வியட்நாம் - களத்தில் இறங்கிய கரண் அதானி.. கௌதம் அதானியின் மூத்த வாரிசு வேற லெவல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வியட்நாம் அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அதானி குழுமம் அந்நாட்டின் துறைமுக எகோசிஸ்டம், காற்றாலை மற்றும் சூரிய சக்தி திட்டங்களில் சுமார் 3 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்ய திட்டமிட்டு வருவதாகக் தெரிவித்தது.

 

அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு வைத்து குற்றச்சாட்டுகளை விசாரிக்க செபிக்கு சுப்ரீம் கோர்டு உத்தரவிட்ட நிலையில், செபி-யின் விசாரணையின் போக்கை கண்காணிக்க சிறப்பு குழுவையும் நியமித்துள்ளது. இந்த சிறப்பு குழு வெளியிட்ட அறிக்கையில் இதுவரையில் செய்யப்பட்ட விசாரணையில் அதானி குழுமம் பங்கு விலையை உயர்த்த முறைகேடு செய்திருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.

 
வியட்நாம் - களத்தில் இறங்கிய கரண் அதானி.. கௌதம் அதானியின் மூத்த வாரிசு வேற லெவல்..!

இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களில் அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமாக இருக்கும் அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்குகள் 39.41 சதவீதம் உயர்ந்தது. தற்போது அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

இதை தொடர்ந்து அதானி குழுமம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பணிகளில் தீவிரம் காட்டியுள்ளது. இதற்கான சான்றாக கௌதம் அதானியின் மூத்த மகனும், அதானி போர்ஸ் அண்ட் SEZ நிறுவனத்தின் சிஇஓ-வாக இருக்கும் கரண் அதானி வியட்நாம் நாட்டின் பிரதமரான Pham Minh Chinh-ஐ அவர்களை நேரில் சந்தித்து பேசினார்.

உலகின் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் துறைமுகம், போக்குவரத்து, லாஜிஸ்டிக்ஸ், எரிசக்தி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் போன்ற பல துறைகளில் செயல்படும் அதானி குழுமம் இந்தியாவின் முன்னணி பொருளாதாரக் குழுவாக இருப்பதாக கரண் அதானி கூறினார்.

வியட்நாம் நாட்டில் துறைமுகங்கள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மட்டும் அல்லாமல், எனர்ஜி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்திலும் நீண்ட கால முதலீடுகளை குவிக்க முடிவு செய்துள்ளதாக கரண் அதானி கூறினார்.

அதானி குழுமம் தனது 3 பில்லியன் டாலர் முதலீட்டு திட்டத்தின் கீழ் வியட்நாம் நாட்டில் ஒரு green seaport ecosystem-ஐ உருவாக்கவும், காற்றாலை மற்றும் சோலார் பவர் பிளான்ட் அமைக்கவும் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது.

வியட்நாம் - களத்தில் இறங்கிய கரண் அதானி.. கௌதம் அதானியின் மூத்த வாரிசு வேற லெவல்..!

BSE, NSE உத்தரவு.. அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் நிலை என்ன..?BSE, NSE உத்தரவு.. அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் நிலை என்ன..?

கரண் அதானி உடனான சந்திப்பில் வியட்நாம் நாட்டின் பிரதமரான Pham Minh Chinh அந்நாட்டின் வளர்ச்சி பாதையில் முக்கியமாக 3 விஷயங்களுக்கு அதிகப்படியான முக்கியதுவம் கொடுப்பதாகவும், அதை விளங்கியும் உள்ளார். நிறுவனங்களை மேம்படுத்துதல், மனித வளத்தை மேம்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பை உருவாக்குதல் ஆகிய மூன்று மூலோபாய குறிக்கோள் என சின்ஹ் கரண் அதானிக்கு விளக்கினார்.

இதற்காக வியட்நாம் அரசு, இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களுக்கு போக்குவரத்து, எரிசக்தி, டிஜிட்டல் மற்றும் பருவ நிலை மாற்ற உள்கட்டமைப்பு போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்து, சிறந்த சூழ்நிலையை உருவாக்கி அளிக்கிறது என்றும் வியட்நாம் பிரதமர் Pham Minh Chinh என விளக்கியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adani Group investing 3 billion usd in Vietnam to build a green seaport ecosystem, invest in wind and solar power

Adani Group investing 3 billion usd in Vietnam to build a green seaport ecosystem, invest in wind and solar power
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X