இதில் ஏர்டெல்-க்கு முதலிடம்.. ஜியோக்கு 4-ம் இடம்..! கபாலியாய் திரும்பி வந்த ஏர்டெல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும், போட்டி போட்டு தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள வேலை பார்த்து வருகின்றன.

 

வாடிக்கையாளர்களை, அப்படியே தக்க வைத்துக் கொள்ள ஒரு நல்ல காரணமும் சேவையும் வேண்டுமே..! இல்லை என்றால் எப்படி வாடிக்கையாளர்கள் ஒரு டெலிகாம் நிறுவனத்தில் தங்குவார்கள்.

வாடிக்கையாளர்கள் இந்த காலத்தில் என்ன பார்ப்பார்கள்..? வாய்ஸ் காலா..? எஸ் எம் எஸ் சேவைகளா..? அட இணைய சேவை மற்றும் வேகம் தானே பாஸ். இணையத்தில் டவுன்லோட் வேகத்திலும் லேடன்சியிலும் ஏர்டெல் முதலிடம் பிடித்து இருக்கிறது.

டுடெலா அறிக்கை

டுடெலா அறிக்கை

Tutela's Mobile Experience என்கிற பெயரில் வெளியாகும் டெலிகாம் சேவை தொடர்பான அறிக்கை இந்திய டெலிகாம் வெளியில் கவனம் ஈர்க்கும் ஒன்று. இந்த டுடெலா அறிக்கை, கடந்த ஆகஸ்ட் 2019 முதல் அக்டோபர் 2019 வரையான மூன்று மாத காலத்துக்கு வெளியாகி இருக்கிறது.

இணைய சேவை

இணைய சேவை

இந்த சமீபத்திய அறிக்கையில், இந்திய டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் இணைய சேவையில், யாருடைய நெட்வொர்க்கில் டவுன்லோட், அப்லோட், லேடன்சி வேகமாக இருக்கிறது, என்கிற பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. டவுன்லோட் பட்டியலில் சுனில் மித்தலின் ஏர்டெல் முதலிடத்திலும், முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் நான்காம் இடத்தையும் பிடித்து இருக்கிறது.

எந்த அடிப்படையில்
 

எந்த அடிப்படையில்

இந்த பட்டியலைத் தயாரிக்க ஒரு இரண்டு எம்பி ஃபைலை, அனைத்து இந்திய டெலிகாம் நெட்வொர்க்கின் வழியாக, டவுன் லோட் செய்து பார்த்து இருக்கிறார்களாம். அதே போல ஒரு எம்பி ஃபைலை அனைத்து இந்திய டெலிகாம் நெட்வொர்க்கின் வழியாக, அப்லோட் செய்து பார்த்து இருக்கிறார்களாம். இந்த அடிப்படையில் தான் பட்டியலைத் தயார் செய்து இருக்கிறார்களாம்.

டவுன்லோட் முழு விவரம்

டவுன்லோட் முழு விவரம்

ஏர்டெல் 7.1 எம் பி பி எஸ்

வொடாபோன் 6.3 எம் பி பி எஸ்

ஐடியா 5.5 எம் பி பி எஸ்

ஜியோ 4.9 எம் பி பி எஸ்

பி எஸ் என் எல் 2.9 எம் பி பி எஸ்

நம் இந்திய டெலிகாம் நிறுவன நெட்வொர்க்குகள் வழியாக, மேலே சொல்லி இருக்கும் வேகத்தில் தான் டவுன்லோட் செய்ய முடிகிறதாம்.

அப்லோட் முழு விவரம்

அப்லோட் முழு விவரம்

வொடாபோன் 3.6 எம் பி பி எஸ்

ஐடியா 3.2 எம் பி பி எஸ்

ஏர்டெல் 3.3 எம் பி பி எஸ்

ஜியோ 3.1 எம் பி பி எஸ்

பி எஸ் என் எல் 1.7 எம் பி பி எஸ்

நம் இந்திய டெலிகாம் நிறுவன நெட்வொர்க்குகள் வழியாக, மேலே சொல்லி இருக்கும் வேகத்தில் தான் அப்லோட் செய்ய முடிகிறதாம்.

லேடன்சி

லேடன்சி

டெக் உலகில் Latency என்று ஒரு சொல் உண்டு. ஒரு செய்தியை அல்லது ஒரு பேக்கெட் ஆஃப் டேட்டாவை, ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு சென்று சேர ஆகும் நேரம் தான் லேடன்சி. பொதுவாக இந்த லேடன்சி, கேம் விளையாடுபவர்களுக்கு மிகவும் அவசியம். இந்த லேடன்சி எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அவ்வளவு சிறப்பு.

ஏர்டெல் தான்

ஏர்டெல் தான்

எனவே மேலே சொன்ன லேடன்சி பட்டியலிலும் 26.2 மில்லியன் நொடிகள் உடன் முதலிடத்தில் இருக்கிறது ஏர்டெல். அம்பானியின் ஜியோ 27.6 மில்லியன் நொடிகள் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இவர்களைத் தொடர்ந்து வொடாபோன் மற்றும் ஐடியா இருக்கின்றன.

விலை ஏற்றம்

விலை ஏற்றம்

ஆக நிதி நிலை ரீதியாகவும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையிலும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவை தொட முடியாத ஏர்டெல், தன் சேவை தரத்தில் முந்திக் கொண்டு முன்னுக்கு வந்து கொண்டு இருப்பது பாராட்டத்தக்கது. அப்படியே கொஞ்சம் ரீசார்ஜ் திட்டங்களின் விலை ஏற்றத்தையும் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Airtel beat jio in internet speed and latency

The sunil mittal leading Airtel has beat the mukesh ambani leading reliance jio in the internet speed and latency.
Story first published: Monday, December 16, 2019, 13:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X