அதானி குழுமம் - ஹிண்டன்பர்க் விவகாரம்.. டோட்டல் எனர்ஜிஸ் வெளியிட்ட அறிக்கை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதானி குழுமம் Deloitte, EY, KPMG மற்றும் PwC ஆகிய நான்கு பெரிய கணக்கியல் நிறுவனங்களில் ஒன்றை நியமித்து நிறுவனத்தின் பொதுத் தணிக்கையை மேற்கொள்ள உள்ளது என்று அதானி குழுமத்தின் முக்கியக் கூட்டணி நிறுவனமாக இருக்கும் Total Energies வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிரான்ஸைத் தலைமையிடமாகக் கொண்ட டோட்டல் எனர்ஜிஸ் அதானியின் பல குழும நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.

அதிலும் முக்கியமாக அதானி குழுமத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிறுவனங்களில் பெரும் பகுதி பங்குகளைக் கொண்டு உள்ளது.

மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..! மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!

டோட்டல் எனர்ஜிஸ்

டோட்டல் எனர்ஜிஸ்

பிரான்ஸ் நாட்டின் டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனம் அதானி குழுமத்தின் அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தில் 37.4 சதவீத பங்குகளும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தில் 19.75 சதவீத பங்குகளும் வைத்துள்ளது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச்

ஹிண்டன்பர்க் ரிசர்ச்

அதானி குழுமத்திற்கு எதிராக அமெரிக்காவைச் சேர்ந்த ஷார்ட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் ஜனவரி 24 ஆம் தேதி கணக்கியல் முறைகேடுகள், நிதி பரிமாற்றத்தில் இருக்கும் சந்தேகம், கௌதம் அதானி சகோதரர் வினோத் அதானிக்கு 38க்கும் அதிகமான வெளிநாட்டு நிறுவனங்கள் உடனான தொடர்பு, அதானி குழுமம் - வினோத் அதானி - சீன நாட்டவர் Chang Chung Ling உடன் தொடர்பு எனப் பல குற்றச்சாட்டுகளை வைத்தி பெரிய அறிக்கை வெளியிட்டது.

 9 லட்சம் கோடி ரூபாய்

9 லட்சம் கோடி ரூபாய்

இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவன பங்குகளின் தொடர் சரிவால் கடந்த 7 நாளில் சுமார் 9 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பீட்டை இழந்த நிலையில், அதானி குழுமத்திற்கு எவ்வளவு கடன் வழங்கப்பட்டு உள்ளது என வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் ரிப்போர்ட் கேட்டுள்ளது ஆர்பிஐ.

TotalEnergies அறிக்கை

TotalEnergies அறிக்கை

இந்த நிலையில் தான் பிரான்ஸ் நாட்டின் TotalEnergies ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டது, அதானியின் நிறுவனங்களில் அதன் முதலீடுகள் அனைத்தும் இந்திய - சட்டங்கள் உட்பட்டு செய்யப்பட்டு உள்ளது. மேலும் TotalEnergies இன் சொந்த உள் நிர்வாகக் குழுவும் இதை உறுதி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

S&P குளோபல் ரேட்டிங்

S&P குளோபல் ரேட்டிங்

S&P Global Ratings வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட அறிவிப்பில் அதானி எலக்ட்ரிசிட்டி மும்பை லிமிடெட் மற்றும் அதானி போர்ட்ஸ் & SEZ லிமிடெட் ஆகிய 2 நிறுவனத்தின் மதிப்பீட்டை Stable என்ற நிலையில் இருந்து Negative ஆக மாற்றியுள்ளது.

அதானி குழும பங்குகள்

அதானி குழும பங்குகள்

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் அதானி குழுமத்தின் 10 பங்குகளின் நிலவரம்

  • அதானி எண்டர்பிரைசஸ் - 1.25 சதவீதம் உயர்வு
  • அதானி போர்ட்ஸ் - 7.98 சதவீதம் உயர்வு
  • அதானி பவர் - 5.00 சதவீதம் சரிவு
  • அதானி டிரான்ஸ்மிஷன் - 10.00 சதவீதம் சரிவு
  • அதானி கிரீன் எனர்ஜி - 10.00 சதவீதம் சரிவு
  • அதானி டோட்டல் கேஸ் - 5.00 சதவீதம் சரிவு
  • அதானி வில்மார் - 4.99 சதவீதம் சரிவு
  • ஏசிசி லிமிடெட் - 4.39 சதவீதம் உயர்வு
  • அம்புஜா சிமெண்ட்ஸ் - 6.03 சதவீதம் உயர்வு
  • NDTV - 4.98 சதவீதம் சரிவு

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adani Group soon to hire Deloitte, EY, KPMG, and PwC any one to carry general audit, says TotalEnergies

Adani Group soon to hire Deloitte, EY, KPMG, and PwC any one to carry general audit, says TotalEnergies
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X