ஒரே வருடத்தில் 420% லாபம்.. 10,000 முதலீடு செய்திருந்தால் 52,000 ரூபாய்.. மாஸ்காட்டும் அதானி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய வர்த்தகச் சந்தையில் கடந்த சில வருடங்களாக அதானி குழும நிறுவனங்கள் வியக்கவைக்கும் வளர்ச்சி அடைந்துள்ளது மூலம் நடுத்தர நிறுவனங்கள் பட்டியலில் நாட்டின் முன்னணி வர்த்தகச் சாம்ராஜ்ஜியம் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.

 

அதானி குழும நிறுவனங்களின் அதிரடி வளர்ச்சியின் மூலம் இந்நிறுவனத் தலைவரான கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பங்களின் சொத்து மதிப்பு டாடா, பிர்லா, வாடியா எனப் பல முன்னணி பணக்கார குடும்பங்களையும் கடந்துள்ளது.

அப்படி எந்த நிறுவனம் எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது என்று தானே கேட்குறீங்க.. வாங்க மொத்தத்தையும் டீடைலா சொல்றேன்.

அதானி டோட்டல் கேஸ்

அதானி டோட்டல் கேஸ்

மே 2020க்கும் மே 2021-க்கும் ஒப்பிடுகையில் அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் 12,604 கோடி ரூபாயில் இருந்து 1,47,292 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இது கிட்டதட்ட 1,069 சதவீத வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

பிற அதானி குழும நிறுவனங்கள்

பிற அதானி குழும நிறுவனங்கள்

இதுமட்டும் அல்லாமல் அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 842 சதவீதம், அதானி டிரான்ஸ்மிஷன் 715 சதவீதம், அதானி கிரீன் எனர்ஜி 442 சதவீதம், அதானி பவர் 176 சதவீதம், அதானி போர்ட்ஸ் அண்ட் SEZ 144 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.

420% அதிரடி வளர்ச்சி
 

420% அதிரடி வளர்ச்சி

இந்நிலையில் கடந்த ஒரு வருடத்தில் அதானி குரூப் நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 1.64 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 8.5 லட்சம் கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இது கிட்டதட்ட 420 சதவீத வளர்ச்சி.

ரூ.50,000 கோடி முதலீடு

ரூ.50,000 கோடி முதலீடு

இந்த அதிரடி வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணம் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழும நிறுவனங்கள் கடந்த சில வருடத்தில் மட்டும் சுமார் 50000 கோடி ரூபாய் அளவில் பல துறையில் முதலீடு செய்துள்ளது. அதிலும் மிக முக்கியமாகக் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 25,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

வர்த்தக விரிவாக்கம்

வர்த்தக விரிவாக்கம்

இந்த முதலீட்டு மூலம் மின்சாரம், துறைமுகம், கேஸ் விநியோகம், மின்சாரப் பகிர்மானம் எனப் பல துறையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது அதானி குழுமம். அதிலும் பல புதிய துறைகளில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது மட்டும் அல்லாமல் பல துறையில் பெரிய அளவில் ஆதிக்கம் செய்து வருகிறது அதானி குழுமம்.

கௌதம் அதானி சொத்து மதிப்பு

கௌதம் அதானி சொத்து மதிப்பு

இந்த அதிரடி வளர்ச்சியின் மூலம் கடந்த ஒரு வருடத்தில் கௌதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு 69 பில்லியன் டாலராக உயர்ந்து, நாட்டின் 2வது பெரும் பணக்காரர் ஆக உயர்ந்துள்ளார். இதன் மூலம் முதல் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானியின் 77 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை அடைய இன்னும் 8 பில்லியன் டாலர் மட்டுமே உள்ளது.

முதலீட்டில் வளர்ச்சி

முதலீட்டில் வளர்ச்சி

மேலும் கடந்த ஒரு வருடத்தில் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதைப் போல் முதலீட்டாளர்களின் முதலீட்டின் மதிப்பு பெரிய அளவில் உயர்ந்துள்ளது. அதாவது ஒரு வருடத்திற்கு முன்பு அதானி குழும நிறுவனத்தில் நீங்கள் 10000 ரூபாய் முதலீடு செய்திருந்தால் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பீடு 420 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதன் வாயிலாகத் தற்போது உங்கள் முதலீட்டு மதிப்பு 52,000 ரூபாய்.

10 மடங்கு வளர்ச்சி

10 மடங்கு வளர்ச்சி

இதேபோல் நீங்க சரியாகத் திட்டமிட்டு அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தில் மட்டும் நீங்கள் 10000 ரூபாய் தொகையை மொத்தமாக முதலீடு செய்திருந்தால் 1,06,900 ரூபாய் அளவிற்கு உங்கள் முதலீடு உயர்ந்திருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adani Group companies market cap increase over 420%: Investor favorite company

Adani Group companies market cap increase over 420%: Investor favorite company
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X