இந்திய டெலிகாம் மற்றும் டிஜிட்டல் சேவையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் 5ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நாட்டின் முக்கியமான பகுதிகளில் அறிமுகம் செய்துள்ளது.
4ஜி சேவையில் ரிலையன்ஸ் ஜியோ துரிதமாகச் செயல்பட்டு அதிகளவிலான வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகத்தைப் பெற்று கடந்த 6 வருடத்தில் இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் 5ஜி சேவையில் எப்படியாவது ஜியோ-வை முந்த வேண்டும் எனப் பார்தி ஏர்டெல் திட்டமிட்டுக் களத்தில் இறங்கியது.
பார்தி ஏர்டெல்
இந்தியாவின் 2வது பெரிய டெலிகாம் சேவை நிறுவனமாக இருக்கும் பார்தி ஏர்டெல் சேவை நிறுவனம் தனது 5ஜி சேவையை நாட்டின் 8 முக்கிய நகரத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்த 30 நாள் பார்தி ஏர்டெல் நிறுவனம் 1 மில்லியன் அதாவது 10 லட்சத்திற்கும் அதிகமாக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
5ஜி சேவை
ஏர்டெல் நிறுவனம் தனது 5ஜி சேவையைத் துவங்கி சில நாட்கள் மட்டுமே ஆன நிலையில், வாடிக்கையாளர்களின் வரவேற்பு மிகவும் சிறப்பாக உள்ளது. எங்களது நெட்வொர்க்-ஐ தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது, இதனால் இந்தியாவில் இருக்கும் அனைத்து 5ஜி கருவிகளும் விரைவில் ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க் சேவையைப் பயன்படுத்த முடியும்.
நெட்வொர்க்
விரைவில் நாடு முழுவதும் 5ஜி சேவை அளிக்கும் வகையில் நெட்வொர்க்-ஐ மேம்படுத்தி வருவதாகப் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான ரன்தீப் செகோன் தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோ இதுவரையில் 5ஜி வாடிக்கையாளர்கள் குறித்து அதிகாரப்பூர்வ தரவுகளை வெளியிடவில்லை.
8 நகரங்கள்
ஏர்டெல் நிறுவனம் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், வாரணாசி, நாக்பூர் மற்றும் சிலிகுரி உள்ளிட்ட இந்தியாவின் எட்டு நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவையை வழங்கியுள்ளது. இந்த நகரங்களில் சில பகுதிகளில் மட்டுமே செல் தளங்கள் உள்ளதால் சில பகுதிகளில் மட்டுமே 5ஜி சேவை வாடிக்கையாளர்கள் பெற்று வருகின்றனர்.
தொடர் விரிவாக்கம்
ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து தனது நெட்வொர்க்கை 5ஜி சேவைக்காக மேம்படுத்தி வரும் நிலையில், தற்போது சேவை அளிக்கப்படும் 8 நகரங்கள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் படிப்படியாக 5ஜி சேவை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நோக்கியா, எரிக்சன், சாம்சங்
ஏர்டெல் தனது 5ஜி சேவைக்காக டெலிகாம் கருவிகளை நோக்கியா, எரிக்சன், சாம்சங் ஆகிய நிறுவனங்களிடம் வாங்க முடிவு செய்துள்ளது. பார்தி ஏர்டெல் 5ஜி டெலிகாம் கருவிகளுக்காகச் சுமார் 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் செய்துள்ளது.
சீனாவுக்குச் செக்
சீனா நாட்டின் டெலிகாம் உபகரணத் தயாரிப்பு நிறுவனங்களால் இணையப் பாதுகாப்புத் தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் இருக்கும் காரணத்தால் 'நம்பகமான ஆதாரங்கள்' 'நம்பகமான தயாரிப்பு' என மத்திய அரசு தகுதி சான்றிதழ் அளித்த நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே டெலிகாம் உபகரணங்களைக் கொள்முதல் செய்ய வேண்டும் என இந்திய டெலிகாம் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு உள்ளது.
ZTE மற்றும் ஹூவாய்
இந்த நிலையில் சீனாவின் ZTE மற்றும் ஹூவாய் இன்னும் 'நம்பகமான ஆதாரங்கள்' 'நம்பகமான தயாரிப்பு' என்ற டேக் பெறாத நிலையில் இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் 5ஜி சேவை-க்கான வர்த்தகத்தைப் பெறாமல் உள்ளது. இதனால் இவ்விரு சீன நிறுவனங்களும் தனது இந்திய வர்த்தகத்தில் நியமிக்கப்பட்டு இருந்த ஊழியர்களில் 90 சதவீத பேரை பணியில் இருந்து நீக்கியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications