அதானி போர்ட்ஸ் அன்ட் ஸ்பெஷல் எக்னாமிக் சோன் லிமிடெட் (Adani Ports and Special Economic Zone Ltd) நிறுவனம், டிகி போர்ட் லிமிடெட் (Dighi Port Limited) நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை கையகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த கையகப்படுத்தலின் மதிப்பு 705 கோடி ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மேற்கு கடற்கரையில் மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில், ராஜ்புரி க்ரீக்கின் கரையில் இந்த டிகி போர்ட் அமைந்துள்ளது.

ரூ.10,000 கோடி முதலீடு செய்ய திட்டம்
இந்த போர்ட் மும்பை துறைமுகத்திலிருந்து 42 கிலோமீட்டர் தொலைவிலும், மும்பைக்கு தெற்கே 170 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தினை உலகத் தரம் வாய்ப்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய, பல சரக்கு துறைமுகமாக மாற்ற 10,000 கோடி ரூபாயினை முதலீடு செய்ய APSEZ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொழில் துறையில் முக்கிய பங்கு
இந்த துறைமுகமானது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரிய பங்களிப்பாளராக மாறும். இது மகாராஷ்டிராவில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய உதவும். இதன் மூலம் தொழில் துறை வளர்ச்சியில் பங்களிக்கும். APSEZ நிறுவனம் தற்போதுள்ள உள்கட்டமைப்பு வசதியினை மேம்படுத்தும்.

என்னென்ன வசதிகள்
மேலும் உலர் வசதிக்காக முதலீடு, கண்டெய்னர் வசதி மற்றும் திரவ சரக்குகளுக்கான வசதி உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த DPL நுழைவாயில் JNPT போர்டுக்கு மாற்றாக அமையும். அதோடு துறைமுக அடிப்படையிலான தொழில்கள் வளர்ச்சிக்கு இந்த துறைமுகம் ஆதரிக்கும்.

வேலை வாய்ப்பினை அளிக்கும்
குறிப்பாக நுகர்வோர் உபகரணங்கள், மெட்டல்ஸ், எரிசக்தி, பெட் ரோ கெமிக்கல்ஸ், ரசாயனங்கள் மற்றும் பல வர்த்தகங்களுக்கு இது வழிவகுக்கும். மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்கு வகிக்கும். இந்த முதலீட்டுகள் நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும் அதோடு வேலைவாய்ப்பினையும் அளிக்கும்.