வெறும் 999 ரூபாய்க்கு விமானப் பயணம்.. சிறு நகர மக்களுக்குக் குட் நியூஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா-வின் உள்நாட்டு சேவை பிரிவின் கிளை நிறுவனமான அலையன்ஸ் ஏர் தற்போது மெட்ரோ நகரங்கள் அல்லாத ஊர்களுக்கு மத்தியிலான விமானச் சேவையை வெறும் 999 ரூபாயில் அளிக்க முடிவு செய்துள்ளது.

 

இதன் மூலம் பெரு நகரங்களில் இருந்து சொந்த ஊருக்குச் செல்வோர் இனி குறைந்த கட்டணத்திலேயே விமானச் சேவையைப் பயன்படுத்தலாம்.

வெறும் 999 ரூபாய்க்கு விமானப் பயணம்.. சிறு நகர மக்களுக்குக் குட் நியூஸ்..!

இதைத்தொடர்ந்து அலையன்ஸ் ஏர் வெளியிட்டுள்ள அறிவிப்பின் இந்த 999 ரூபாய் தள்ளுபடி டிக்கெட் டெல்லி டூ ஜெய்பூர்/Prayagraj, ஹைதராபாத் டூ பெல்காம், அகமதாபாத் டூ கல்டாலா, பெங்களூர் டூ கொச்சி ஆகிய வழித்தடத்தில் அளிக்கப்படுகிறது.

மேலும் இந்தச் சலுகை மார்ச் 13 முதல் மார்ச் 15 வரையில் மட்டும் அலையன்ஸ் ஏர் வழங்குகிறது. ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலகட்ட பயணங்களுக்கு இந்த 3 நாட்களில் டிக்கெட்-ஐ முன்பதிவு செய்யலாம்.

இதுமட்டும் அல்லாமல் இவ்வழித்தடத்தில் விமானச் சேவை இயக்குவதன் மூலம் அதிக நஷ்டம் அடையக் கூடாது என்று 70 சீட்டர் மட்டுமே கொண்ட ATR 72 விமானத்தை இயக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் லாபகரமாக இருக்கும்.

அலையன்ஸ் ஏர் நிறுவனம் இந்தியாவில் சுமார் 46 இடங்களுக்கு வாரம் 657 விமானப் பயணங்களை மேற்கொண்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Alliance Air starts sale with fares from Rs 999

Alliance Air starts sale with fares from Rs 999
Story first published: Saturday, March 13, 2021, 19:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X