இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.. சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.10 குறைத்த அதானி வில்மர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான அதானி வில்மர், அதன் அதிகபட்ச சில்லறை விலையை (MRP) 10 ரூபாய் குறைத்துள்ளது.

இது மத்திய அரசு இறக்குமதி வரியினை குறைத்த நிலையில், எண்ணெய் விலையையும் குறைத்துள்ளது. இது எண்ணெய் விலை குறைய காரணமாக அமையலாம்.

அதானி நிறுவனத்தின் இந்த விலை குறைப்பு நடவடிக்கையானது விரைவில் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதானி Vs அம்பானி.. மாறிப்போகும் கணிப்புகள்.. நம்பர் 1 யாருக்கு? அதானி Vs அம்பானி.. மாறிப்போகும் கணிப்புகள்.. நம்பர் 1 யாருக்கு?

விலை குறைப்பு நடவடிக்கை?

விலை குறைப்பு நடவடிக்கை?

எஃப் எம் சி ஜி நிறுவனமான அதானி வில்மர், அதன் ஃபார்ச்சூன் சன் பிளவர் ஆயில் விலையை 1 லிட்டர் பாக்கெட்டிற்கு 220 ரூபாயில் இருந்து, 210 ரூபாயாக குறைத்துள்ளது.

இதே ஃபார்ச்சூன் மஸ்டர்டு ஆயில் விலையானது 1 பாக்கெட்டிற்கு 205 ரூபாயில் இருந்து, 195 ருபாயாக குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பானது விலையில் சந்தையில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

அதானி வில்மர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஆங்ஷு மல்லிக், குறைந்த விலையின் பலனை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம் . அவர்கள் இப்போது மிக உயர்ந்த பாதுகாப்பு மற்றும் தரமான தரத்துடன் தயாரிக்கப்பட்ட தூய்மையான எண்ணெய்யினை சற்று குறைந்த விலையில் எதிர்பார்க்கலாம். குறைந்த விலையானது தேவையை அதிகரிக்கலாம் என நாங்கள் நம்புகிறோம் என கூறியுள்ளார்.

விலை குறைப்பு ஏன்?

விலை குறைப்பு ஏன்?

எண்ணெய் வித்துகள் குறைந்த உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவினங்கள் மற்றும் உற்பத்தி செலவுகள் காரணமாக, சமையல் எண்ணெய் விலை காரணமாக சர்வதேச சந்தையிலும், உள்நாட்டிலும் விலை அதிகரித்துள்ளன. எனினும் தற்போது இந்திய அரசு இறக்குமதி வரியினை குறைத்த நிலையில், விலை குறைக்கப்பட்டுள்ளது.

எஃப் எம் சி ஜி நிறுவனம்

எஃப் எம் சி ஜி நிறுவனம்


அதானி விலமர் நிறுவனம் எஃப் எம் சி ஜி நிறுவனங்களில் ஒன்றாகும். சமையல் எண்ணெய்களின் வரம்பைத் தவிர, அரிசி, ஆட்டா, சர்க்கரை, ரெடி டு குக் கிச்சடி, சோயா சங்க்ஸ் உள்ளிட்ட பலவற்றையும் விற்பனை செய்து வரும் ஒரு நிறுவனமாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adani wilmar cuts oil prices by Rs 10; oil price may go down

Adani wilmar, India's largest oil producer, has slashed its maximum retail price (MRP) by 10 rupees.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X