உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதால் முக்கிய நிறுவனங்கள் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
அதுமட்டுமின்றி சில நிறுவனங்கள் தங்களது பணியாளர்களின் சம்பளத்தை குறைத்து வருவதாகவும் கூறப்பட்டது.
ஆனால் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான காக்னிசன்ட் தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடிவு செய்தது என்பதும் இது குறித்த அறிவிப்புகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த நிறுவனங்களின் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காக்னிசன்ட்
இந்த நிலையில் அடுத்ததாக உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான காக்னிசன்ட் தனது ஊழியர்களுக்கு சராசரியாக 10 சதவீதம் வரை சம்பள உயர்வை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பள உயர்வு
நியூஜெர்சியை தலைமையிடமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட் அதன் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு குறித்த அறிவிப்பை இமெயில் மூலம் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காக்னிசன்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 10 சதவீதம் வரை சம்பள உயர்வு அளிக்க இருப்பதாகவும் கூறப்படுவதால் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
70% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
கடந்த சில நாட்களுக்கு முன்னர் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனம் தங்களது 70 சதவீத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. மேலும் 30 சதவீத ஊழியர்களுக்கு அவர்களுடைய செயல்பாட்டின் அடிப்படையில் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
விப்ரோ
அதேபோல் விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் தியரி டெலாபோர்ட் அவர்கள் 2023 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 85 சதவீத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட உள்ளதாக அறிவித்தார். அதுமட்டுமின்றி சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பதவி உயர்வு செய்யப்பட உள்ளதாகவும் அவர்களுக்கு தானாகவே சம்பளம் உயர்ந்து விடும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஐடி நிறுவனங்கள்
இந்த நிலையில் டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களை தொடர்ந்து தற்போது காக்னிசன்ட் நிறுவனமும் தங்களது ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு அளித்துள்ளதால் ஐடி துறை முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications