கடன் வலையில் சிக்கப்போகும் அதானி குழுமம்.. கௌதம் அதானியை காப்பாற்றப்போவது யார்..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆகவும், உலகின் 4வது பெரிய பணக்காரர் ஆகவும் இருக்கும் கோடீஸ்வரர் கௌதம் அதானி விமான நிலையம் முதல் துறைமுகம் வரை.. டெலிகாம் முதல் மீடியா வரை.. ரீடைல் முதல் மின்சாரம் வரை எனப் பல துறையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறார்.

ஆனால் இந்த வர்த்தக விரிவாக்கம், முதலீடுகள் அனைத்துமே அதிகப்படியான கடனில் தான் செய்யப்படுகிறது. சமீபத்தில் கூடச் சிமெண்ட் மற்றும் உலோக துறை வர்த்தகத்திற்காகப் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா-விடம் அதிகப்படியான கடன்களை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலகின் முன்னணி நிதியியல் தொடர்பான ஆய்வுகளையும், பகுப்பாய்வுகளைச் செய்யும் CreditSights நிறுவனம் அதானி குழுமம் குறித்து முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ரஷ்யாவை கைகழுவிய மேற்கத்திய நாடுகள்.. நாங்கள் இருக்கோம்.. ஆதரவு காட்டும் இந்தியா.. எதற்காக? ரஷ்யாவை கைகழுவிய மேற்கத்திய நாடுகள்.. நாங்கள் இருக்கோம்.. ஆதரவு காட்டும் இந்தியா.. எதற்காக?

CreditSights நிறுவனம்

CreditSights நிறுவனம்

உலகளவில் மிகவும் பிரபலமாக இருக்கும் பின்ச் குரூப்-ன் கிளை நிறுவனமான CreditSights அதானி குழுமத்தின் கடன் மற்றும் வேகமான வர்த்தக விரிவாக்கத்தை ஆய்வு செய்து "deeply overleveraged" என அறிவித்துள்ளது. அதாவது அதானி குழுமத்தின் சந்தை மதிப்பைக் காட்டிலும் கடன் அளவு அதிகப்படியாக உள்ளது என்பது பொருள்.

கடன் அளவு

கடன் அளவு

அதானி குழுமத்தில் பட்டியலிடப்பட்ட ஆறு நிறுவனங்களில் மொத்தக் கடன் FY22-இறுதியில் 2,30,900 கோடி ரூபாயாக இருந்தது. இது கையிருப்பில் உள்ள பணத்தைக் கழித்துவிட்டுக் கணக்குப்போட்டால் ஆதானி குழுமத்தின் 6 நிறுவனங்களின் நிகரக் கடன் 1,72,900 கோடி ரூபாய்.

கௌதம் அதானி
 

கௌதம் அதானி

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் கடந்த 5 வருடத்தில் ஏற்கனவே வர்த்தகம் செய்து வந்த துறைகளைத் தாண்டி பல புதிய துறைகளில் முதலீடு செய்து தனது வர்த்தகங்களை ராக்கெட் வேகத்தில் விரிவாக்கம் செய்து வருகிறது.

அதானி குழுமம்

அதானி குழுமம்

ஆனால் இதில் 90 சதவீத விரிவாக்கம் மற்றும் முதலீட்டுப் பணம் கடன் வாயிலாக வந்தது என்பதால் அதானி குழுமத்தின் கடன் அளவீடுகள் மற்றும் பணப்புழக்கத்தின் மீது அதிகப்படியான அழுத்தத்தை உருவாக்கியுள்ளது எனக் கிரெடிட்சைட்ஸ் செவ்வாயன்று அறிக்கையில் கூறியுள்ளது.

கழுத்து வரையில் கடன்

கழுத்து வரையில் கடன்

இந்த நிலை தொடர்ந்தாலோ அல்லது ஏதாவது ஒரு வர்த்தகம் மோசமான வர்த்தக நிலைக்குத் தள்ளப்பட்டாலோ அதானி குழுமம் கழுத்து வரையில் கடன்களை வைத்திருக்கும் காரணத்தால் மோசமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுக் கடன் வலைக்குள் தள்ளப்படும் வாய்ப்புகள் உள்ளது எனக் கிரெடிட்சைட்ஸ் தெரிவித்துள்ளது.

நல்ல விஷயம்

நல்ல விஷயம்

இதேவேளையில் ப்ரோமோட்டர் ஈக்விட்டி மூலதனத்தைத் திரும்பவும் குழும நிறுவனங்களிலேயே செலுத்தப்பட்டதற்கான சிறிய ஆதாரங்களை நாங்கள் காண்கிறோம். இது மிகப்பெரிய அளவில் விரிவடைந்துள்ள பேலென்ஸ் ஷீட்-ஐ சரி செய்யத் தேவையான நடவடிக்கையாகும் என்று கூறி இதைப் பாசிடிவ் ஆகப் பார்க்கிறது கிரெடிட்சைட்ஸ்.

முக்கியப் பிரச்சனை

முக்கியப் பிரச்சனை

அதானி குழுமம் புதிய மற்றும் தொடர்பில்லாத வணிகங்களில் நுழைகிறது. அவை பெரும்பாலும் அதிக மூலதனம் மிகுந்தவை என்பதால் செயல்படுத்தல் மேற்பார்வை குறித்த கவலைகளை எழுப்புகின்றன என ஆதானி குழுமத்தில் இருக்கும் முக்கியப் பிரச்சனைகளைக் கிரெடிட்சைட்ஸ் பட்டியலிடுகிறது.

போட்டி

போட்டி

சந்தை மேலாதிக்கத்தை அடைவதற்காக அதானி குழுமம் மற்றும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் இடையே சாத்தியமான வலுவான போட்டி "விவேகமற்ற நிதி முடிவுகளுக்கு" வழிவகுக்கும்.

அதானி குழுமம் மிதமான அளவிலான நிர்வாகம் மற்றும் ESG அபாயங்களுக்கு ஆளாகியுள்ளதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

அதானி எண்டர்பிரைசஸ்

அதானி எண்டர்பிரைசஸ்

அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் மூலம் "வலுவான மற்றும் நிலையான நிறுவனங்களை உருவாக்குவதற்கான வரலாற்றைக் கொண்டு உள்ளது அதானி குழுமம். ஆனால் சிறு சரிவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அளவிலான கடன்களை வைத்துள்ளது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி, பிரதமர் மோடி அரசாங்கத்துடன் "வலுவான உறவை பெற்றுள்ளார். இதேபோல் பல அரசு கொள்கை முடிவுகள் அதானி குழுமத்திற்குச் சாதகமாக விளங்குகிறது எனவும் கிரெடிட்சைட்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கிரெடிட்சைட்ஸ் அறிக்கை

கிரெடிட்சைட்ஸ் அறிக்கை

கிரெடிட்சைட்ஸ் நிறுவனத்தின் அதானி குறித்த அறிக்கையை லக்ஷ்மணன் ஆர், ரோஹன் கபூர் மற்றும் ஜொனாதன் டான் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். இந்த அறிக்கையின் எதிரொலியாக இன்று பல அதானி குழும பங்குகள் சரிவை எதிர்கொண்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adani Group 'deeply overleveraged', may spiral into debt trap

Adani Group 'deeply overleveraged', may spiral into debt trap கடன் வலையில் சிக்கப்போகும் அதானி குழுமம்.. கௌதம் அதானியை காப்பாற்றப்போவது யார்..?!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X