டிவிட்டரில் டிரெண்டாகும் எஸ்பிஐ பாஸ்புக்.. நல்லவேளை லன்ச் டைம் இல்லை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிவிட்டரில் எப்போதும் ஏதாவது புகைந்துகொண்டு தான் இருக்கிறது, அந்த வகையில் டிவிட்டரில் தற்போது எஸ்பிஐ பாஸ்புக்-ஐ டிரெண்டாக்கி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

300 பில்லியன் டாலர் முதலீட்டில் மிகவும் பிரம்மாண்டமாகத் துவங்கிய FIFA உலகக் கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது, பல போட்டிகளுக்குப் பின்பு புட்பால் சூப்பர்ஸ்டார் லியோனல் மெசி தலைமையிலான அர்ஜென்டினா அணி இறுதி ஆட்டத்திற்குத் தேர்வாகியுள்ளது.

இதே நேரத்தில் டிவிட்டரில் எஸ்பிஐ பாஸ்புக் டிரெண்டாகி வருகிறது. இதுக்கும் அதுக்கும் என்னடா சம்பந்தம் என நீங்க கேட்பது புரிகிறது, ஆனால் நெட்டிசன்களின் கிரியேட்டிவ் ஐடியாவுக்குச் சல்யூட் தான் வைக்க வேண்டும்.

 டிவிட்டர் ஆபீஸ்-ல் பெட்ரூம்.. ஷாக்கான ஊழியர்கள்.. எல்லாம் எலான் செயல்..! டிவிட்டர் ஆபீஸ்-ல் பெட்ரூம்.. ஷாக்கான ஊழியர்கள்.. எல்லாம் எலான் செயல்..!

அர்ஜென்டினா

அர்ஜென்டினா

அர்ஜென்டினா அணி குரோஷியா நாட்டுக்கு எதிரான ஆட்டத்தில் கலக்கலான வெற்றியை தொடர்ந்து அந்நாட்டின் கொடியின் நிறத்தை போலவே இருக்கும் எஸ்பிஐ பாஸ்புக் புகைப்படம் தற்போது டிவிட்டரில் டிராண்டாகி வருகிறது.

லியோனல் மெசி

லியோனல் மெசி

இந்தியாவில் லியோனல் மெசி-க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில் அர்ஜென்டினா அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் எஸ்பிஐ பாஸ்புக் போட்டோவை ரீட்வீட் செய்து கலக்கி வருகின்றனர்.

புதிய எஸ்பிஐ வங்கி மேனேஜர்

புதிய எஸ்பிஐ வங்கி மேனேஜர்

FIFA உலகக் கோப்பையின் இறுதி போட்டியில் அர்ஜென்டினா வெற்றிப்பெற்றால் மெசி தான் புதிய எஸ்பிஐ வங்கி மேனேஜர்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா


ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கூட அர்ஜென்டினா-வை தான் சப்போர்ட் செய்கிறது

இந்தியர்கள்

இந்தியர்கள்

இப்போ புரிகிறது ஏன் இந்தியர்கள் அர்ஜென்டினா-வை ஆதரிக்கிறார்கள் என்று...

பணம்

பணம்

அர்ஜென்டினா தோற்றால், தங்களுடைய எல்லாப் பணத்தையும் இழக்க நேரிடும் என்று இந்தியர்கள் நினைக்கிறார்கள் போல

லன்ச் டைம்

லன்ச் டைம்

எஸ்பிஐ வங்கியின் லன்ச் டைம் தான் அர்ஜென்டினா-வின் மொத்த மேட்ச் நேரமும்

பெருமை

பெருமை

எஸ்பிஐ வங்கி தான் அர்ஜென்டினா-வின் Official partner.. இந்தியர்கள் பெருமைப்பட வேண்டிய நேரம் இது.

ஜியோ சினிமா செயலி

ஜியோ சினிமா செயலி

உலகமே FIFA உலகக் கோப்பை போட்டிகளைக் கவனித்து வரும் நிலையில் முதல் நாள் போட்டியிலேயே ஜியோ சினிமா செயலி பெரிய அளவிலான விமர்சனங்களைச் சந்தித்தது, வீடியோ கிளாரிட்டி, செயலியின் இயங்கும் தன்மை, தாமதமாக டெலிகாஸ்ட் ஆவது எனப் பல பிரச்சனைகளுக்கு நெட்டிசன்களிடம் பெரிய அளவில் வாங்கிக்கட்டிக் கொண்டது ஜியோ சினிமா செயலி.

அர்ஜென்டினா - குரோஷியா அணி

அர்ஜென்டினா - குரோஷியா அணி

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு அர்ஜென்டினா அணி முதல் அணியாகத் தகுதி பெற்றுள்ளது. வலிமையான குரோஷியா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் சவுதி அரேபியா அணியிடம் அர்ஜென்டினா அணி தோல்வியைச் சந்தித்தது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.

 220 பில்லியன் டாலர்

220 பில்லியன் டாலர்

FIFA உலகக் கோப்பை போட்டிக்காகவும் அதன் ஏற்பாடுகளுக்காகவும் சுமார் 220 பில்லியன் டாலர் செலவிட்டு உலக நாடுகளை வியக்க வைத்துள்ளது.இந்தப் போட்டிக்காகக் கத்தார் 6 புதிய புட்பால் ஸ்டேடியங்களைக் கட்டியது குறிப்பிடத்தக்கது.

கத்தார் செலவுகள் ஒப்பீடு

கத்தார் செலவுகள் ஒப்பீடு

கத்தார் 220 பில்லியன் டாலர் செலவு செய்துள்ள நிலையில் 2018 இல் FIFA உலகக் கோப்பையை ஏற்பாடு செய்ய ரஷ்யா செலவிட்ட தொகை 11.6 பில்லியன் டாலரும், 2014 இல் பிரேசில் 15 பில்லியன் டாலர் மட்டுமே செலவு செய்துள்ளது.

சப்போர்ட் யாருக்கு

சப்போர்ட் யாருக்கு

இறுதிப் போட்டி டிசம்பர் 18 ஆம் தேதி லுசைல் ஸ்டேடியத்தில் (Lusail) நடைபெறும். இந்தப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோத உள்ளது. உங்களுடைய சப்போர்ட் யாருக்கு எஸ்பிஐ வங்கிக்காக..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

After Argentina enters FIFA 2022 final SBI PASSBOOK is trends; Lionel Messi went crazy

After Argentina enters FIFA 2022 final SBI PASSBOOK is trends; Lionel Messi went crazy
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X