டாடா குழுமம் ஏர் இந்தியாவைக் கைப்பற்றிய நாளில் இருந்து பல மாற்றங்களைச் செய்து வரும் நிலையில், புதிய சிஇஓ-வை நியமிக்க முடியாமல் தவித்து வருகிறது. ஆனால் ஏர் இந்தியாவின் சேர்மன் ஆக என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்ட நாளில் இருந்து முக்கியமான நிர்வாக மாற்றங்களை நடந்து வருகிறது.
முதலில் உயர்மட்ட நிர்வாகக் குழுவில் பணியாளர்களை மாற்றப்பட்ட நிலையில், தற்போது டாடா குழுமத்தில் இருக்கும் 3 விமான நிறுவனத்தை இரண்டாகக் குறைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
126 பில்லியன் டாலர் நஷ்டம்.. டெஸ்லா முதலீட்டாளர்களை கதறவிட்ட எலான் மஸ்க்..!

ஏர் இந்தியா
டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் எந்தவித வசதியும் இல்லாத விமானச் சேவை நிறுவனமான ஏர் ஏசியா இந்தியா-வை வாங்கத் திட்டமிட்டு உள்ளது. மேலும் இதற்கான முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்திற்குப் போட்டி ஆணையத்திடம் (CCI) அனுமதி கோரியுள்ளது டாடா.

ஏர் ஏசியா இந்தியா
ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தில் டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் 83.67 சதவீத பங்குகளை வைத்துப் பெரும்பான்மையாக உள்ளது, மீதமுள்ள பங்கு மலேசியாவின் ஏர் ஏசியா குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஏர் ஏசியா இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் (ஏஏஐஎல்) உடன் உள்ளது.

டாடா குழுமம்
ஏர் இந்தியா மற்றும் அதன் மலிவு விலை கட்டண சேவை அளிக்கும் கிளை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றைக் கடந்த ஆண்டு டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் டாலஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ஏர் ஏசியா நிறுவனத்தை மொத்தமாக டாடா வாங்கி ஏர் இந்தியா உடன் சேர்க்க டாடா முடிவு செய்துள்ளது.

ஒரே நிறுவனம்
இதன் மூலம் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் ஏசியா இந்தியா ஆகிய நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு மலிவு விலை சேவை முதல் கார்கோ சேவைகள் வரையில் இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கும் அளிக்க டாடா முடிவு செய்துள்ளது. இந்த இணைப்பு மூலம் நிர்வாகம் செய்வதும் எளிது அதேபோலப் பல செலவுகள் குறையும்.

மத்திய அரசு கட்டுப்பாடு
மேலும் ஏர் இந்தியாவை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ள காரணமாகப் பங்கு பரிமாற்றத்திற்குச் செல்லாமல் டாடா ஏர் ஏசியா இந்தியா பங்குகளை வாங்க உள்ளது. டாடா குழுமம் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் உடன் இணைந்து விஸ்தாரா நிறுவனத்தை இயக்கி வருகிறது.