அதானியிடம் நேரம் பார்த்து கோல் போடும் பங்களாதேஷ்.. நிலக்கரி விலை குறைக்கப்படுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்திய நாட்களாக அதானி குழும விவகாரம் என்பது பெரும் புயலை கிளப்பியுள்ளது எனலாம். குறிப்பாக பங்கு சந்தையில் பெரு வெள்ளம் ஏற்பட்டது போல பல லட்சம் கோடி இழப்பீடுகளை சில தினங்களிலேயே கண்டுள்ளது.

இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் கூட பெரும் சிக்கலை ஏற்படுத்திய நிலையில், இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

இப்படி பல தரப்பில் இருந்தும் அதானி குழுமம் பல சிக்கல்களை சந்தித்து வருகின்றது.

அதானி பங்குகள் வர்த்தக தற்காலிக சஸ்பெண்ட்.. Trading Stop அளவீட்டை எட்டியது..! அதானி பங்குகள் வர்த்தக தற்காலிக சஸ்பெண்ட்.. Trading Stop அளவீட்டை எட்டியது..!

பெரும் சிக்கலில் அதானி

பெரும் சிக்கலில் அதானி

ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கை தொடங்கி, அதனால் அதானி குழும பங்குகள் சரிவு, எஃப்பிஓ ரத்து, செபி நடவடிக்கை, ரிசர்வ் வங்கி நடவடிக்கை என ஒவ்வொன்றாக அதானி பெரும் அடியாகவே இருந்து வருகின்றது. இதற்கிடையில் பங்கு பத்திரங்களுக்கும் கூட கடன் கிடையாது என நிதி சர்வதேச நிறுவனங்கள் கைவிரிக்க தற்போது பெரும் சிக்கலில் உள்ளது அதானி குழுமம்.

மோசமான சரிவு

மோசமான சரிவு

சொல்லப்போனால் கடந்த சில ஆண்டுகளாகவே மிக வேகமாக அதானி குழுமம் மிக வேகமாக வளர்ந்து வந்தது. ஆனால் கடந்த இரண்டே வாரங்களில் மிக மோசமான சரிவினையும் கண்டுள்ளது.

உலக பில்லியனர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்த அதானி, தற்போது 15ம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார். இதற்கிடையில் இது உண்மையாக இருக்குமா? அது உண்மையாக இருக்குமா? அடுத்து என்ன நடக்கும்? என்ற கவலையிலேயே முதலீட்டாளர்கள் உள்ளனர்.

சில்லறை முதலீட்டாளர்களுக்கு இழப்பு

சில்லறை முதலீட்டாளர்களுக்கு இழப்பு

ஏற்கனவே சில்லறை முதலீட்டாளர்கள் பலரும் பெருத்த அடி வாங்கியுள்ள நிலையில், இனி இருக்கும் பணமாவது மிஞ்சட்டுமே என சந்தையினை விட்டு வெளியேறி வருகின்றனர். இது இப்படி எனில் மறுபுறம் அன்னிய முதலீட்டாளர்கள் பலரும் அதானி குழுமத்தில் முதலீடு செய்யவே யோச்சிக்கின்றனர் எனலாம். இதற்கிடையில் தான் அதானி குழும பங்குகளில் முதலீடும் குறைந்துள்ளது. இருக்கும் முதலீடுகளும் வெளியேறி வருவதால் இது பெரும் சரிவினைக் கண்டு வருகின்றன.

குறைந்த விலையில் நிலக்கரி

குறைந்த விலையில் நிலக்கரி

இதற்கிடையில் அதானி பவர் லிமிடெட் நிறுவனத்திற்கு குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்ய, பங்களாதேஷ் மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ்,கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

நாங்கள் மற்ற ஆலைகளுக்கு குறைந்த விலையில் நிலக்கரியை பெற்று வருகின்றோம். ஆக அதானியிடம் இருந்தும் நாங்கள் குறைந்த விலையில் பெற நினைக்கிறோம். ஆக இது குறித்த விவாதிக்க ஒரு விரிவான கடிதம் அனுப்பிள்ளோம் என பங்களாதேஷ் தரப்பில் கூறப்படுகின்றது.

இப்படியும் நடக்கலாம்

இப்படியும் நடக்கலாம்

மொத்தத்தில் இது தான் சரியான நேரம், சரியான வாய்ப்பு என பங்களாதேஷ் அணுகுகிறதா? என்ற கோணத்திலும் நிபுணர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது மேற்கொண்டு அதானி குழுமத்திற்கு பிரச்சனையாக மாறக்கூடும் எனலாம். ஏனெனில் பங்களாதேஷ்-க்கு மட்டும் விலையை குறைத்தால், அது மற்ற அனைத்து வாடிக்கையாளர்களுக்கு குறைக்க வேண்டிய நிலைக்க்கு தள்ளப்படலாம். ஆக இது மேலும் அதானி குழுமத்திற்கு பிரச்சனையாகவே மாறும். மொத்தத்தில் இது இன்னும் சிக்கலில் தான் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அதானி குழுமமோ, கெளதம் அதானியோ எந்த அறிவிப்பினையும் கொடுக்கவில்லை

அதானி பவர் பங்கு நிலவரம்?

அதானி பவர் பங்கு நிலவரம்?

அதானி பவர் பங்கு விலையானது என் .எஸ்.இ-யில் இன்று 5% சரிந்து 191.95 ரூபாயாக காணப்படுகின்றது.

இதே பி.எஸ்.இ-யில் 55 சரிவினைக் கண்டு 192.05 ரூபாயாக காணப்படுகின்றது. இதன் இன்றைய உச்சம் 192.05 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 192.05 ரூபாயாகும். இதே இதன் 52 வார உச்ச விலை 432.80 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்த பட்ச விலை 106.10 ரூபாயாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adani Issue updates: Bangladesh expects Adani power for lower import price to coal

Adani Issue updates: Bangladesh expects Adani power for lower import price to coal
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X