பாகிஸ்தான், இலங்கையை அடுத்து சிக்கலில் 3 நாடுகள் .. லிஸ்டில் யாரெல்லாம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இலங்கை, பாகிஸ்தான் பிரச்சனையை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. குறிப்பாக இலங்கையில் பொருளாதாரத்தினை தாண்டி பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றது.

 

இதே பாகிஸ்தானின் பிரச்சனையை இன்னும் மோசமாக்கும் விதமாக வெள்ளம் பெரும் சேதத்தினை கொடுத்தது. மொத்தத்தில் இவ்விரு நாடுகளில் இப்படி பல விஷயங்களில் ஒரே மாதிரி பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்த நிலையில், பணவீக்கத்தின் மத்தியில் அவற்றின் கரன்சிகள் அதல பாதாளம் சென்றன.

நோமுரா எச்சரிக்கை

நோமுரா எச்சரிக்கை

இதற்கிடையில் நோமுரா ஹோல்டிங்ஸ் இன்க், தனது அறிக்கையில் செக் குடியரசு, ருமேனியா மற்றும் ஹங்கேரி உள்ளிட்ட நாடுகள் வெளிப்புற சவால்கள் என்பது அதிகரித்து வரும் சூழலில், அடுத்த ஒரு வருடத்தில் பரிமாற்ற விகித நெருக்கடிகளின் பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என எச்சரித்துள்ளது.

முக்கிய காரணிகள் இது தான்

முக்கிய காரணிகள் இது தான்

நோமுராவின் இந்த எச்சரிக்கை குறியீடானது, அன்னிய செலவாணி கையிருப்பு விகிதம் (இறக்குமதி செய்யும் அளவு), உண்மையான குறுகிய கால வட்டி விகிதங்கள், நிதி மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை உள்ளிட்ட முக்கிய 8 குறிக்காட்டிகளின் அடிப்படையில் இந்த எச்சரியினை விடுத்துள்ளது.

32 நாடுகள் குறித்து எச்சரிக்கை
 

32 நாடுகள் குறித்து எச்சரிக்கை

நோமுரவின் Nomura's Damocles Index குறியீடானது வளர்ந்து வரும் 32 நாடுகளின் கரன்சி நெருக்கடி க்குறித்தும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த லிஸ்டில் எகிப்து, இலங்கை, துருக்கி மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே நெருக்கடியினை எதிர்கொண்டு வருகின்றன. எனினும் இன்று வரையில் அவை பிரச்சனைகளில் இருந்து வெளியேறவில்லை என்றும் நோமுரா ஆய்வாளர்கள் ராப் சுப்பராமன் மற்றும் சி யிங் டோ தெரிவித்துள்ளனர்.

டாலருக்கு எதிராக வீழ்ச்சி

டாலருக்கு எதிராக வீழ்ச்சி

ஹங்கேரி ஃபோரிண்ட், ஐரோப்பிய யூனியனிலிருந்து மீட்பு நிதியை நிறுத்திய பின்னர், மிக மோசமான செயல்பாட்டினை கொண்டுள்ள் வளர்ந்து வரும் ஒரு கரன்சியாக உள்ளது. செக் குடியரசு மற்றும் ருமேனியா நாடுகளின் கரன்சிகளும், டாலருக்கு எதிராக 8% சரிவினைக் கண்டுள்ளன.

மோசமான தாக்கம்

மோசமான தாக்கம்

இந்த கரன்சிகளின் வீழ்ச்சியானது இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான சரிவினைக் கண்டுள்ளது. பரந்து விரிந்து வரும் அபாயமானது, மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என நோமுரா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிகரிக்கும் நெருக்கடி

அதிகரிக்கும் நெருக்கடி

உண்மையில் மோசமான கரன்சிகளின் தாக்கத்தினால் ஏற்கனவே இலங்கையும், பாகிஸ்தானும் கண்டு வரும் நெருக்கடிகளை காண முடிகிறது. ஆக மேற்கண்ட வளர்ந்து வரும் நாடுகள் சரியான சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்காவிடில், இவை மேற்கொண்டு பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். வளர்ச்சியினை மீட்க நாடுகள் பணப்புழக்கத்தினை மக்கள் மத்தியில் அதிகரிக்க வேண்டும். இதுவே வளர்ச்சியினை ஊக்குவிக்கும்.

 அதிகரிக்கும் சிக்கல்

அதிகரிக்கும் சிக்கல்

ஆனால் கரன்சி மதிப்பானது மேற்கண்ட நெருக்கடியில் உள்ள நிலையில், இந்த நாடுகள் இறக்குமதிக்கு கூடுதலாக செலவிட வேண்டியிருக்கும்.

 

பொதுவாக ஒரு நாட்டின் மத்திய வங்கி ஒரு குறிப்பிட்ட அளவில் அந்நியச் செலாவணியைக் கையிருப்பில் வைத்திருப்பது பாதுகாப்பானது. தங்களது நாட்டின் நாணய மதிப்பு குறைந்தாலோ, வேறு வகையிலான நெருக்கடி ஏற்படும்போதோ இது கைகொடுக்கும். ஆனால் மேற்கண்ட நாடுகளில் அதுவும் பிரச்சனை எனும் போது இது மேற்கொண்டு சிக்கலையே அதிகரிக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

After sri lanka, pakistan three countries may face problem in next year, Nomura

Nomura warned that countries including the Czech Republic, Romania and Hungary could face exchange rate crises over the next year amid rising external challenges
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X