வோடபோன் ஐடியா-வின் புதிய சிஇஓ அக்ஷயா மூந்த்ரா.. ரவீந்தர் தக்கர்-க்கு என்ன ஆச்சு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வோடபோன் ஐடியாவின் தலைமை நிர்வாகி ரவீந்தர் தக்கர்-ன் பணிக்காலம் முடியும் நிலையில் இவருடைய இடத்தில், தற்போது இந்நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியாக இருக்கும் அக்ஷயா மூந்த்ரா நியமிக்கப்பட்டு உள்ளார்.

 

கடுமையான பணத் தட்டுப்பாடு, தொடர் வாடிக்கையாளர் இழப்புக்கு மத்தியில் வோடபோன் ஐடியா தனது சேவையை அளித்து வருகிறது.

இது மட்டும் அல்லாமல் இந்நிறுவனம் டெலிகாம் சந்தையில் தான் விட்ட இடத்தை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்பதற்காகப் போராடி வரும் Vi, நஷ்டத்தில் இயங்கினாலும் தொடர்ந்து நிர்வாகத்தையும் வர்த்தக முறையை மாற்றி முயற்சி செய்து வருகிறது.

வோடபோன் ஐடியா நிறுவனத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக உயர்மட்ட நிர்வாகத்தில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

வோடபோன் ஐடியா

வோடபோன் ஐடியா

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் நிர்வாகக் குழு நியமனம் மற்றும் ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், தற்போது தலைமை நிதி அதிகாரியாக இருக்கும் அக்ஷயா மூந்த்ரா-வை, ஆகஸ்ட் 19 முதல், மூன்று ஆண்டுகளுக்குத் தலைமைச் செயல் அதிகாரியாக நியமித்துள்ளது.

அக்ஷயா மூந்த்ரா

அக்ஷயா மூந்த்ரா

வெள்ளிக்கிழமை வெளியான இந்த அறிவிப்பில் அக்ஷயா மூந்த்ரா நியமனம் தற்போதைய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் ரவீந்தர் தக்கர்-ன் பதவிக்காலம் ஆகஸ்ட் 18 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் புதிய நியமனத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரவீந்தர் தக்கர்
 

ரவீந்தர் தக்கர்

ரவீந்தர் தக்கர் ஆகஸ்ட் 18 ஆம் தேதி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து விலகினாலும் non-executive மற்றும் non-independent director ஆகத் தொடர்வார். மேலும் அடுத்தச் சில நாட்களில் புதிய தலைமை நிதியியல் அதிகாரியின் பெயர் அறிவிக்கப்பட உள்ளது.

2018 இணைப்பு

2018 இணைப்பு

வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் ஆகஸ்ட் 2018ல் இணைக்கப்பட்ட பின்பு இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக இருந்தது. ஆனால் இந்த நிலை ஜியோவின் அசுர வளர்ச்சி மற்றும் வோடபோன் ஐடியாவின் அதிகப்படியான கடன் ஆகியவற்றின் மூலம் வேகமாக இழந்தது.

3வது சிஇஓ

3வது சிஇஓ

வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் ஆகஸ்ட் 2018ல் இணைக்கப்பட்ட பின்பு பாலேஷ் ஷர்மா முதல் சிஇஓவாக இருந்தார், இவரைத் தொடர்ந்து தான் ரவீந்தர் தக்கர், தற்போது வெளியான அறிவிப்பின் படி அடுத்த 3 ஆண்டுகளுக்கு அக்ஷயா மூந்த்ரா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Akshaya Moondra will be new CEO of Vodafone Idea; Ravinder Takkar ceo term ends on August 18

Akshaya Moondra will be new CEO of Vodafone Idea; Ravinder Takkar ceo term ends on August 18 வோடபோன் ஐடியா-வின் புதிய சிஇஓ அக்ஷயா மூந்த்ரா.. ரவீந்தர் தக்கர்-க்கு என்ன ஆச்சு..!
Story first published: Saturday, July 23, 2022, 16:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X