ரத்தகளறியான அதானி குழும பங்குகள்.. 20 சதவீதம் வரையில் சரிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் கடந்த 2-3 வருடத்தில் அதிகப்படியான பங்கு முதலீட்டு லாபத்தைக் கொடுத்த நிறுவனங்களில் அதானி குழும நிறுவனப் பங்குகள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த நிலையில் Hindenburg அறிக்கை மூலம் புதன்கிழமை ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்து முதலீட்டாளர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் குடியரசு தின விடுமுறை முடிந்து இன்று வர்த்தகம் துவங்கிய பின்பு பெரும் பாதிப்பை எதிர்கொண்டது. இதனால் ரீடைல் முதலீட்டாளர்கள் இன்று பெரும் முதலீட்டு மதிப்பீட்டை இழந்துள்ளனர்.

அஜர்பைஜான் நாட்டில் தடம் பதிக்கும் கௌதம் அதானி..! அஜர்பைஜான் நாட்டில் தடம் பதிக்கும் கௌதம் அதானி..!

 மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையில் இருக்கும் அதானி குழுமத்தின் 10 நிறுவனப் பங்குகளும் இன்று சரிவை சந்தித்துள்ளது மட்டும் அல்லாமல், 20 சதவீதம் வரையில் சரிந்து நீண்ட கால முதலீட்டாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பெரும் சரிவுக்கு Hindenburg அறிக்கை முக்கியக் காரணமாக உள்ளது.

அதானி டேட்டல் கேஸ்

அதானி டேட்டல் கேஸ்

அதானி டேட்டல் கேஸ் பங்குகள் இன்று காலை வர்த்தகத்தில் 20 சதவீதம் வரையில் சரிந்தது. இதனால் முதலீட்டாளர்கள் ஓரே நாளில் பெரும் முதலீட்டு மதிப்பீட்டை இழந்தனர்.

10 நிறுவன பங்குகள்

10 நிறுவன பங்குகள்

தற்போது அதானி டேட்டல் கேஸ் 17.2 சதவீதம் சரிவு, அதானி டிரான்ஸ்மிஷன் 12.43 சதவீதம் சரிவு, அதானி கிரீன் 12.41 சதவீதம் சரிவு, அதானி எண்டர்பிரைசர்ஸ் 3.88 சதவீதம் சரிவு, அதானி பவர் 5 சதவீதம் சரிந்து லோவர் சர்கியூட் அளவீட்டைத் தொட்டது. அதானி வில்மார் மற்றும் NDTV 5 சதவீதம் சரிந்து லோவர் சர்கியூட் அளவீட்டைத் தொட்டது.

பெரும் சரிவு

பெரும் சரிவு

அதானி போர்ட்ஸ் அண்ட் SEZ நிறுவன பங்குகள் 4.80 சதவீதம் வரையில் சரிவு, ஏசிசி லிமிடெட் 6.07 சதவீதம் சரிவு, அம்புஜா சிமெண்ட்ஸ் 8.13 சதவீதம் வரையில் சரிவு சரிந்துள்ளது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச்

ஹிண்டன்பர்க் ரிசர்ச்

அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கௌதம் அதானிக்கு சொந்தமான நிறுவனங்களை "வெட்கக்கேடான" சந்தை கையாளுதல் மற்றும் கணக்கியல் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டது. Hindenburg அறிக்கை அதானி குழும நிறுவன பங்குகளை மட்டும் அல்லாமல் கௌதம் அதானியின் சொத்து மதிப்பிலும் பெரும் ஓட்டையைப் போட்டு உள்ளது.

அதானி மறுப்பு

அதானி மறுப்பு

இதேபோல் அதானி குழுமத்தின் கடன் இக்குழுமத்தை நிச்சயமற்ற நிதி நிலைக்குத் தள்ளியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தக் குற்றசாட்டுக்களைக் கடுமையாக மறுத்துள்ளது அதானி குழுமம், இதேபோல் Hindenburg நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளது அதானி குழுமம்.

மொத்த கடன்

மொத்த கடன்

தற்போதயத் தகவல் படி அதானி குழுமத்தின் டாப் 5 நிறுவனங்களான அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி போர்ட்ஸ், அதானி பவர், அதானி கிரீன், அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் மொத்த கடன் மதிப்பு 2.1 லட்சம் கோடி ரூபாய்.

சென்செக்ஸ், நிஃப்டி குறியீடு

சென்செக்ஸ், நிஃப்டி குறியீடு

இதன் எதிரொலியாக வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் குறியீடு 644.34 புள்ளிகள் சரிந்து 59,560.72 புள்ளிகளை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 59,390 புள்ளிகள் வரையில் சரிந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடு இன்று 137.85 புள்ளிகள் சரிந்து 17,754.10 புள்ளிகளை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக நிஃப்டி குறியீடு 17,715.55 புள்ளிகளை எட்டியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adani Group investors lost huge money; 10 companies shares crash upto 20% amid Hindenburg report

Adani Group investors lost huge money; 10 companies shares crash upto 20% amid Hindenburg report
Story first published: Friday, January 27, 2023, 12:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X