டிசிஎஸ்-க்கு பிறகு இன்ஃபோசிஸ் எடுத்த அதிரடி முடிவு.. WFH ஊழியர்கள் கவலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐடி துறையில் தொடர்ந்து பற்பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பிறகு பல அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

ஆரம்பத்தில் கொரோனாவால் தேவை என்பது வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்தது. ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றினர்.

ஆனால் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டுள்ள நிலையில், நிறுவனங்கள் படிப்படியாக அலுவலகத்திற்கு அழைக்க தொடங்கியுள்ளன. இது வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் கவலையினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

திறமையான ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது ஏன்..? இதிலிருந்து தப்பிப்பது எப்படி..? திறமையான ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது ஏன்..? இதிலிருந்து தப்பிப்பது எப்படி..?

அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம்

அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம்

பல நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை படிப்படியாக அலுவலகத்திற்கு வருமாறு கூறி வருகின்றன. பல நிறுவனங்களும் ஹைபிரிட் மாடலில் பணிபுரிய அறிவுறுத்தியுள்ளன. மொத்தத்தில் வீட்டில் இருந்து பணியாற்றி வந்த ஊழியர்கள், தற்போது மீண்டும் அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

டிசிஎஸ்-ன் 25/25 திட்டம்

டிசிஎஸ்-ன் 25/25 திட்டம்

எனினும் டிசிஎஸ் 25/25 வேலை மாதிரியை அறிவித்தது. இதனை 2025-க்குள் 25/25 திட்டத்தினை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 25% ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வர வேண்டும், இதேபோல் உயர் அதிகாரிகள் 25% பணி நேரத்தை மட்டுமே அலுவலகத்தில் செலவிட வேண்டும், இதேபோல் ஒவ்வொரு திட்டத்திலும் 25% ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வர வேண்டும். இந்தத் திட்டம் தான் விஷன் 25/25.

இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ்

டிசிஎஸ்-ன் இந்த திட்டத்தினை போல தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனமும் ஒரு திட்டத்தினை கையில் எடுத்துள்ளது. டிசிஎஸ் போல படிபபடியாக அலுவலகத்திற்கு வரும்படி கூறியது. மூன்று கட்டமாக ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க தொடங்கியுள்ளது. இந்த ஹைபிரிட் மாடலை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.

நெகிழ்வை அளிக்கும்

நெகிழ்வை அளிக்கும்

இது குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவரும், மனிதவள மேம்பாட்டுக் குழுத் தலைவருமான கிருஷ்ண மூர்த்தி சங்கர், தங்களின் அணுகு முறையானது ஊழியர்களுக்கு ஒரு நெகிழ்வுதன்மையை அளிக்கும். இது அனைவருக்கும் பொருந்தக் கூடிய ஒன்றாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

என்ன திட்டம் அது?

என்ன திட்டம் அது?

இன்ஃபோசிஸின் முதல் கட்ட திட்டத்தின் படி, ஊழியர்கள் வாரத்திற்கு இரண்டு நாட்கள் அலுவலகம் வரவேண்டியிருக்கும். இரண்டாவது திட்டத்தின் படி ஊழியர்கள் தங்கள் விருப்பப்படி, வேறு கிளைகளுக்கு இடமாற்றம் அல்லது வேறு கிளைகளுக்கு மாறிக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

 ஹைபிரிட் மாடல் பணி

ஹைபிரிட் மாடல் பணி

இன்ஃபோசிஸ் இணைதளத்தின் படி நிறுவனம் 54 நாடுகளில் 247 இடங்களை கொண்டுள்ளது. இதே மூன்றாவது கட்டத்தில் நிறுவனம் ஹைபிரிட் மாடல் பணியினை தீர்மானிக்கலாம். முந்தைய இரண்டு திட்டங்களில் இருந்தும் கருத்துகளைப் பெறுவதை உள்ளடக்கும். நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சலீல் பரேக், நிறுவனம் அனைத்து ஊழியர்களையும் மீண்டும் அலுவலகத்திற்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளது என்பதை முன்னிலைப்படுத்தியது.

நெகிழ்வுத் தன்மை

நெகிழ்வுத் தன்மை

இன்ஃபோசிஸ் தனது ஊழியர்களுக்கு அலுவலகத்தில் இருந்து பணிபுரியும்போடு நெகிழ்வுத் தன்மையை வழங்க முயற்சிக்கும் என்றும் கூறினார். ஊழியர்களுக்கு தேவையான அனைத்தையும் ஆதரவையும் நாங்கள் செய்வோம். இதனால் அதிகமான ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்ப முடியும். எனினும் வாடிக்கையாளர்களின் சூழ்நிலைகளையும் இதில் கருத்தில் கொள்ளத் தக்கது. நாங்கள் தொடர்ந்து நெகிழ்வுத் தன்மையை வழங்குவோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

After TCS, the plan is to gradually call employees from Infosys

Infosys has also taken up a project similar to this project of TCS. told to come to the office gradually like TCS. It has started calling employees to the office in three phases
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X