தங்கநகை லோன் வேணுமா? களத்தில் இறங்குகிறது ஏர்டெல் பேமெண்ட் பேங்க்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் நம் கையில் இருந்தால் அது ரொக்கம் கையில் இருப்பதற்கு சமம் என்றும், உடனடியாக தங்கத்தை விற்பனை செய்தோ அல்லது அடகு வைத்தோ ரொக்கமாக மாற்றலாம் என்பதும் தெரிந்ததே.

தங்க நகைகளுக்கு குறைந்த வட்டியில் தனியார், அரசு வங்கிகள், தனியார் நிறுவனங்கள் எளிய முறையில் லோன் தந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் ஏர்டெல் பேமெண்ட் பேங்க் மூலம் முத்தூட் பைனான்ஸ் தங்க நகைகளுக்கான லோன் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஏர்டெல் பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம்: திடீரென போர்க்கொடி தூக்கிய சேல்ஸ் சங்கம்

தங்க நகைக்கடன்

தங்க நகைக்கடன்

ஏர்டெல் செயலி மூலம் தங்கக் கடன்களை வழங்க முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளதாக ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி தெரிவித்துள்ளது. கடனுக்கான செயலாக்கக் கட்டணம் இல்லை என்றும், முத்தூட் ஃபைனான்ஸ் அடகு வைக்கப்பட்ட தங்க மதிப்பில் 75 சதவீதம் வரை கடனாக வழங்கும் என்றும் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி தெரிவித்துள்ளது.

ஏர்டெல்-முத்தூட்

ஏர்டெல்-முத்தூட்

"தங்கக் கடன்கள் என்பது தனிநபர் முதல் தொழில்முறை வரை பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யப் பெறக்கூடிய பாதுகாப்பான கடன்களாகும். ஏர்டெல் தேங்க்ஸ் செயலி மூலம் தங்கக் கடன்களை எளிதாக அணுகுவதற்கு முத்தூட் ஃபைனான்ஸுடன் கூட்டாளியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்' என ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் தலைமை இயக்க அதிகாரி. கணேஷ் அனந்தநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விரைவான கடன்
 
விரைவான கடன்

தங்க நகைகள் மூலம் விரைவான கடன்களை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கூட்டணி பாதுகாப்பான மற்றும் மலிவு வட்டி விகிதத்தில் கடனை வழங்கும் என்றும், வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையை செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றும் முத்தூட் ஃபைனான்ஸ் இணை நிர்வாக இயக்குனர் அலெக்சாண்டர் ஜார்ஜ் முத்தூட் கூறியுள்ளார்.

குறைந்தபட்சம் ரூ.3000 முதல் அதிகபட்சம் தங்கத்தின் மதிப்பிற்கு ஏற்ப லோன் வழங்கப்படும் என்றும், தவணை முறையிலும் திருப்பி செலுத்திவிட்டு நகையை மீட்டு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Airtel Payments Bank partners with Muthoot Finance for gold loans

Airtel Payments Bank partners with Muthoot Finance for gold loans |Airtel , Muthoot , gold loans, ஏர்டெல், முத்தூட், நகைக்கடன்
Story first published: Friday, June 3, 2022, 9:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X