பாவம்யா அதானி.. 3 நாளில் 9 பில்லியன் டாலர் இழப்பு.. 2வது இடமும் கோவிந்தா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசியாவிலேயே 2வது பணக்காரர் ஆக உயர்ந்த இந்தியத் தொழிலதிபரான கௌதம் அதானி கடந்த ஒரு வருடமாக ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்தார் என்றால் மிகையில்லை.

 

தொட்டது எல்லாம் தங்கமாக மாறும் சக்தி கொண்டவர் போல அடுத்தடுத்து வர்த்தக விரிவாக்கம், புதிய வர்த்தகத்தில் இறங்கியது, புதிதாக 2 நிறுவனங்கள் துவங்கியது என மாஸ் காட்டி வந்தார்.

ஆனால் கடந்த 3 நாட்களில் பாவம் மனுசன் 9 பில்லியன் டாலரை இழந்துள்ளார். இவரை நம்பி முதலீடு செய்தோரும் பெரிய அளவிலான நஷ்டத்தையும் அடைந்துள்ளனர்.

ஆசிய பணக்காரர்கள் பட்டியல்

ஆசிய பணக்காரர்கள் பட்டியல்

ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் நீண்ட காலமாகச் சீன பில்லியனர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலை 2020 முதல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தி வரும் செய்தி இந்த வாரம் இந்தியாவில் காட்டுத்தீ போலப் பரவியது.

முகேஷ் அம்பானி, கௌதம் அதானி

முகேஷ் அம்பானி, கௌதம் அதானி

ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 84 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்து இந்தியாவின் பெரும் பணக்காரராக மட்டும் அல்லாமல் ஆசியாவிலேயே பெரும் பணக்காரர் ஆகவும் உள்ளார்.

அதானி குழுமத்தின் கௌதம் அதானி
 

அதானி குழுமத்தின் கௌதம் அதானி

முகேஷ் அம்பானியை தொடர்ந்து அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி கிரீன், அதானி போட்ர்ஸ் என நிறுவனங்களையும், பல வர்த்தகத் துறையில் தனது பிஸ்னஸ்-ஐ விரிவாக்கம் செய்துள்ள அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு 77 பில்லியன் டாலராக உயர்ந்து இந்தியாவிலும், ஆசியாவிலும் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

கௌதம் அதானி ராக்கெட் வளர்ச்சி

கௌதம் அதானி ராக்கெட் வளர்ச்சி

இதன் மூலம் உலகளவிலா பணக்காரர்கள் பட்டியலில் 14வது இடத்திலும், ஆசிய பட்டியலில் 2வது இடத்திலும் உள்ளார் கௌதம் அதானி. 2021ஆம் ஆண்டில் மட்டும் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 43.2 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

தடாலடி வளர்ச்சி

தடாலடி வளர்ச்சி

இதுமட்டும் அல்லாமல் கடந்த 1.5 வருடத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குழுமத்தின் நிறுவன பங்குகள் 1200 சதவீத, 500 சதவீதம் எனக் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வளர்ச்சி அடைந்தது. இந்தத் தடாலடி வளர்ச்சிக்குப் பின்னால் தான் பெரும் சதி இருப்பதாகத் தற்போது சந்தேகிக்கப்படுகிறது.

3 வெளிநாட்டு முதலீட்டு கணக்கு

3 வெளிநாட்டு முதலீட்டு கணக்கு

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முன்னேறி வரும் செய்தி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இதேவேளையில் கௌதம் அதானியின் நிறுவன பங்குகளில் முதலீடு செய்திருக்கும் 3 வெளிநாட்டுக் கணக்குகளை இந்தியப் பத்திர வைப்பு அமைப்பான NSDL முடக்கியுள்ள தகவல் வெளியானது.

ரூ.43,500 கோடி மதிப்பிலான அதானி பங்குகள்

ரூ.43,500 கோடி மதிப்பிலான அதானி பங்குகள்

அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா பண்ட் மற்றும் ஏபிஎம்எஸ் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் ஆகிய நிறுவனங்கள் 43,500 கோடி ரூபாய் மதிப்பிலான அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளைத் தனது FPI கணக்கில் முதலீடு செய்து இருப்பாக வைத்துள்ளது.

அதானி குழும பங்குகள் சரிவு

அதானி குழும பங்குகள் சரிவு

NSDL அமைப்பு முடக்கியுள்ள 3 நிறுவனங்களின் FPI கணக்கை மே 31ஆம் தேதியன்று முடக்கியுள்ளதாகச் செய்தி வெளியானதில் இருந்து அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் அதானி நிறுவன பங்குகளின் விலை குறைந்துள்ளது மட்டும் அல்லாமல் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு சரிந்து வருகிறது.

மொரீஷியஸ் நாட்டு நிறுவனம்

மொரீஷியஸ் நாட்டு நிறுவனம்

தற்போது வெளியாகியுள்ள தரவுகள் அடிப்படையில் இந்த அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா பண்ட் மற்றும் ஏபிஎம்எஸ் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் ஆகிய 3 நிறுவனங்களும் மொரீஷியஸ் நாட்டின் போர்ட் லூயிஸ் பகுதியைச் சேர்ந்த ஒரே முகவரியில் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

போலி நிறுவனங்களா..?

போலி நிறுவனங்களா..?

ஓரே முகவரியில் 3 நிறுவனங்கள் இந்தியாவில் மட்டும் அல்ல எந்த நாட்டிலும் இருக்கக் கூடாது. இந்தத் தகவல் உண்மையாகும் பட்சத்தில் 3 நிறுவனங்களும் போலி நிறுவனங்களாக விளங்கும். இதன் மூலம் இந்தக் கணக்குகள் மூலம் முதலீடு செய்துள்ள பணம் யாருடையது என்ற கேள்வியும் எழுகிறது.

பணச் சலவை சட்டம்

பணச் சலவை சட்டம்

மேலும் எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் Prevention of Money Laundering Act (PMLA) கீழ் NSDL அமைப்பு அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா பண்ட் மற்றும் ஏபிஎம்எஸ் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் ஆகிய 3 நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம் எனக் கூறியது.

அதானி குழுமம் விளக்கம்

அதானி குழுமம் விளக்கம்


இதற்கிடையில் குறிப்பிட்ட நிறுவனங்களின் கணக்குகள் முடக்கப்படவில்லை (Forzen) ஹோல்ட் மட்டுமே செய்யப்பட்டு உள்ளது என Registrar and Transfer Agent எழுத்துப்பூர்வமாக மின்னஞ்சல் மூலம் உறுதி செய்துள்ளது என அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது.

முதலீட்டாளர்களின் இணையதளம்

முதலீட்டாளர்களின் இணையதளம்

இதுமட்டும் அல்லாமல் இன்று வெளியாகியுள்ள ஒரு அறிவிப்பில் அதானி குழுமம், தனது நிறுவனத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் ஒரு இணையத் தளம் கொண்டு வந்தால் உதவியாக இருக்கும் எனக் கூறியுள்ளது.

9 பில்லியன் டாலர் சரிவு

9 பில்லியன் டாலர் சரிவு

இந்தச் செய்தி வெளியாகி கடந்த 3 நாட்களில் அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் கௌதம் அதானி சொத்து மதிப்பில் 9 பில்லியன் டாலர் சரிந்து 67.6 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.

சீனாவின் ஜாங் ஷான்ஷான்

சீனாவின் ஜாங் ஷான்ஷான்


இதன் மூலம் சீனாவின் ஜாங் ஷான்ஷான் 69.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மீண்டும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adani lost more than $9 billion in 3 days, China zhong shanshan replace gautam adani

Adani lost more than $9 billion in 3 days, China Zhong Shanshan replace Gautam Adani
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X