ஒரு அலுவலகத்தில் ஒருவர் மட்டுமே.. ஆப்பிரிக்காவில் எலான் மஸ்க் எடுத்த முக்கிய முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிவிட்டர் நிறுவனத்தைச் சுமார் 46.5 பில்லியன் டாலர் செலவில் எலான் மஸ்க் கைப்பற்றியுள்ள நிலையில் செலவுகளைக் குறைத்து அதிகப்படியான வருமானத்தை ஈட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

இதன் படியாக உலகளாவிய டிவிட்டர் வர்த்தகத்தில் இருக்கும் 50 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தார் எலான் மஸ்க். இதனால் எஞ்சியிருக்கும் ஊழியர்களை வைத்து தனது பிரம்மாண்ட திட்டங்களையும், முக்கியமான மாற்றங்களையும் செய்ய டிவிட்டர் ஊழியர்களுக்குக் கடுமையான டெட்லைன் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் டிவிட்டரின் ஆப்பிரிக்க அலுவலகத்தில் எத்தனை பேர் பணியாற்றுகிறார் தெரியுமா..?

திவாலாகும் டிவிட்டர்.. எலான் மஸ்க் பேச்சால் ஊழியர்கள் அதிர்ச்சி..! திவாலாகும் டிவிட்டர்.. எலான் மஸ்க் பேச்சால் ஊழியர்கள் அதிர்ச்சி..!

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் தலைமையிலான டிவிட்டர் நிர்வாகத்தில் கடந்த வாரம் 50 சதவீத ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கப்பட்டது டெக் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை அளித்து, டிவிட்டரைத் தொடர்ந்து மெட்டா-வும் 13 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது.

டிவிட்டர்

டிவிட்டர்

இந்த அதிரடி நடவடிக்கையின் கீழ் இந்திய டிவிட்டர் அலுவலகத்தில் 200-க்கும் அதிகமாக ஊழியர்கள் பணியாற்றி வந்த நிலையில் தற்போது எலான் மஸ்க் தலைமையிலான நிர்வாகம் 90 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வெறும் 20-25 ஊழியர்களை வைத்து இந்தியாவில் டிவிட்டர் இயங்கி வருகிறது.

ஆப்பிரிக்கா அலுவலகம்

ஆப்பிரிக்கா அலுவலகம்

இதேபோல் ஆப்பிரிக்கச் சந்தையில் இருக்கும் ஒரேயொரு டிவிட்டர் அலுவலகத்தில் தற்போது ஒரேயொரு ஊழியர் மட்டுமே வைத்துக்கொண்டு இயங்கி வருகிறது. எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கை பலன் அளிக்குமா என்பது தெரியாத நிலையில் நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் கதைகள் கண்ணீரை வரவழைக்கிறது.

நவம்பர் 1 புதிய அலுவலகம்

நவம்பர் 1 புதிய அலுவலகம்

டிவிட்டர் கானா-வின் Accra பகுதியில் அலுவலகம் வைத்துள்ளது, ஆப்பிரிக்காவில் சுமார் ஒரு வருடம் வீட்டிலேயே பணியாற்றி வந்த நிலையில் நவம்பர் 1ஆம் தேதி தான் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது. அனைவரும் புதிய நிர்வாகத்தின் கீழ் பணியாற்ற மிகவும் ஆர்வமாக இருந்தனர்.

3 நாளில் பணிநீக்கம்

3 நாளில் பணிநீக்கம்

ஆனால் வெறும் 3 நாட்களுக்குப் பின்பு அதாவது வெள்ளிக்கிழமை காலையில் Accra அலுவலகத்தில் பணியாற்றி வந்த அனைத்து ஊழியர்களின் ஈமெயில் கணக்கு முடங்கியது, அடுத்த சில மணிநேரத்தில் லேப்டாப் முடங்கியது. இதைத் தொடர்ந்து ஆப்பிரிக்க ஊழியர்கள் தங்களது பர்சனல் ஈமெயிலில் பணிநீக்கம் செய்யப்பட்டதாக மெயில் வந்தது.

garden leave கொடுத்த எலான் மஸ்க்

garden leave கொடுத்த எலான் மஸ்க்

அலுவலகத்திற்கு வந்த வெறும் 3 நாள் மட்டுமே ஆனா நிலையில் ஆப்பிரிக்க டிவிட்டர் ஊழியர்களுக்கு எவ்விதமான விளக்கமும் அளிக்கப்படாமல் வெளியேறுவதற்கான பணிகள் துவங்கியது கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். மேலும் பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களும் garden leave-ல் வைக்கப்பட்டு உள்ளனர், இவர்களது கடைசி வேலை நாள் டிசம்பர் 4.

ஒருவர் மட்டுமே

ஒருவர் மட்டுமே

இந்த நிலையில் Accra அலுவலகத்தில் தற்போது ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். இதேபோலப் பெரும்பாலான நாடுகளில் இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஆப்பிரிக்க டிவிட்டர் அலுவலகத்தில் பணியாற்று ஓரேயொரு ஊழியர் டிவீட் செய்துள்ளார்.

டெட்லைன்

டெட்லைன்

இதனால் மக்கள் ஒரு மாதத்தில் செய்து முடிக்க வேண்டிய வேலையை ஒரு சில நாட்களில் முடிக்க வேண்டும் என்ற கடுமையான டெட்லைன் கொடுக்கப்பட்டது. இதன் எதிரொலியாக டிவிட்டர் ஊழியர்கள் தினமும் 12 மணிநேரமும், வாரத்தில் 7 நாளும் பணியாற்ற வேண்டிய கட்டாயம் உருவானது.

சலுகைகள் கட்

சலுகைகள் கட்

இதற்கிடையில் டிவிட்டர் ஊழியர்களுக்கு இனி ரிமோட் வொர்க்கிங், வொர்க் ப்ரம் ஹோம் சலுகைகள் இல்லை என்றும், இதேபோல் வாரம் 80 மணிநேர பணியாற்ற தயாராக இருக்க வேண்டும், இலவச உணவு போன்ற சில சலுகைகளும் குறைக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

திவால்

திவால்

டிவிட்டர் ஊழியர்கள் உடனான முதல் சந்திப்பில் எலான் மஸ்க், டிவிட்டர் விரைவில் புதிய மற்றும் அதிகப்படியான வருவாய் ஈட்ட துவங்கவில்லை என்றால் திவாலாகும் வாய்ப்பு உள்ளது என எலான் மஸ் கூறியுள்ளார். இது டிவிட்டர் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Africa twitter office is running with just 1 person others layoff; new office opened on Nov 1

Africa twitter office is running with just 1 person others layoff; new office opened on Nov 1
Story first published: Friday, November 11, 2022, 21:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X