NDTV நிறுவனர்களிடம் அனுமதி வாங்காமல் பங்கு விற்பனை.. அதானி குழுமத்திற்கு பிரச்சனை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

NDTV நிறுவனம் சுமார் 30 வருடங்களாகச் செய்தி ஊடகத்தில் இயங்கி வருகிறது, இந்நிறுவனம் NDTV 24x7, NDTV India and NDTV
Profit ஆகிய 3 செய்தி சேனல்களை வைத்துள்ளது.

டிவி, சோஷியல் மீடியா என மொத்த 35 மில்லியன் வாடிக்கையாளர்களை வைத்துள்ள NDTV நெட்வொர்க்-ன் பெரும் பகுதி பங்குகளை இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் அதானி குழுமம் கைப்பற்ற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடப்பட்ட நிலையில் தற்போது புதிய பிரச்சனை வெடித்துள்ளது.

எப்பவுமே இந்த பங்குகளுக்கு மவுசு தான்.. வாங்க ரெடியா இருங்க.. 3 பங்குகளை பட்டியலிடும் நிபுணர்கள்! எப்பவுமே இந்த பங்குகளுக்கு மவுசு தான்.. வாங்க ரெடியா இருங்க.. 3 பங்குகளை பட்டியலிடும் நிபுணர்கள்!

 NDTV லிமிடெட்

NDTV லிமிடெட்

புதுடெல்லி டெலிவிஷன் லிமிடெட் சுருக்கமாக NDTV லிமிடெட் இந்நிறுவனத்தின் ப்ரோமோட்டர் நிறுவனமான RRPR ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட் (RRPRH) நிறுவனத்தின் 99.50 சதவீத கட்டுப்பாட்டை அதானி குழுமத்தின் விஸ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் (VCPL) கைப்பற்றுவதாக அறிவிப்பு ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை வெளியானது.

ஒப்புதல்கள்

ஒப்புதல்கள்

ஆனால் அடுத்தச் சில மணிநேரத்திலேயே இந்தப் பங்கு உரிமைகளைக் கைமாற்றுவதற்கு NDTV நிறுவனர்களிடமிருந்து எவ்விதமான ஒப்புதல்களும் RRPR ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட் (RRPRH) நிறுவன பெறவில்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது. RRPR ஹோல்டிங் நிறுவனத்திடம் சுமார் NDTV மீடியா குழுமத்தில் சுமார் 29.18 சதவீத பங்குகள் உள்ளது.

RRPR ஹோல்டிங்
 

RRPR ஹோல்டிங்

RRPR ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட் (RRPRH) நிறுவனத்திடம் இருக்கும் NDTV நிறுவனத்தின் 29.18 சதவீத பங்குகளுக்கான உரிமையை அதானி குழுமத்தின் கிளை நிறுவனமான விஸ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் (VCPL) கைப்பற்ற
NDTV நிறுவனர்களிடம் இருந்து எந்த இன்புட், உரையாடல் அல்லது ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்தப்பட்டது என்று இந்நிறுவனம் பங்குச் சந்தைகளுக்குத் தெரிவித்துள்ளது.

ஏஎம்ஜி மீடியா

ஏஎம்ஜி மீடியா

ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்-ன் துணை நிறுவனமான தான் இந்த விஸ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் (விசிபிஎல்). RRPR ஹோல்டிங் மூலம் 29.18 சதவீத NDTV பங்குகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், கூடுதலாக 26 சதவீத பங்குகளை விஸ்வபிரதான் கமர்ஷியல், ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க், அதானி எண்டர்பிரைசர்ஸ் ஆகியவை இணைந்து வாங்க ஓப்பன் ஆஃபர் வைக்கப்பட உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adani group's Vishvapradhan was executed RRPR Holding stake without any consent of NDTV founders

Adani group's Vishvapradhan was executed RRPR Holding stake without any consent of NDTV founders | NDTV நிறுவனர்களிடம் அனுமதி வாங்காமல் பங்கு விற்பனை.. அதானி குழுமத்திற்குப் பிரச்சனை..!
Story first published: Tuesday, August 23, 2022, 21:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X