2ஜி சேவையை முடக்க எந்த திட்டமும் இல்லை.. ஏர்டெல் அதிரடி தகவல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம், தனது 2ஜி சேவைகளை நிறுத்துவது குறித்து எந்தவொரு திட்டமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

 

மேலும் இது தொடர்ந்து ஏர்டெல்லுக்கு கணிசமான வருவாயை ஈட்டி வருகிறது என்றும், இந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் புதன் கிழமையன்றும் தெரிவித்துள்ளார்.

 
2ஜி சேவையை முடக்க எந்த திட்டமும் இல்லை.. ஏர்டெல் அதிரடி தகவல்..!

அதிலும் குறிப்பாக டெல்லி போன்ற மெட்ரோ நகரில் கூட 2ஜி தொலைபேசி பயனர்களிடம் இருந்து கணிசமான வருவாய் வருவதாகவும் கூறியுள்ளார். இதனால் 2ஜி நெட்வொர்க்கை மூட எந்த திட்டமும் இல்லை என்றும், மேலும் பழைய சாதனங்களுக்கு நிகர் ஏதும் இல்லை என்றும் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.

VoLTE என்பது மொபைல் போன்களுக்கான அதிவேக வயர்லெஸ் தகவல் தொடர்புக்கான ஒரு தரமாகும். இந்த நிலையில் இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே தூய 4ஜி நெட்வொர்க் ஆகும். இதே வோடபோன் ஐடியா 2ஜி மற்றும் 3ஜி, 4ஜி சேவைகளை வழங்கி வருகிறது. இதே ஏர்டெல் 2ஜி மற்றும் 4ஜி சேவைகளை வழங்கி வருகிறது, எனினும் மார்ச் மாதத்திற்குள் 3ஜி சேவையை வெளியேற்ற திட்டமிட்டுள்ளது.

இது குறித்து 2ஜிக்கு அடுத்த சில ஆண்டுகளுக்கு ஒரு ஓடுபாதை உள்ளது. 3ஜி சாதனங்கள் வருவாய் மிகக் குறைவாக இருப்பதால், 3ஜி சேவைகளை மூட திட்டமிட்டுள்ளோம் என்றும் விட்டல் கூறியுள்ளார்.

மேலும் பார்தி ஏர்டெல் ஏற்கனவே ஹரியானா, பஞ்சாப் மற்றும் கொல்கத்தாவில் 3ஜி சேவையினை மூடியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனது 3ஜி நெட்வொர்க்கினை இந்தியாவின் 22 தொலைத் தொடர்பு வட்டங்களில் இருந்து மார்ச் 2020க்குள் மூடிவிடுவதாகவும், மேலும் 4ஜி சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்த போவதாகவும் கூறியுள்ளது.

மேலும் கடந்த ஜூலை மாதத்தில் கொல்கத்தா வட்டத்தில் 3 ஜி சேவைகளைக் குறைக்கும்போது தான் இந்த செயல்முறையை தொடங்கியது என்றும் கூறியுள்ளது. எனினும் 2ஜி சேவைகளை தொடர்ந்து வருவாதாகவும் ஏர்டெல் கூறியுள்ளது.

இது கடந்த 2016ல் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையில் நுழைந்ததன் மூலம், மற்ற நிறுவனங்களும், 4ஜி சேவைக்கு மாற இது தூண்டியதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Airtel CEO said No plans to shut down 2G network services

Airtel CEO gopal vittal said No plans to shut down 2G network services, but it's will shutdown 3G services and encourage 4G
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X