸ்ஸல் இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்து சுமார் 15 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளது.
அதானி குழுமம் மின்சார உற்பத்தி, விநியோகம், பரிமாற்றம் என அனைத்து பிரிவிலும் இருக்கும் காரணத்தால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் மின்சாரம் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில் தொடர்ந்து இத்துறையில் முதலீடு செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாகத் தான் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தின் எஸ்ஸல் சௌர்யா உர்ஜா நிறுவனத்தின் பங்குகளை வாங்குகிறது.
சௌர்யா உர்ஜா நிறுவனம்
ராஜஸ்தான் மாநில அரசு மற்றும் IL&FS Energy Development நிறுவனம் இணைந்து 50:50 என்ற கூட்டணியில் உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் சௌர்யா உர்ஜா நிறுவனம். இந்த நிறுவனம் ரினியூவபிள் எனர்ஜி திட்டங்களுக்கான கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது.
எஸ்ஸல் இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ்
இந்த நிலையில் சௌர்யா உர்ஜா நிறுவனத்தின் 50 சதவீத பங்குகள் ராஜஸ்தான் மாநில அரசிடம் இருக்கும் வேளையில், மீதமுள்ள 50 சதவீத பங்குகள் எஸ்ஸல் இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்திடம் உள்ளது. இந்தப் பங்குகளைத் தான் தற்போது அதானி ரினியூவபிள் எனர்ஜி ஹோல்டிங் டூ லிமிடெட் வாங்குகிறது.
அதானி ரினியூவபிள் எனர்ஜி ஹோல்டிங் டூ
அதானி ரினியூவபிள் எனர்ஜி ஹோல்டிங் டூ லிமிடெட் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாங்கள் Essel Infraprojects Ltd உடன் ஒரு பிணைப்பு ஒப்பந்தத்தில் நுழைந்துள்ளோம். இந்தச் சௌர்யா உர்ஜா நிறுவனத்தின் 50 சதவீத பங்குகள் ராஜஸ்தான் அரசிடம் தொடர்ந்து இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
750 மெகாவாட் சோலார் பார்க்
ராஜஸ்தான் மாநிலத்தில் 750 மெகாவாட் திறன் கொண்ட சோலார் பார்க்-ஐ அதானி ரினியூவபிள் எனர்ஜி வைத்திருக்கிறது. இந்தத் தளத்தில் இருந்து 2021-22 ஆம் நிதியாண்டில் 9.87 கோடி ரூபாய் அளவிலான விற்றுமுதல்-ஐ பெற்றதுள்ளது.
அதானி ரினியூவபிள் எனர்ஜி
அதானி ரினியூவபிள் எனர்ஜி-இன் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் 50 கோடி ரூபாய் மற்றும் செலுத்தப்பட்ட மூலதனம் 46.56 கோடி ரூபாய். டெவலப்பர்களால் ரினியூவபிள் எனர்ஜி உற்பத்தி ஆலைகளை அமைக்க அதானி சோலார் பூங்காக்களை உருவாக்கி அளிக்கிறது.
ராஜஸ்தான் மாநில வர்த்தகம்
இந்தக் கையகப்படுத்தல் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் வர்த்தகம் விரிவடையும். இந்த மாநிலத்தில் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (AGEL) ஏற்கனவே ராஜஸ்தான் மாநில அரசுடன் ஒரு கூட்டு நிறுவனத்தில் கீழ் சோலார் பூங்காவைச் சொந்தமாக வைத்து இயக்கி வருகிறது. இதன் கூட்டணி நிறுவனத்தின் பெயர் அதானி ரினியூவபிள் எனர்ஜி பார்க் ராஜஸ்தான் லிமிடெட். இது 2015 ஆம் ஆண்டு மே 27 தேதி உருவாக்கப்பட்டது.
அதானி கிரீன் எனர்ஜி பங்குகள்
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 3.72 சதவீதம் குறைந்து 2,085.50 ரூபாயாக உள்ளது. ஜனவரி மாதம் 18 நாட்களில் மட்டும் சுமார் 10.42 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதானி கிரீன் எனர்ஜி பங்குகளின் 52 வார உயர்வு 3050.00 ரூபாய்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications