இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் அதானி குழும நிறுவனங்கள், பங்கு சந்தையிலும் லாபகரமான நிறுவனங்களாக உருவெடுத்துள்ளன. அந்த வகையில் அதானி கீரின் எனர்ஜி பங்கானது, சந்தை மதிப்பின் அடிப்படையில் 8வது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இது பஜாஜ் பைனான்ஸ் மற்றுன் ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட நிறுவனங்களையும் தாண்டி 4.48 லட்சம் கோடி சந்தை மதிப்புள்ள நிறுவனமாக மாறியுள்ளது.
கடந்த திங்கட்கிழமையன்று இது டாப் 10 நிறுவனங்களின் பட்டியலில் நுழைந்த நிலையில், 4,48,050.99 கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டினை கொண்ட 8வது நிறுவனமாகும்.
1 மாதத்தில் 50% ஏற்றம் கண்ட அதானி கிரீன் எனர்ஜி.. ஏன் இந்த ஏற்றம்.. வாங்கலாமா?

பங்கு விலை நிலவரம்
இன்று பங்கு சந்தை விடுமுறையாதலால், கடந்த அமர்வில் NSE-ல் அதானி கீரின் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது, 2.57% அதிகரித்து., 2864.30 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 உச்ச விலை 2955 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலை 874.80 ரூபாயாகும்.
இதே BSE-ல் பங்கு விலையானது, 2.70% அதிகரித்து, 2864.75 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 உச்ச விலை 2951.90 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலை 860.20 ரூபாயாகும். இது கடந்த அமர்வில் 5.75 சதவீதம் அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

115.75% ஏற்றம்
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் பஜாஜ் நிறுவனம், ஹெச்.டி.எஃப்.சியினை பின்னுக்கு தள்ளி எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் சந்தை மூலதனமானது 4,31,028.49 கோடி ரூபாயில் இருந்து, 4,43,685.79 கோடி ரூபாயாக இருக்கும். அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் நடப்பு ஆண்டில் இதுவரை 115.75 சதவீதம் அதிகரித்துள்ளது.

டாப் நிறுவனங்கள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 17,26,714.05 கோடி ரூபாயாக உள்ளது. இதே அடுத்த இடத்தில் டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் 13,39,688.48 கோடி ரூபாயாகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சந்தை மூலதனம் 8,12,338.57 கோடி ரூபாயாகவும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 7,35,611.35 கோடி ரூபாயாகவும் உள்ளது.

அடுத்தடுத்த லெவல்
இதே ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனம் 5,29,739.59 கோடி ரூபாயாகும். ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 5,05,737.77 கோடி ரூபாயாகவும், இதே ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சந்தை மூலதனம் 4,61,848.65 கோடி ரூபாயாகவும், இதே அதானி கீரின் எனர்ஜியின் சந்தை மூலதனம் 4,48,050.99 கோடி ரூபாயாகவும், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 4,43,685.79 கோடி ரூபாயாகவும், ஹெச்.டி.எஃப்.சியின் சந்தை மூலதனம் 4,31,028.49 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.