ஜாலி ஜியோ, நெருக்கடியில் ஏர்டெல்! அதென்ன AGR dues?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த அக்டோபர் 2019-ல் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற டெலிகாம் நிறுவனங்கள், மத்திய டெலிகாம் துறை கோரிய 92,642 கோடி ரூபாயைச் செலுத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.

 

இந்த தீர்ப்பை ஏற்று பணத்தை செலுத்துவதா, வேண்டாமா என என சில பல கட்ட பேச்சு வார்த்தைகள், சட்ட நடவடிக்கைகளை எல்லாம் கடந்து, இன்று, உச்ச நீதிமன்றம் சொன்ன தொகையை கட்டி இருப்பதாக ஏர்டெல் தரப்பில் இருந்து செய்திகள் வந்திருக்கின்றன.

இது என்ன AGR dues பஞ்சாயத்து..? ஏன் ஏர்டெல் 10,000 கோடி ரூபாய் செலுத்தி இருக்கிறது? இன்னும் எவ்வலவு ரூபாய் பாக்கி செலுத்த வேண்டி இருக்கிறது? என விரிவாகப் பார்ப்போம்.

12% வீழ்ச்சி கண்ட எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் பங்கு விலை.. என்ன காரணம்..!

கணக்கு

கணக்கு

AGR dues என்றால் ஆங்கிலத்தில் AGR - Adjusted Gross Revenue dues என்று பொருள். டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue) அடிப்படையில் தான், மத்திய டெலிகாம் துறை ஒவ்வொரு நிறுவனத்துக்குமான லைசென்ஸ் கட்டணங்கள் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை நிர்ணயிக்கிறார்கள். இப்போது இந்த சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue)-யில் எதை எல்லாம் சேர்த்துக் கொள்ள வேண்டும், எந்த வருமானத்தை எல்லாம் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதில் தான் சிக்கல் எழுந்தது.

அரசு தரப்பு

அரசு தரப்பு

மத்திய டெலிகாம் துறையோ, சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue) கணக்கீட்டில் டிவிடெண்டுகள், மொபைல் போன்களை விற்று வரும் வருமானம், ஸ்கிராப் பொருட்கள் விற்பனை மற்றும் வாடகை மூலம் வரும் வருமானம் என அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் லைசன்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணத்தை கணக்கிட வேண்டும். டெலிகாம் சேவையில் இருந்து வரும் வருமானத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு கட்டணங்களை நிர்ணயிக்கக் கூடாது என வாதிட்டது.

டெலிகாம் நிறுவனங்கள்
 

டெலிகாம் நிறுவனங்கள்

ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற இந்திய டெலிகாம் நிறுவனங்களோ, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் டெலிகாம் சேவை வழியாக கிடைக்கும் வருவாயை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு லைசென்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை கணக்கிட வேண்டும். மற்ற எந்த வருமானத்தையும் கூடுதலாக கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என வாதாடியது. இந்த வழக்கு சுமாராக கடந்த 14 ஆண்டுகளாக நடந்தது.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், கடந்த 2015-ம் ஆண்டில் மத்திய டெலிகாம் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தான், சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue) கணக்கிட்டு இருக்கிறார்கள். இந்த தீர்ப்பில் கணக்கிட்ட சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue)-யின் படி பார்த்தால், டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் சேவை வழியாக வரும் வருமானம் போக, மற்ற சில வருமானங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தீர்ப்பு

தீர்ப்பு

எனவே மத்திய டெலிகாம் துறை கணக்கிட்டு, இந்திய டெலிகாம் நிறுவனங்களிடம் செலுத்தச் சொல்லிக் கோரியது போல, டெலிகாம் சேவை வருவாய் + மற்ற வருமானங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு கேட்கும் லைசென்ஸ் தொகை சரியே என தீர்ப்பு வழங்கினார்கள். டெலிகாம் வியாபாரத்தையே பெரிதும் நம்பி இருக்கும் ஏர்டெல், வொடாபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது இந்த தீர்ப்பு.

காலாண்டு நஷ்டம்

காலாண்டு நஷ்டம்

இதனால், கடந்த செப்டம்பர் 2019 காலாண்டு நிதி நிலை அறிக்கைகளில், இந்திய கம்பெனிகள் வரலாற்றில் இல்லாத அளவுக்கு, வொடாபோன் ஐடியா சுமாராக 50,000 கோடி ரூபாயை நஷ்டமாகக் காட்டியது. அதே போல ஏர்டெல் நிறுவனமும் சுமாராக 23,000 கோடி ரூபாயை நஷ்டமாகக் காட்டியது.

சட்ட நடவடிக்கைகள்

சட்ட நடவடிக்கைகள்

மேலே சொன்ன உச்ச நீதிமன்ற தீர்ப்பு-ஐ மறு சீராய்வு செய்யக் கோரியது டெலிகாம் நிறுவனங்கள். ஆனால் வழங்கிய தீர்ப்பில் மறு சீராய்வு செய்ய எந்த ஒரு நியாயமான காரணமும் இல்லை. எனவே இந்த மறு சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுவதாகச் சொன்னது உச்ச நீதிமன்றம்.

பாக்கியைச் செலுத்துங்கள்

பாக்கியைச் செலுத்துங்கள்

கடந்த வெள்ளிக்கிழமை கூடிய உச்ச நீதிமன்றம், டெலிகாம் நிறுவனங்கள் ஒழுங்காக தன் லைசென்ஸ் தொகைகளை முழுமையாகச் செலுத்த வேண்டும் என கண்டித்து இருந்தது. எனவே தான் ஏர்டெல் முதல் தவணையாக 10,000 கோடி ரூபாயை செலுத்தி இருக்கிறது. ஏர்டெல் இன்னும் 25,000 ரூபாயைச் செலுத்த வேண்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ

ஜியோ

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும், மேலே சொன்ன அக்டோபர் 2019 தீர்ப்பால் அரசுக்கு லைசென்ஸ் கட்டண பாக்கி தொகை செலுத்த வேண்டி வந்தது. செலுத்த வேண்டிய தொகை எவ்வலவு தெரியுமா..? வெறும் 195 கோடி ரூபாய். நல்ல பிள்ளையாக தன் பாக்கி தொகைகளைச் செலுத்தி மற்ற டெலிகாம் நிறுவனங்களும் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளிவிட்டது.

நிதிப் பிரச்சனை

நிதிப் பிரச்சனை

ஏற்கனவே ஏர்டெல் நிதிப் பிரச்சனையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு மத்தியில் ஏர்டெல் 35,000 ரூபாய் அரசுக்கு கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்றால், எப்படி அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு எதிராக தன் வியாபாரத்தை நிலை நிறுத்திக் கொள்ளும் எனத் தெரியவில்லை. இந்த ஒரு தீர்ப்பால், ஜியோ தவிர, ஏர்டெல் மற்றும் வொடாபோன் ஐடியா பயங்கர நஷ்டத்தை சந்தித்துக் கொண்டு இருக்கின்றன. இதில் இருந்து மீண்டும் வந்து ஜியோக்கு சவால் விடுமா ஏர்டெல்..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

AGR Dues: Airtel paid 10000 crore as per supreme court judgement

Supreme court ordered to pay the telecom dues. Airtel paid Rs 10,000 crore as their first installment. Why Airtel paid this amount and what is the judgement behind this.
Story first published: Monday, February 17, 2020, 17:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X