100 பில்லியன் டாலர் இழப்பு.. அதானி குழும பங்குகள் தொடர் சரிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான FPO திட்டத்திற்கு முழுமையான முதலீட்டை பெற்ற பின்பும் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் நஷ்டத்தைக் கருத்தில் கொண்டு ரத்து செய்த நிலையில், இன்று அதானி குழுமப் பங்குகள் அதிகளவிலான சரிவை சந்தித்து வருகிறது.

கடந்த வார அமெரிக்காவின் ஷாட் செல்லர் மற்றும் நிதியியல் முறைகேடுகள் குறித்த ஆய்வு செய்து வரும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கை வெளியானதில் இருந்து தொடர்ந்து சரிந்து வரும் அதானி குழும பங்குகள் 6வது நாளாக இன்றும் சரிந்துள்ளது.

இதன் வாயிலாக இன்றைய வர்த்தகத்தில் அதானி குழுமம் ஒட்டுமொத்த சந்தை மூலதன மதிப்பில் சுமார் 100 பில்லியன் டாலரை ஜனவரி 25 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரையில் எதிர்கொண்டு உள்ளது.

அடுத்த அதிரடி.. அதானி குழுமம் வாங்கிய கடன் எவ்வளவு? வங்கிகளிடம் கேட்கிறது ஆர்பிஐ..!! அடுத்த அதிரடி.. அதானி குழுமம் வாங்கிய கடன் எவ்வளவு? வங்கிகளிடம் கேட்கிறது ஆர்பிஐ..!!

அதானி எண்டர்பிரைசஸ்

அதானி எண்டர்பிரைசஸ்

அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விற்பனை திரும்பப் பெறப்பட்டது முதலீட்டாளர்களுக்காக என கௌதம் அதானி தெரிவித்தாலும், சந்தையில் முதலீட்டாளர்கள் மத்தியில் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்யும் எண்ணம் தொடர்கிறது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை

இதன் வாயிலாகவே இன்று மும்பை பங்குச்சந்தையில் இருக்கும் அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களில் 8 நிறுவனங்கள் சரிவுடன் உள்ளது. இதே வேளையில் அதானி குழுமம் சந்தை மதிப்பீட்டில் 100 பில்லியன் டாலர் அளவிலான சரிவை எட்டிய கையோடு கௌதம் அதானி சொத்து மதிப்பிலும் சரிவை கண்டுள்ளது.

கௌதம் அதானி

கௌதம் அதானி

ஜனவரி 24 வரையில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த கௌதம் அதானி இன்று டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேறியது மட்டும் அல்லாமல் முகேஷ் அம்பானிக்குப் பின் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கௌதம் அதானி ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற நிலையை இழந்துள்ளார்.

முதலீட்டாளர்கள் பணம்

முதலீட்டாளர்கள் பணம்

அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் தனது FPO விலையைக் காட்டிலும் மோசமாக சரிந்த நிலையிலும், சந்தையில் அதிகமான தடுமாற்றம் இருக்கும் வேளையில், முதலீட்டாளர்கள் பணத்தைக் காப்பாற்றவும், முதலீட்டாளர்கள் நம்பிக்கையைத் தொடர்ந்து காப்பாற்றவும் FPO திட்டத்தை ரத்துச் செய்வதாக அறிவித்துப் பணத்தைத் திரும்பவும் முதலீட்டாளர்களுக்கே அளிக்க உள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

கிரெடிட் சுசி ஏஜி

கிரெடிட் சுசி ஏஜி

இதேவேளையில் கிரெடிட் சுசி ஏஜி நிறுவனம் தனது தனியார் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மார்ஜின் லோன் வழங்குவதற்கு அதானி குரூப் நிறுவனங்களின் பத்திரங்களைக் கோலேட்ரல் ஆகப் பெறுவதை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் கிரெடிட் சுசூசி ஏஜி நிறுவனம் அதானி போர்ட்ஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதான் எலக்ட்ரிசிட்டி மும்பை ஆகிய நிறுவனம் வெளியிட்ட பத்திரங்களுக்கு zero-lending value எனக் குறியிட்டு உள்ளது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இன்று ரிசர்வ் வங்கி இந்தியாவில் இயங்கி வரும் உள்நாட்டு வங்கிகளிடம் அதானி குழும நிறுவனங்களிடம் இருக்கும் கடன் வெளிப்பாடு குறித்த விவரங்களைக் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியான, அடுத்த நிமிடத்தில் பங்குச்சந்தை அதானி நிறுவன பங்குகள் கூடுதலாகச் சரிய துவங்கியது.

தகவல் சேகரிப்பு

தகவல் சேகரிப்பு

இதன் மூலம் ரிசர்வ் வங்கி இந்தியாவில் எந்தெந்த வங்கிகள் எவ்வளவு கடனை அதானி குழுமத்திற்கு அளித்துள்ளது என்பது குறித்த தகவல்களைச் சேகரிக்க உள்ளது.

இன்றைய வர்த்தகச் சரிவு

இன்றைய வர்த்தகச் சரிவு

அதானி எண்டர்பிரைசஸ் - 7.08 சதவீதம் சரிவு
அதானி போர்ட்ஸ் - 1.07 சதவீதம் சரிவு
அதானி பவர் - 4.98 சதவீதம் சரிவு
அதானி டிரான்ஸ்மிஷன் - 10.00 சதவீதம் சரிவு
அதானி கிரீன் எனர்ஜி - 10.00 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 10.00 சதவீதம் சரிவு
அதானி வில்மார் - 4.99 சதவீதம் சரிவு
ஏசிசி லிமிடெட் - 1.05 சதவீதம் உயர்வு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 6.52 சதவீதம் உயர்வு
NDTV - 4.99 சதவீதம் சரிவு

ஜனவரி 25 முதல் பிப்ரவரி 1 (5 வர்த்தக நாள்)

ஜனவரி 25 முதல் பிப்ரவரி 1 (5 வர்த்தக நாள்)


அதானி எண்டர்பிரைசஸ் - 37 சதவீதம் சரிவு
அதானி போர்ட்ஸ் - 35 சதவீதம் சரிவு
அதானி பவர் - 22.81 சதவீதம் சரிவு
அதானி டிரான்ஸ்மிஷன் - 37.61 சதவீதம் சரிவு
அதானி கிரீன் எனர்ஜி - 39.78 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 51.24 சதவீதம் சரிவு
அதானி வில்மார் - 22.64 சதவீதம் சரிவு

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adani Group lost 100 billion dollar market capitalisation from Jan 25 hindenburg research report

Adani Group lost 100 billion dollar market capitalisation from Jan 25 hindenburg research report
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X