அள்ளிக் கொடுத்த அதானி..! அச்சச்சோ... மிஸ் பண்ணிட்டீங்களா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதானி க்ரீன் எனர்ஜி என்கிற பெயரில் மரபுசாரா எரிசக்தியைத் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனம் கெளதம் அதானியின் அதானி குழுமத்தைச் சேர்ந்தது.

இந்த நிறுவனத்தின் ஜூலை - செப்டம்பர் 2019 காலாண்டில் 102 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. சரி பங்கு விலைக்கு வருவோம்.

அள்ளிக் கொடுத்த அதானி..! அச்சச்சோ... மிஸ் பண்ணிட்டீங்களா..?

இந்திய பங்குச் சந்தைகளில் அதானி க்ரீன் எனர்ஜி என்கிற பெயரில் இந்த நிறுவனத்தின் பங்குகளும் வர்த்தகமாகி வருகின்றன. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருட காலத்தில் (சரியாகச் சொன்னால் 10 மாதங்களில்) 300 % லாபம் கொடுத்து இருக்கிறது என்றால் நம்புவீர்களா..? மேற்கொண்டு படியுங்கள்.

3 மடங்கு லாபம்

கடந்த பிப்ரவரி 19, 2019-ல் அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் (Adani Green Energy limited) நிறுவனத்தின் பங்கு விலை வெறும் 30 ரூபாய். ஆனால் இன்று அதே அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை 132 ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. ஆக சுமார் 10 மாத காலத்துக்குள், இந்த அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை 340 சதவிகிதம் (3.4 மடங்கு) விலை அதிகரித்து இருக்கிறது.

41,000-த்தில் நிலை கொண்ட சென்செக்ஸ்,..! 12,100-ல் நிற்கும் நிஃப்டி..!41,000-த்தில் நிலை கொண்ட சென்செக்ஸ்,..! 12,100-ல் நிற்கும் நிஃப்டி..!

100% லாபம்

பிப்ரவரியில் இருந்து எல்லாம் இந்த பங்கு கண்ணில் படவில்லையா..? சரி, கடந்த செப்டம்பர் 05, 2019, வியாழக்கிழமை அன்று இதே அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனப் பங்குகளின் விலை வெறும் 45 ரூபாய் தான். அன்று இந்த பங்குகளை வாங்கி, இன்று 132 ரூபாய்க்கு விற்று இருந்தால் கூட சுமார் 193 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம். அதற்கும் கொடுத்து வைக்கவில்லையா..? மேற்கொண்டு படியுங்கள்.

அள்ளிக் கொடுத்த அதானி..! அச்சச்சோ... மிஸ் பண்ணிட்டீங்களா..?

75% லாபம்

இந்த செப்டம்பர் மாத கதை கூட ஒத்து வராதவர்கள், அக்டோபர் மாதத்தில் மட்டுமாவது கவனம் செலுத்தி வாங்கி இருந்தால் கூட ஒரு நல்ல லாபம் பார்த்து இருக்கலாம். சரியாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் கடந்த அக்டோபர் 01, 2019 அன்று இந்த அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் பங்குகளின் விலை 56 ரூபாய் தான். ஆக அன்று வாங்கி இருந்தால் கூட இன்று 132 ரூபாய்க்கு விற்று வெளியேறி சுமார் 135 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம்.

53 சதவிகிதம்

அதுவும் போச்சு என்றால், கடந்த நவம்பர் 08, 2019, அன்று இதே அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனப் பங்குகளின் விலை வெறும் 86 ரூபாய்க்கு வர்த்தகமானது. இந்த சமயத்தில் பல பத்திரிகைகளும் அதானி கடந்த மாதங்களில் கொடுத்த லாபத்தைப் பற்றி எழுதித் தள்ளி இருந்தார்கள். அன்று இந்த பங்குகளை வாங்கி, இன்று 132 ரூபாய்க்கு விற்று இருந்தால் கூட சுமார் 53 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம்.

36 சதவிகிதம்

கிட்ட தட்ட எல்லா பொருளாதார பத்திரிகைகளிலும் வந்த பின் கூட ஒரு நல்ல வாய்ப்பு இருந்தது. கடந்த நவம்பர் 21, 2019, அன்று அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனப் பங்குகளின் விலை வெறும் 97 ரூபாய் தான். இந்த நேரத்தில் செப்டம்பர் 2019 காலாண்டு முடிவுகள் வேறு பாசிட்டிவ்வாக வந்து இருந்தது. அன்று இந்த பங்குகளை வாங்கி, இன்று 132 ரூபாய்க்கு விற்று இருந்தால் கூட சுமார் 36 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம். அதற்கும் கொடுத்து வைக்கவில்லை என்றால் சத்தியமாக நமக்கு ராசி இல்லை என்று தான் பொருள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adani green energy share gave 340 percent profit in shares

The indian business conglomerate Adani group is managing the adani green energy. This company share zooms 340 percent in last 10 months.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X