அட அடிச்சிக்காதீங்கப்பா.. அடம்பிடிக்கும் அம்பானி, அதானி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் இரண்டு பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான அதானி குழுமம் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை சத்தீஸ்கர்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமான எஸ்கேஎஸ் பவர் நிறுவனத்தை வாங்குவதற்காகக் கடுமையான போட்டிப்போட்டு வருகின்றனர்.

 

நிலக்கரியை அடிப்படையாகக் கொண்டு இயக்கும் மின்சார உற்பத்தி ஆலை கொண்ட எஸ்கேஎஸ் பவர் நிறுவனம், பாங்க் ஆ பரோடா மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரண்டு வங்கிகளுக்குச் சுமார் 1,900 கோடி ரூபாய் கடன் நிலுவை வைத்துள்ளது.

அதானி குழுமம் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மட்டும் அல்லாமல் எஸ்கேஎஸ் பவர் நிறுவனத்தைக் கைப்பற்ற NTPC, Torrent Power, Sarda Energy & Minerals, Jindal Power மற்றும் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட Vantage Point Asset Management ஆகியவை போட்டிப்போடு வருகிறது.

ஐடி ஊழியர்களைப் பொட்டியை கட்ட தயாரா இருங்க..! ஐடி ஊழியர்களைப் பொட்டியை கட்ட தயாரா இருங்க..!

அம்பானி மற்றும் அதானி

அம்பானி மற்றும் அதானி

அம்பானி மற்றும் அதானி ஆகிய இரு இந்திய பணக்காரர்களும் பல துறையில் போட்டிப்போட்டு வரும் நிலையில் சமீப காலமாக அனல் மின் நிலையத்தைக் கைப்பற்றுவதில் அதிகப்படியான ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிலையில் எஸ்கேஎஸ் பவர் நிறுவனத்தைக் கைப்பற்ற என்ன காரணம்..?

அதானி நிறுவனம்

அதானி நிறுவனம்

அதானி நிறுவனம் ஏற்கனவே அனல் மின்சாரப் பிரிவில் இருக்கும் நிலையில் தொழிலில் ஈடுபட்டுள்ளது. அதானி பவர் நிறுவனத்தின் வாயிலாகக் குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமார் 13,650 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல்மின் நிலையை வைத்துள்ளது.

ஆஸ்திரேலியா
 

ஆஸ்திரேலியா

இத்துறையில் ஏற்கனவே பெரிய அளவில் ஈடுபட்டு உள்ளது மட்டும் அல்லாமல் ஆதானி குழுமத்திற்கு ஆஸ்திரேலியாவில் சொந்தமான நிலக்கரி சுரங்கங்கள் உள்ளதால் இந்த எஸ்கேஎஸ் பவர் தொழிற்சாலை பெரிய அளவில் பலன் அளிக்கும்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ஆனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தனது வர்த்தகப் பாதை நியூ எனர்ஜி தான் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த நிலையிலும், குஜராத் ஜாம்நகரில் பிரம்மாண்ட ஜிகா பேக்டரி தொழிற்சாலையில் 6 தொழிற்சாலைகளைக் கிரீன் எனர்ஜி பிரிவில் கட்டி வருகிறது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.

பங்கு

பங்கு

 

இந்த வேளையில் ரிலையன்ஸ் இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்பதற்காகத் தனது பல உற்பத்தி திட்டங்களுக்கு மின்சாரம் அதிகம் தேவை என்பதால் தனது துளியும் அனுபவம் இல்லாத அனல் மின் நிலையத்தை வாங்க போட்டிப்போட்டு வருகிறது.

போட்டி, டிமாண்ட்

போட்டி, டிமாண்ட்

இதேபோல் அதானியும் தனது துளியும் அனுபவம் இல்லாத துறையில் போட்டியையும், டிமாண்ட்-ஐயும் உருவாக்க வேண்டும் என்பதற்காகவே இரு வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்களும் போட்டிப்போட்டு வருகிறது. இதற்கு மற்றொரு உதாரணம் மெட்ரோ கேஷ் அண்ட் கேரி நிறுவனத்தைக் கைப்பற்ற அதானி குழுமம் ஆரம்பக் கட்டத்தில் போட்டிப்போட்டது. பின்பு ரிலையன்ஸ் வென்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adani group, Reliance industries fighting to buy SKS Power thermal power plant

Adani group, Reliance industries fighting to buy SKS Power thermal power plant
Story first published: Wednesday, January 4, 2023, 19:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X