கையை நீட்டினால் போதும்.. கொரோனா காலத்தில் அமேசானின் சூப்பரான சேவை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் தொடர்ந்து தனது வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப் பல முயற்சிகள் செய்து வரும் நிலையில், அமேசான் தனது ஆஸ்தான வர்த்தகச் சந்தையாக விளங்கும் அமெரிக்காவில் இருக்கும் ரீடைல் வர்த்தகப் பிரிவான ஹோல் புட்ஸ் கடைகளில் புதிய பேமெண்ட் முறையை அறிமுகம் செய்துள்ளது.

 

வாடிக்கையாளர்கள் விரைவாகவும், எளிதாகவும் பணத்தைச் செலுத்த Pay by Palm என்ற புதிய டெக்னாலஜியை சில ஹோல் புட்ஸ் கடைகளில் அறிமுகம் செய்துள்ளது. இந்த டெக்னாலஜி பெரிய அளவிலான வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈகாமர்ஸ் கொள்கையில் மாற்றம் வேண்டும்.. அடம் பிடிக்கும் ரிலையன்ஸ்..!

 அமேசானின் புதிய தொழில்நுட்பம்

அமேசானின் புதிய தொழில்நுட்பம்

அமேசானின் ஹோல் புட்ஸ் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது உள்ளங்கையை ஸ்கேன் செய்து தங்களது கிரெடிட் கார்டு அல்லது அமேசான் கணக்குடன் இணைக்க வேண்டும். இணைத்த சில நொடிகளில் வாடிக்கையாளர்கள் கடைகளில் எதை வேண்டுமானாலும் வாங்கிப் பேமெண்ட் செய்யும் போது கையை மட்டும் நீட்டினால் போதும் பணத்தைச் செலுத்திவிடலாம்.

 அமேசான் ஒன் சேவை

அமேசான் ஒன் சேவை

இப்புதிய தொழில்நுட்பத்திற்கு அமேசான் நிறுவனம், அமேசான் ஒன் பாம் ஸ்கேனர் எனப் பெயரிட்டுள்ளது. இந்த அமேசான் ஒன் தொழில்நுட்பத்தை 2020 இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டுத் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும் இந்தத் தொழில்நுட்பத்தை விளையாட்டு மைதானம், அலுவலகம், ரீடைல் கடைகளில் பயன்படுத்த முடியும் என அமேசான்.காம் தெரிவித்துள்ளது.

 கேஷியர் இல்லா கடைகள்
 

கேஷியர் இல்லா கடைகள்

இதுவரை அமேசான் இத்தொழில்நுட்பத்தை வெளிச் சந்தையில் யாரிடமும் விற்பனை செய்யவில்லை. முதற்கட்டமாக அமேசான் ஓன் ஸ்கேனர் முறையைத் தனது கேஷியர் இல்லா கடைகளில் பொருத்தியுள்ளது. 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த முறையைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது.

 இது பாதுகாப்பற்றது

இது பாதுகாப்பற்றது

வாடிக்கையாளர்களின் முகம் மற்றும் உள்ளங்கை ஸ்கேன் தரவுகள் நிறுவனங்கள் கைப்பற்றுவது பாதுகாப்பற்ற செயல், இதை யார் வேண்டுமானாலும் ஹேக் செய்ய முடியும் என்பதால் தகவல்கள் திருடப்படலாம் எனச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

 அமேசான் நிறுவனத்தின் விளக்கம்

அமேசான் நிறுவனத்தின் விளக்கம்

ஆனால் அமேசான் இதை மறுக்கிறது, வாடிக்கையாளர்களின் உள்ளங்கையை ஸ்கேன் செய்யும் தரவுகள் அமேசான் ஒன் கருவிகளில் சேமிப்பது இல்லை , அனைத்து தரவுகளும் கிளவுட்-ல் சேமிக்கப்படுகிறது. இதேபோல் வாடிக்கையாளர்கள் எந்த நேரத்திலும் தரவுகளைத் தாங்களே டெலிட் செய்துகொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

 சியாட்டில் பகுதி

சியாட்டில் பகுதி

அமேசான் முதற்கட்டமாகச் சியாட்டில் பகுதியில் இருக்கும் 5 ஹோல் புட்ஸ் ஸ்டோர்களில் மட்டுமே இந்த அமேசான் ஒன் ஸ்கேன் சேவை பொருத்தப்பட்டு உள்ளது. அடுத்த சில வாரங்களில் இப்பகுதியில் மீதமுள்ள 7 கடைகளிலும் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் மட்டும் மொத்தம் 500 5 ஹோல் புட்ஸ் ஸ்டோர்கள் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon begins rollout of pay-by-palm at Whole Foods in Seattle

Amazon begins rollout of pay-by-palm at Whole Foods in Seattle
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X